மருத்துவ காளான் வளர்ப்பு தொழில்
Cordyceps Militaris Mushroom Business in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் இன்று நாம் ஒரு அருமையான தொழில் வாய்ப்பை பற்றி தான் பார்க்க போகிறோம்.. அதாவது காளான் வளர்ப்பு தொழில் பற்றித்தான். காளான் வளர்ப்பு தொழில் பற்றி அனைவருக்குமே தெரிந்திருக்கும். காளானில் மூன்று வகைகள் உள்ளது. அவை சாப்பிடும் காளான், மருத்துவ காளான், விஷ காளான் என்று மூன்று வகைகள் உள்ளது. எல்லாரையும் போல் நாம் சாப்பிடும் காளானை வளர்ப்பதை பற்றி பார்க்க போவது கிடையாது. இரண்டாவது ரகமான மருத்துவ காளான் வளர்ப்பை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
சாதாரண காளான்களைவிடவும் பல மடங்கு அதிகமாக விலைபோகிறது இந்த கார்டிசெப்ஸ் காளான். இதனுடைய மருத்துவ குணங்கள்தான் அதற்குக் காரணம். இதன் காளான் வளர்ப்பை ஆக இந்த காளானை நாம் வீட்டிலேயே வளர்த்து நல்ல வருமானத்தை பெற முடியும். உங்களால் 2 லட்சம் முதலீடு செய்ய முடியும் என்றால், இந்த தொழிலை தாராளமாக வீட்டில் இருந்து செய்யலாம். சரி இந்த தொழில் பற்றி சில தகவல்களை இப்பொழுது பார்க்கலாம் வாங்க.
இடம்:
உங்கள் வீட்டில் 10-க்கு 10 அளவு உள்ள ஒரு இடம் இருந்தாலே போதும் வீட்டில் இருந்தபடியே 60 நாட்களுக்கு ஒரு முறை 4 லட்சம் வரை சம்பரிக்கலாம்.
எப்படி மருத்துவ காளான் உற்பத்தி செய்வது?
பொதுவாக இந்த காளான் ஈரோப் நாட்டின் தட்ப வெப்ப நிலையில் தான் வளர கூடியது. ஆக நாம் நமது நாட்டில் வளர்க்க முடியாது என்று நினைத்துவிடாதீர்கள் சரியான Temperature-க்கு காளான் தயார் செய்யும் இடத்தை வைத்திருந்தாலே நமது நாட்டிலேயே இந்த மருத்துவ காளானை உற்பத்தி செய்து விற்பனை செய்து விடலாம். இந்த மருத்துவ காளானை எப்படி உற்பத்தி செய்வதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆக அங்கு சென்று பயிற்சி பெற்று இந்த காளான் வளர்ப்பை உங்கள் வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 10 × 10 இடம் இருந்தாலே போதும், இந்த தொழிலை செய்தால் வாரம் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
மூலப்பொருட்கள்:
- ஓட்ஸ்
- சிவப்பு அரிசி
- Polypropylene Box
- Nutrient Liquid Oil
- Cordyceps Militaris Seeds ஆகிய பொருட்கள் தேவைப்படும்.
இதர பொருட்கள்:
- இரும்பு ராக்கை, Sterilizer Machine, Humidifier இவை எல்லாம் தேவைப்படும்.
உற்பத்தி முறை:
உற்பத்தி பொறுத்தவரை நீங்கள் தேர்வு செய்யும் இடம் மிகவும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். ஆக குளிர்ச்சியாக இருக்க Humidifier, Air Conditioner ஆகியவற்றை கொண்டு முறையாக செட் செய்து கொள்ளுங்கள்.
இந்த பிசினஸின் கான்சப்ட் என்ன அப்படின்னா Polypropylene Box-யில் ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசி, Nutrient Liquid Oil மற்றும் மருத்துவ காளான் 12 மில்லி ஆகியவற்றை சேர்த்து Sterilizer Machine-யில் 45 நிமிடங்கள் வரை Sterilizer செய்ய வேண்டும். பிறகு அந்த பாக்சில் இரண்டு ஓட்டைகள் மட்டும் இடவேண்டும்.
பிறகு 1 முதல் 15 நாட்கள் வரை கருப்பு நிற கவரை கொண்டு அதனை முடிவிடுகிறார்கள். அப்பொழுது Humidifier இயந்திரத்தை வைத்து அந்த இடத்தை குளிச்சியாக வைத்துக்கொள்கிறார்கள். அதேபோல் Air Conditioner-யும் செட் செய்துவிடுகின்றன.
15 நாட்களுக்கு பிறகு அந்த அறையில் LED லைடை வைத்துவிட வேண்டும். இந்த லைட் வெளிச்சமானது 60 நாட்கள் வரை இருக்க வேண்டும். பிறகு அதனை காயவைத்து விற்பனை செய்யலாம். குறிப்பாக 60 நாட்களுக்கு பிறகு தான் அந்த ஒவ்வொரு பாக்ஸையும் திறந்தே பார்க்க வேண்டும். இந்த 60 நாட்களும் இந்த இடத்தின் Temperature 15 முதல் 20 டிகிரியில் இருக்க வேண்டும். குறிப்ப இந்த இடத்திற்கு Anti Bacterial Paint-ஐ பயன்படுத்தலாம்.
வருமானம்:
ஒரு பத்துக்கு பத்து இடத்தில் 15 Rack வைக்கலாம். இந்த 15 Rack-யிலும் 2000 Box வைக்கலாம்.
ஆக ஒரு பாக்சில் 70 கிராம் மருத்துவ காளான் கிடைக்கும். மொத்தமாக நமக்கு 60 கிலோ மருத்துவ காளான் கிடைக்கும். இந்த நாம் Dry Form செய்யும் போது நமக்கு 5 கிலோ மருத்துவ காளான் தான் கிடைக்கும்.
இருப்பினும் இந்த மருத்துவ காளான் ஒரு கிலோவே 80,000/- விற்பனை செய்யப்படுகிறது. ஆக 5 கிலோ மருத்துவ காளானுக்கு நமக்கு 4,00,000/- வரை வருமானை கிடைக்கும்.
பயன்கள்:
இந்த காளான் சாப்பிடுவதால் புற்று நோய் செல்கள் அளிக்கப்படுகிறது, ஹார்மோன் பேலன்சுக்கு பயன்படுகிறது, சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் அளவை சரியாக வைத்துக்கொள்ள உதவுகிறது இது போன்று பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு இந்த காளான் பயன்படுகிறது என்பதால். மருத்துவ துறைகளுக்கு இந்த காளான் அதிகளவு பயன்படுகிறது. ஆக நீங்கள் வீட்டிலேயே இந்த தொழிலை செய்தாலே 60 நாட்களிலேயே 4 லட்சம் வரை வருமானம் பெற முடியும்.
முதலீடு:
இந்த மருதுவும் காளான் தொழில் தொடங்கள் பண்டிப்பாக உங்களுக்கு 2,50,000/- ரூபாய் வரை தேவைப்படும்.. இவ்வளவு முதலீடு என்று அச்சம் கொள்ள வேண்டும். நீங்கள் போட்ட முதலீட்டை நீங்கள் வெறும் இரண்டே மாதத்தில் பெற்று முடியும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |