500 ரூபாய் முதலீட்டில் தினமும் 5000 வருமானம் தரும் அருமையான தொழில்..! | 5000 Per Day Income Business in Tamil..!
புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் அனைவருக்கும் அன்பான வணக்கம்.. இன்று நாம் வீட்டில் இருந்து செய்ய கூடிய ஒரு அருமையான தொழில் வாய்ப்பை பற்றி தான் பார்க்க போகிறோம்.. அதாவது வீட்டில் இருந்து வத்தல் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். சரி வாங்க இந்த தொழில் தொடங்க எவ்வளவு முதலீடு தேவைப்படும், என்னென்ன பொருட்கள் தேவைப்படும், இதன் மூலம் எவ்வளவு வருமானம் தேவைப்படும் போன்ற தகவலை நாம் இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
இடம்:
இந்த வத்தல் தயாரிப்பு தொழிலை நாம் வீட்டில் இருந்தபடியே ஆரம்பிக்கலாம். இதற்காக தனியாக இடம் அமைக்க வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் இருக்காது.
மூலப்பொருட்கள்:
குறிப்பாக இதற்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் நாம் என்ன வந்தால் செய்ய போகிறோம் அதனுடைய காய்கள் தான் தேவைப்படும், கொத்தவரங்காய் வத்தல் என்றால் கொத்தவரங்காய், கத்தரிக்காய் வத்தல் என்றால் கத்தரிக்காய், சுண்டல் வத்தல் என்றால் சுண்டல் தேவைப்படும். அதன் பிறகு பேக்கிங் கவர் தேவைப்படும்.
முதலீடு:
இந்த தொழில் தொடங்க குறைந்தபட்சம் 500 ரூபாய் இருந்தால் போதும். வீட்டில் இருந்தபடியே இந்த தொழிலை ஆரம்பித்து விடலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய Top 5 Franchise தொழில்கள்..!
வத்தல் தயாரிப்பது எப்படி?
உதாரணத்திற்கு கொத்தவரங்காய் வத்தல் தயார் செய்கிறோம் என்று வைத்து கொள்வோம். வாங்கிய கொத்தவரங்காயை சுத்தமாக கழுவிக்கொள்ளுங்கள். பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் கொத்தவரங்காய் அதனை வேகவைக்க தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைவேக்காடு வேகவைக்கவும்.
பிறகு தண்ணீரை வடிகட்டி வெயிலில் நன்றாக வைக்கவும், பிறகு மறுநாள் தயிர் நன்றாக கிளறிவிட்டு பிறகு இரண்டு அல்லது மூன்று நாட்கள் வெயிலில் நன்றாக வத்தல் போல் காயவைத்து எடுத்தால் வத்தல் தயாராகிவிடும்.
பிறகு இதனை 50 கிராம் பாக்கெட்டுகளில் பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.
வருமானம்:
ஒரு 50 கிராம் பாக்கெட் வத்தலை 10 ரூபாய் விற்பனை செய்யலாம். இவ்வாறு பேக்கிங் செய்த வத்தலை ஐம்பது ஐம்பது பாக்கெட்டுகளாக பிரித்து ஒவ்வொரு மளிகை கடையில் விற்பனை செய்யலாம். தினமும் ஒரு 10 கடை பிடித்தால் அங்கு விற்பனை செய்தாலே போதும் உங்களுக்கு தினமும் 5,000 வரை வருமானம் கிடைக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
தமிழ்நாட்டில் Franchise Business ஆரம்பிக்க எவ்வளவு முதலீடு தேவைப்படும்?
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |