தமிழ்நாட்டில் யாரும் செய்யாத! பத்தே நாளில் லட்சக்கணக்கில் வருமானம் தரும் அருமையான தொழில்..!

Advertisement

யாரும் செய்யாத தொழில் – Bamboo Salt Business in Tamil | How to Start Bamboo Salt Business in Tamil

புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். நீங்கள் கிராமப்புறங்களில் இருந்து ஏதாவது அதிக லாபம் தரக்கூடிய தொழிலை துவங்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் கிராமத்தில் இப்பொழுது சொல்ல இருக்கும் தொழிலை நீங்கள் செய்தீர்கள் என்றால் நிச்சயம் 100 சத்தவிதம் லாபத்தை பெற முடியும். அப்படி என்ன தொழில் என்று யோசிக்கிறீர்களா.. அது ஒன்று இல்லை bamboo salt தயாரிப்பு தொழிலை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். bamboo salt  அப்படின்னா.. ஒன்றும் இல்லைங்க மூங்கில் உப்புதான்.இந்த தொழிலுக்கு தேவைப்படும் அனைத்து மூலப்பொருட்களை கிராமபுரத்திலேயே கிடைக்கும். இந்த தொழில் எப்படி தொடங்குவது?, இதற்கு தேவைப்படும் மூலதனம் என்ன?, எவ்வளவு முதலீடு தேவைப்படும்? மற்றும் இதன் மூலம் நமக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் போன்ற தகவல்களை இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

Bamboo Salt Business Ideas Details in Tamil:

மூங்கில் உப்பு தயார் செய்யும் முறை:

இந்த மூங்கில் உப்பை தயார் செய்வது என்பது கொஞ்சம் அதிக பணிகள் இருக்கும்.

அதாவது சாதாரண உப்பை மூங்கிலில் அடைத்து  அதிக அளவிலான வெப்பத்தில் சூடேற்ற வேண்டும். இவ்வாறு சூடேற்றும்போது 800 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலையில் சூடுபடுத்த வேண்டும்.

ஆகவே மேல் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போல் மூங்கிலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கில். அதில் சாதாரண உப்பை இடைவெளி இல்லாமல் நமக்கு நிரப்பி. பின்பு வாழையிலையை சிறிதாக நறுக்குள் மூங்கிலுள் வைக்கவும். பின் களிமண் அல்லது செம்மண்ணாலை கெட்டியாக பிசைந்து மூங்கிலை நன்றாக அடைக்கவும்.

அதன் பின் மேல் படத்தில் உள்ளது போல் ஒரு அடுப்பை செட் செத்து கொள்ளுங்கள். அந்த அடுப்புக்குள் மூங்கிலில் அடைத்து வைத்துள்ள உப்புக்களை வைத்து நன்றாக எரித்துவிட வேண்டும்.

சாதாரண உப்பை மூங்கில் தண்டில் அடைத்து, அதை சூடாக்குவதற்காகவே உருவாக்கப்பட்ட பிரத்யே உலையில் கிட்டத்த 9 முறைகளுக்கும் மேல் அதிக வெப்பநிலையில் சூடேற்றப்படுகிறது.

ஒவ்வொரு முறையும் 800 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலையில் மூங்கில் உப்பு உருகி மெருகேறத் தொடங்குகிறது. ஒன்பதாவது முறை மட்டும் 1,000 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை வைக்கப்படுகிறது. இந்த ஒவ்வொரு முறையும் மூங்கிலை மாற்ற வேண்டி இருக்கும். அதேபோல் அவற்றில் உள்ள உப்பு நன்கு இறுக்கி இருக்கும் அதனை இடித்து சலித்து அடுத்த முறைக்கு சூடுபடுத்த வேண்டும்.

இவ்வாறு ஒன்பது முறை சூடுபடுத்திய மூங்கில் உப்பை இறுதியாக பார்க்கும் பொழுது அடர்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இதனை இடித்து சலித்து பேகிங்க் செய்து விற்பனைக்கு அனுப்பலாம்.

இந்த லிங்கையும் கிளிக் செய்யுங்கள்👉 மாலை நேரத்தில் தினசரி ரூ.3000/- வருமானம் தரும் தொழில்

மூங்கில் உப்பு பயன்கள்:

இவ்வாறு மூங்கில் தண்டில் உப்பை அடைத்து ஒன்பது முறை மெருகூற்றுவதினால் மூங்கிலில் உள்ள அனைத்து சத்துக்களும் உப்பில் இறங்குகிறது.

மூங்கிலில் உள்ள சத்துக்கள் இறங்கிய இந்த உப்பை நாம் உணவில் 5 கிராம் அளவு எடுத்துக்கொள்வதினால் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வளிக்கிறது.

இவ்வாறு தயார் செய்யப்பட்ட மூங்கில் உப்பில் இரும்புச் சத்து, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்றவை உடல் ஆரோக்கியத்தில் முக்கியமான பங்காற்றுகின்றன. குறிப்பாக இந்த மூங்கில் உப்பை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், புற்றுநோய் பாதிப்பைத் தடுக்கலாம், பற்கள் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் இவை செரிமானத்துக்குப் பெரிய அளவில் உதவி செய்யும் என்கின்றன மருத்துவத் துறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வு முடிவுகள்.

இடம்:

நீங்கள் இந்த தொழிலை சொத்தமாக செய்ய விரும்புகிறீர்கள் என்றால் 500-க்கு, 500 சதுர அடி கொண்ட இடம் இருந்தால் போதுமானதாக இருக்கும்.

முதலீடு:

குறைந்தபட்சம் முதலீடு இருந்தால் போதுமானது இந்த தொழிலை மிக எளிதாக ஆரம்பித்துவிடலாம். அதாவது ரூ.30 ஆயிரம் இருந்தால் மோதும் இந்த தொழிலை மிக எளிதாக ஆரம்பித்துவிடலாம்.

மூலப்பொருட்கள்:

  • உப்பு,
  • மூங்கில் தண்டு,
  • அடுப்பு,
  • செம்மண் அல்லது களிமண்,
  • தயார் செய்த உப்பை விற்பனை செய்ய பேக்கிங் கவர்

இந்த லிங்கையும் கிளிக் செய்யுங்கள்👉 ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம்

வருமானம்:

உப்பு 250 கிராமின் விலை கிட்டத்தட்ட ரூ.5,000/- விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே நீங்கள் மாதத்திற்கு குறைத்து 2 கிலோ விற்பனை செய்தீர்கள் என்றாலே போதும். 60,000/- வரை சம்பாதிக்கலாம். இந்த தொழிலை பெரிய அளவில் செய்யப்போறீங்க அப்படின்னா தனியாக செய்துவிட முடியாது ஆகவே. குறைந்தது இரண்டு அல்லது ஐந்து வேலையாட்களை வைத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கும். அல்லது குறைந்த அளவில் செய்யப்போறீங்க அப்படின்னா தனியாகவே செய்து லாபம் பெறலாம். அதேமாதிரி ஆன்லைனில் கூட விற்பனை செய்யலாம்.

தேவைப்படும் சான்றிதழ்:

இது உணவு சார்ந்த தொழில் என்பதால் கட்டாயம் FSSAI சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். இந்த ஒரு சான்றிதழ் பெற்றாலே போதுமானது.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement