தொழில் தொடங்கினால் போதும் லாபம் நம்மை தேடி வரும்! அருமையானது சுயதொழில்..!

 Coconut Shell Powder Business in Tamil

 Coconut Shell Powder Business in Tamil

நண்பர்களே வணக்கம் நல்ல முதலீட்டில் தினமும் வருமானம் தரக்கூடிய பிசினஸ் ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் என்ன தொழில் செய்வது என்பதில் நிறைய குழப்பம் ஏற்படுகிறதா.. அப்படி என்றால் பொதுநலம்.காம் பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நமது இணையதளத்தில் பலவகையான தொழில் சார்ந்த யோசனைகளை வழங்கி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் குறைந்த முதலீட்டில் தினமும் வருமானம் தரக்கூடிய ஒரு அருமையான தொழில் யோசனை பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது Coconut Shell Powder தயார் செய்து விற்பனை செய்து அதன் மூலம் தினமும் வருமானம் பெற முடியும் அது குறித்த தகவல்களை இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.

இடம்:

இந்த Coconut Shell Powder தயாரிப்பு தொழில் பொறுத்தவரை கண்டிப்பாக 300 சதுர அடி கொண்ட ஒரு இடம் வேண்டும். அது குடவுனாக இருந்தால் மிகவும் சிறந்தது.

இயந்திரம்:

coconut shell powder making machine

 

அடுத்ததாக இந்த தொழிலில் அவசியம் மேல் படத்தில் காட்டப்பட்டுள்ள coconut shell powder making machine தேவைப்படும். இந்த மிஷினை நீங்கள் ஆன்லைனில் கூட ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடியும்.

மூலப்பொருட்கள்:

இந்த தொழில் பொறுத்தவரை மிக முக்கியமான முலை பொருள் கொட்டாங்குச்சி தான். கொட்டாங்குச்சியை நேரடியாக மரச்செக்கு எண்ணெய் தயார் செய்பவர்களிடம் சென்று பெற்றுக்கொள்ளலாம். அல்லது இந்தியா மார்ட், எக்ஸ்போர்ட் இந்தியா போன்ற ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் இதற்காக நிறைய செல்லர்கள் இருக்கின்றன. ஆகவே அவர்களை தொடர்பு கொள்வதன் மூலம் கொட்டாங்குச்சிகளை பெற முடியும்.

இதையும் படியுங்கள் 👉 பெண்கள் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க சிறந்த தொழில்கள்

முதலீடு:

coconut shell powder தயாரிப்பு தொழில் பொறுத்தவரை கொஞ்சம் முதலீடு அதிகமானதாக இருக்கும்.

  • இடத்திற்கு அட்வான்ஸ் – 50,000/-
  • இதர செலவுகளுக்கு – 30,000/-
  • இயந்திரம் விலை – 2,00,000/-
  • மூலப்பொருட்கள் 10 டன் – 1,00,000/-
  • மொத்தமாக இந்த தொழிலை பொறுத்தவரை 4,80,000/- முதலீடாக தேவைப்படும்.

விற்பனை விவரம்:

இந்தியா மார்ட், எக்ஸ்போர்ட் இந்தியா போன்ற வலைத்தளங்களில் ஒரு கிலோ coconut shell powder ரூபாய் 20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே நீங்கள் ஆரம்பத்தில் 17.50 ரூபாய்க்கு விற்பனை செய்தீர்கள் என்றால் வாடிக்கையாளர்கள் அதிகளவு பிடிக்க முடியும்.

ஆகவே 10000 X 17.50 = 175000 ரூபாய்க்கு வருமானம் கிடைக்கும்.

செலவுகள்:

  • மூல பொருட்களுக்கு – ரூ.1,00,000/-
  • இடம் வாடகைக்கு – ரூ.10,000/-
  • வேலை ஆள் ஒரு நபருக்கு சம்பளம் – ரூ.8,000/-
  • மின்சாரம் மற்றும் இதர செலவுகளுக்கு – ரூ.5,000/-

ஆகவே மொத்தமாக செலவு என்று பார்க்கும் பொழுது 1,25,000/- ரூபாய் செலவு என்று வைத்துக்கொள்வோம். வருமானமாக உங்களுக்கு 50,000/- ரூபாய் கிடைக்கும்.

Coconut Shell Powder Uses in Tamil:-

பொதுவாக இந்த coconut shell powder-ஐ பயன்படுத்தி பல வகையான அழகு சாதன பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. மேலும் கொசுவர்த்தி சுருள், ஊதுபத்தி, சம்பூரணி போன்ற பலவகையான பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. ஆகவே நீங்கள் coconut shell powder செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.

இதையும் படியுங்கள் 👉 ரூ.25,000/- முதலீடு ரூ.75,000/- வருமானம் தரும் சிறந்த ஐந்து தொழில்கள்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022