காலை or மாலை 2,000 ரூபாய் லாபம் தரக்கூடிய 5 சைடு பிசினஸ்..!

5 Side Business Idea in Tamil

5 Side Business Idea in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. பொதுவாக பலரது மனதில் எண்ணமாக இருப்பது என்னவென்றால். வேலை பார்த்துக்கொண்டே ஏதாவது ஒரு சைடு பிசினஸ் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள், அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் இங்கு நாம் மாலை அல்லது மாலை நேரங்களில் இந்த சைடு பிசினெஸ்ஸை செய்தீர்கள் என்றால் குறைந்தபட்சம் தினமும் நீங்கள் 5,000 ரூபாய் வரை லாபம் பெற முடியும். அது குறித்த தகவலை இப்பொழுது நாம் படித்தறியலாம், அவற்றில் தங்களுக்கு எந்த சைடு பிசினஸ் (5 Side Business Idea in Tamil) பிடித்திருக்கிறதோ அதை செய்து நல்ல வருமானத்தை பெறுங்கள்.

Motivational Posters Selling:

நண்பர்களே நீங்கள் வீட்டில் இருந்தபடியே Motivational Posters sticker தயார் செய்து அமேசானில் விற்பனை செய்யலாம். ஒரு Motivational Posters sticker தயார் செய்வதற்கு குறைந்தபட்சம் 20 ரூபாய் மட்டும் தான் செலவு ஆகும். ஆனால் நீங்கள் இந்த sticker-ஐ  விற்பனை செய்யும்பொழுது 100 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும். ஆக உங்களுக்கு ஒரு ஸ்டிக்கருக்கு 80 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். நீங்கள் 50 ஸ்டிக்கர் தயார் செய்து ஆன்லைனில் விற்பனை செய்வதன் மூலம் உஙக்ளுக்கு 5,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

Packaging and Selling Business:

இரண்டாவதாக நாம் பார்க்க இருப்பது Packaging and Selling Business பற்றி தான். அதாவது நீங்கள் பட்டை, லவங்கம், கிராம்பு, பாதம், ஏலக்காய் இது போன்ற பொருட்களை மொத்தமாக வாங்கி அதனை சிறு சிறு பாக்கெட்டுகளில் பேக்கிங் செய்து சிறு சிறு கடைகளில் விற்பனை செய்யலாம். இதன் மூலமும் உங்களுக்கு ஒரு நல்ல வருமானம் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 தினமும் 3000 லாபம் தரக்கூடிய தந்தூரி டீ தொழில்..!

இட்லி, தோசை மாவு விற்பனை தொழில்:

இப்பொழுது உள்ள காலகட்டத்தில் ஆண், பெண் இருவருமே வேலைக்கு செல்கின்றன. இதன் காரணமாக அவர்களுக்கு இட்லி, தோசை மாவு அரைப்பதற்கு நேரம் இருப்பதில்லை. ஆகவே நீங்கள் மாலை நேரங்களில் இட்லி மாவு, தோசை மாவு செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும். அதாவது ஒரு பாக்கெட்டுக்கு 40 ரூபாய் என்று விலை வைத்து விற்பனை செய்யலாம், நீங்கள் இரு நாளைக்கு 20 பாக்கெட் விற்பனை செய்தால் கூட உங்களுக்கு 800 ரூபாய் லாபம் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்👉👉 பலமடங்கு லாபம் குவிக்கும் தொழில்

பணியாரம்:

பணியாரம் விற்பனை தொழில் என்பது மிகவும் சிறந்த தொழில் என்று சொல்லலாம். பொதுவாக மாலை நேரங்களில் பலருக்கு ஏதாவது தின்பண்டம் தின்பதற்கு விரும்புவார்கள். ஆகவே நீங்கள் பணியார, வடை, பஜ்ஜி, போண்டா போன்ற தின்பண்டங்களை செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற பெறமுடியும்.

லெமன் ஜூஸ் பிசினஸ்:

காலை மற்றும் மதியம் நேரங்களில் இந்த தொழிலை லெமன் ஜூஸ் பிசினஸ் ஆரம்பிப்பதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும். அதாவது காலை நேரங்களில் நடை பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு லெமன் ஜூஸின் நன்மைகள் பற்றி கட்டாயம் தெரிந்திருக்கும். ஆக கிரவுண்ட், பார்க், பீச் போன்ற இடங்களிலும், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள உடன்களிலும் இந்த தொழிலை ஆரம்பிப்பதன் மூலம் தினமும் நீங்கள் மிக எளிதாக சம்பாதிக்கலாம்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil 2022
SHARE