ஒரே இயந்திரத்தில் 5 வகை ஸ்நாக்ஸ் தொழில்..! chips business ideas..!
Chips business ideas:- நண்பர்களுக்கு வணக்கம் இன்று நாம் உணவு சம்மந்தமாக என்ன தொழில் செய்யலாம் என்பதை பற்றி இங்கு நாம் பார்க்கலாம். அதாவது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்நாக்சினை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. எனவே இதன் தேவை மக்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. சுயமாக தொழில் துவங்க நினைப்பவர்கள் வித விதமான ஸ்நாக்ஸ செய்து விற்பனை செய்தால் இதன் மூலம் தினமும் லாபம் பெறலாம். சரி இப்பதிவில் ஒரு இயந்திரத்தில் ஐந்து வகை ஸ்நாக்ஸ் தயார் செய்து விற்பனை மூலம் எப்படி லாபம் பெறலாம் என்பதை பற்றி இங்கு நாம் பார்க்கலாம் வாங்க.
இதையும் படியுங்கள்–>👉 சிறு தொழில் பட்டியல் |
Chips business ideas
இடவசதி:
இந்த ஸ்நாக்ஸ் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை இயந்திரத்தை வாங்கி வீட்டில் இருந்தபடியே சிப்ஸ் தயார் செய்து விற்பனை செய்யலாம். எனவே வீட்டில் சிறிய அறை இருந்தால் போதுமானது. அல்லது ஏதேனும் சிறிய கடை வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று விரும்பினால் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் 10க்கு 10 அளவு கொண்ட சிறிய அறை இருந்தால் போதும்.
Chips Business Tamil – மூலப்பொருட்கள்:
சிப்ஸ் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை பல விதமான சிப்ஸினை தயார் செய்து விற்பனை செய்யலாம், எனவே உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, நேத்திரங்காய் போன்றவற்றில் சிப்ஸ் தயார் செய்யலாம், மேலும் சில மசாலா பொருட்கள், எண்ணெய், பேக்கிங் கவர், போன்றவை மூலப்பொருட்களாக தேவைப்படும்.
தேவைப்படும் இயந்திரம்:
இந்த chips cutting machine இயந்திரத்தில் ஐந்து விதமான சிப்ஸ் கட் செய்யலாம், நேத்திரம் சிப்ஸ், குச்சி சிப்ஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ், மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் என்று ஐந்து விதமான சிப்ஸினை டிசைனாக கட் செய்யலாம்.
மேலும் இது போன்ற பலவிதமான chips cutting machine இயந்திரங்கள் அமேசான், Flipkart (பிளிப்கார்ட்) போன்ற ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு ஆர்டர் செய்தும் இயந்திரத்தை பெற்று கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்–>👉 லாபத்தை அள்ளித் தரும் மிட்டாய் தயாரிப்பு தொழில் !!! |
Chips business ideas – சிப்ஸ் தயாரிப்பு முறை:
கட் செய்த சிப்ஸினை சிறிது நேரம் உலர்த்தி கொள்ளுங்கள்.
பின் அடுப்பில் ஒரு பெரிய வாணளியை வைத்து அவற்றில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடேற்றவும். பின் கட் செய்த சிப்ஸினை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பின் சிப்ஸின் மீது உப்பு மற்றும் மசாலா பொருட்களை தூவி பேக்கிங் செய்தால் சிப்ஸ் விற்பனைக்கு தயார்.
முதலீடு:
இயந்திரம் வாங்க ஆகும் செலவு ரூ.40,000/- இதர செலவுகள் என்று குறைந்த பட்சம் 50 ஆயிரம் தேவைப்படும்.
சந்தை வாய்ப்பு:
தாங்கள் தயார் செய்த சிப்ஸினை சிறிய மல்லிகை கடை, தியேட்டர், கல்லூரிகளில் உள்ள கேண்டீன், பேக்கரி கடைகளுக்கு நேராக சென்று அவர்களிடம் ஆர்டர் பெற்று தாங்கள் தயார் செய்த சிப்ஸினை விற்பனை செய்யலாம்.
5 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் என்று தனித்தனி இரகங்களில் சிப்ஸ் பாக்கெட்டினை விற்பனை செய்யலாம். இவற்றில் 5 மற்றும் 10 ரூபாய் சிப்ஸ் பாக்கெட்டுகள் மக்களிடம் அதிகப்படியாக விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படியுங்கள்–>👉 நூடுல்ஸ் தயாரிப்பு முறை !!! |
Chips business ideas – வருமானம்:
நாள் ஒன்றுக்கு 5 ரூபாய் பாக்கெட்டுகள் 100-ம், 10 ரூபாய் பாக்கெட்டுகள் 50-ம், 20 ரூபாய் பாக்கெட்டுகளில் 25-ம் விற்பனை செய்தால் 1500 ரூபாய் வருமானமாக கிடைக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |