வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குறைந்த முதலீடு போதும்..! அதிக வருமானம் தரும் ஆரோக்கியா பால் டீலர்ஷிப் பிசினஸ்..!

Updated On: October 24, 2024 11:21 AM
Follow Us:
Arokya Milk Dealership Business in tamil
---Advertisement---
Advertisement

ஆரோக்கியா பால் டீலர் | Arokya Milk Dealership Business in tamil | Arokya Milk Dealership Details in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய வியாபாரம் பகுதியில் ஆரோக்கியா பால் டீலர்ஷிப் எப்படி வைப்பது என்பதை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். பால் என்பது அனைவருக்கும் தேவைப்படுகின்ற அத்தியாவசியமான பொருளாக இருக்கிறது. டீலர்ஷிப் என்பது விநியோகஸ்தருக்கும், வியாபாரிக்கும் இடையேயான ஒரு தொடர்பு ஆகும். வாங்க ஆரோக்கியா பால் டீலர்ஷிப் தொடங்க என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும், முதலீடு போன்ற முழு விவரங்களை விரிவாக படித்தறியலாம்..

Arokya Milk Dealership Details in Tamil:

ஆரோக்கியா பால் டீலர்ஷிப்பிற்கு எப்படி அப்ளை செய்வது? | Arokya Milk Dealership Apply Online:

இந்த ஆரோக்கிய பால் டீலர்ஷிப் பிஸினஸுக்கு நாம் ஆன்லைன் மூலமாகவும் அப்ளை செய்யலாம் அல்லது ஆஃப்லைன் மூலமாகவும் அப்ளை செய்யலாம்.

ஆன்லைன் மூலம் அப்ளை செய்பவர்களுக்கு: WWW.HAP.IN என்ற இணையத்தளம் வாயிலாக அப்ளை செய்யலாம்.

ஆஃப்லைன் மூலம் அப்ளை செய்பவர்களுக்கு: நீங்கள் சென்னை மாவட்டமாக இருந்தால் சென்னையில் காரப்பாக்கம் என்ற இடத்தில் டீலர்ஷிப் இடம் அமைந்துள்ளது, அங்கே அப்ளை செய்யலாம்.

தேவையான ஆவணங்கள்:

இந்த டீலர்ஷிப் பிசினஸ் தொடங்குவதற்கு MSME மற்றும் FSSAI என்ற சான்றிதழ் பெற வேண்டும்.

தொழில் தொடங்க முதலீடு:

இந்த ஆரோக்கியா பால் டீலர்ஷிப் பிசினஸ் ஆரம்பிப்பதற்கு எவ்வளவு முதலீடு நாம் போடவேண்டும் என்றால் சொந்தமாக தங்களிடம் இடம் இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை.

அதுவே வாடகைக்கு இடம் ஈடுபவர்களாக இருந்தால் இட தரகர்களுக்கு வாடகை தொகை செலுத்துமாறு இருக்கும்.

தேவைப்படும் பொருள்:

  1. பால், தயிர்களை வைப்பதற்கு Cooler/ Freezer தேவைப்படும்.
  2. பொருள்களை வாங்கி எடுத்து வருவதற்கு கண்டிப்பாக தங்களிடம் TATA ACE இருக்க வேண்டும். இரு சக்கர வாகனத்தில் அதிக பொருள்களை எடுத்து வர முடியாது என்பதால்.
  3. ஆரோக்கியா பால் என்ற பிராண்ட் பெயர் உங்களுக்கு கொடுப்பதால் பிரான்சீஸ் நிறுவனத்திற்கு நீங்கள் முதலீட்டு தொகையாக 2 லட்சம் செலுத்த வேண்டும்.
  4. இந்த 2 லட்சம் தொகையினை கடையின் டிசைன்களுக்கு, மற்றும் பிராண்ட் பெயரிற்காக எடுத்துக்கொள்வார்கள்.

வேலையாட்கள்:

  • இந்த தொழிலை தொடங்குவதற்கு கண்டிப்பாக கடைக்கு வேலை பார்ப்பதற்கு 1 ஆட்கள் தேவைப்படும்.
  • பாலை எடுத்து வருவதற்கு தங்களிடம் ஒரு டிரைவர் தேவைப்படும்.
  • பணத்தை வசூல் செய்வதற்கு நீங்களும் செல்லலாம் அல்லது அதற்கும் ஒரு வேலையாட்களை சேர்த்துக்கொள்ளலாம். கட்டாயம் இல்லை.
டீலர்ஷிப் எடுப்பது எப்படி

பால் விநியோகிக்கும் நேரம்:

  • பால் வாங்குவதற்கு அதிகாலை 04 மணி அளவில் அதாவது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நேரத்தில் பால் விநியோகம் செய்வார்கள். சென்னை போன்ற இடத்தில் 4 மணிக்கு விநியோகம் செய்வார்கள். நாம் அப்போது சென்று வாங்க வேண்டும்.
  • நமக்கு எத்தனை பாக்கெட் பால் தேவைப்படுகிறதோ பால் விநியோகம் செய்யப்படும் நபர்களுக்கு முதல் நாளே நாம் தெரியப்படுத்த வேண்டும்.
  • பாலிற்கான தொகையினை மாலை நேரத்திலே நாம் அக்கவுண்டில் செலுத்திவிட வேண்டும். அப்போதுதான் மறுநாள் காலையில் நீங்கள் பாலை பெற்றுக்கொள்ள முடியும்.
  • ஆவின் பால் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்கு அவர்களே நேரடியாக பால் விநியோகம் செய்வார்கள். ஆனால் ஆரோக்கியா பால் நிறுவனத்தில் அந்த மாதிரி ஆப்சன் இல்லை.
  • ஆரோக்கியா பால் விநியோகமானது இரவு நேரத்தில் இருந்தே ஆரம்பித்துவிடுவார்கள். நாம் 3 மணிக்கே சென்று வாங்கினால் தான் நமது ஏரியாக்களில் 7 மணிக்குள் பால் சப்ளை செய்ய முடியும்.

பணம் வாங்கப்படும் நேரம்:

விற்ற பால்களின் பண தொகையினை நாம் எப்போது கலெக்ட் செய்ய முடியும் என்றால் பெரும்பாலான கடைகளில் மாலை நேரத்தில் தான் கொடுப்பார்கள்.

ஏனென்றால் காலை நேரத்தில் பால் விற்று தொகையினை மாலை நேரத்தில் தான் செலுத்துவார்கள்.

கிடைக்கும் லாபம்:

  • 1 பால் பாக்கெட்டிற்கு 01.50 பைசா கமிஷன் கிடைக்கும்.
  • தயிர், பன்னீர் போன்ற பொருள்களை விற்பனை செய்தால் ரூ. 2 முதல் 4 ரூபாய் வரையிலும் கமிஷன் கிடைக்கும்.
  • பட்டர் போன்றவற்றிற்கு ரூ. 3 கமிஷன் கிடைக்கிறது.

காலாவதி தேதி:

  • எந்த ஒரு பொருளுக்குமே கண்டிப்பாக Expiry Date இல்லாமல் இருக்காது. அதிலும் அனைவருக்கும் அத்தியாவசியமான பொருளாக இருப்பது பால். அதற்கு காலாவதி தேதி இல்லாமல் இருக்குமா?
  • பாலிற்கும் காலாவதி தேதி உள்ளது, எத்தனை நாள் என்றால் 02 நாட்கள் மட்டும் தான். அதற்குள் வாங்கிய பால் அத்தனையும் சேல்ஸ் செய்ய வேண்டும்.
  • பன்னீர், தயிர் போன்ற பொருள்களுக்கு 20 நாட்கள் வரை காலாவதி தேதி இருக்கிறது.
  • Butter-க்கு 3 மாதங்கள் வரை காலாவதி தேதி இருக்கிறது.
  • காலாவதி தேதி முடிவதற்குள் நீங்கள் தான் பால் மற்றும் பிரா பொருள்களை விற்க வேண்டும். காலாவதி தேதி ஆன பொருளை ஆரோக்கியா நிறுவனத்திற்கு நீங்கள் திருப்பிக்கொடுக்க முடியாது.

வருமானம்:

  • சராசரியாக ஒரு நாளைக்கு 700 முதல் 1000 பாக்கெட் வரை விற்பனை செய்தால் ஒரு மாதத்திற்கு ரூ. 36,000 – 60,000/- வரை நிச்சயம் லாபம் கிடைக்கும்.
  • இந்த தொழிலானது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும்தான் செய்யக்கூடிய தொழில் இல்லை. பால் எப்போதும் அத்தியாவசிய பொருளாக இருப்பதால் அனைத்து காலத்திற்கும் ஏற்ற தொழில்ங்க.. கண்டிப்பாக நீங்களும் தொடங்கி லட்சாதிபதியாக எங்களுடைய வாழ்த்துக்கள்..
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

cotton candy business ideas in tamil

இந்த தொழிலுக்கு பெரிய Investment இல்ல தான் ஆனா அதிக வருமானம் பெறலாம்..!

Photo Studio Business Plan in tamil

ஒரு டேக்ல ஓஹோன்னு சம்பாதிக்க இந்த தொழிலை செய்யுங்க..

பள்ளிக்கூடத்தில் பயன்படுத்திய பொருட்களை வைத்து வியாபாரம் செய்யலாம் அதுவும் 1000 ரூபாய் முதலீட்டில்..! | Paper Bag Making Business in Tamil

tailoring business ideas in tamil 

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் கைத்தொழில்

இந்த கடை மட்டும் வச்சிப்பாருங்க வியாபாரம் சும்மா தாறுமாறா போகும்..!

விவசாயம் சார்ந்த 10 அருமையான சுய தொழில்கள்..!

Paper bag Making Business at Home in Tamil

வீட்டில் இருந்து கொண்டே சிறு தொழில் வியாபாரம் செய்யலாம் வாங்க…!

Homemade Business Ideas

வீட்டில் இருந்து செய்யும் ஆன்லைன் தொழில்கள் | Homemade Business Ideas in Tamil

Dried Turkey Berry Making Business in Tamil

தினமும் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..! அப்படி என்ன தொழிலை இருக்கும்..