என்றும் அழியாத பிசினஸ் தினமும் 5000 ரூபாய் லாபம் வரும்..!

Advertisement

Low Cost Business Ideas in Tamil

புதியதாக தொழில் தொடங்க யாருக்குத்தான் ஆசை இருக்காது சொல்லுங்க.. எல்லாருகேமே ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்று கண்டிப்பாக ஆசை இருக்கும். இருப்பினும் தொழில் தொடங்க சரியான ஆலோசனை இல்லாமல் இருப்பார்கள். அப்படி பட்டவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது இன்றைய பதிவில் குறைந்த முதலீட்டில் தினமும் வருமானத்தை பெற்று தரக்கூடிய ஒரு அருமையான பிசினஸ் ஐடியாவை பற்றித்தான் பார்க்க போகிறோம். ஆகவே பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய முட்டை வியாபரம்:

என்னங்க பிரண்ட்ஸ் அருமையான பிசினஸ் அப்படின்னு சொல்லிட்டு முட்டை வியாபாரத்தை பற்றி சொல்றன்னு நெனைக்கிறிங்களா?.. உண்மையாக முட்டை வியாபரம் ஒரு அருமையான வியாபாரம் தான்.. குறைந்த முதலீட்டிலேயே செய்து விடலாம். ரிஸ்க் அதிகம் இருக்காது. எப்படி சொல்றன்னு கேக்குறீங்களா?

ஆமாங்க பிரண்ட்ஸ் பொதுவாக அன்றாட வாழ்க்கையில் தினமும் ஒரு முட்டையை உணவில் சேர்த்து கொள்கின்றார்கள், அதேபோல பேக்கரி கடை, ஹோட்டல், அழகு சத்தான பொருட்கள் தயார் சேர்வதற்கு என்று பலவகையில் முட்டை தேவைப்படும் ஒரு பொருளாக மாறிவிட்டது. அதிலும்ஒயிட் லாக் முட்டை, நாட்டுக்கோழி முட்டை என்று இரண்டு வகைகள் உள்ளது. இதில் நட்டு கோழி முட்டைக்கு அதிக விலை. ஆகவே நீங்கள் முட்டை விற்பனை தொழில் செய்தீர்கள் என்றால் கண்டிப்பாக தினமும் நல்ல வருமானத்தை பெறமுடியும்.

எப்படி ஆரம்பிக்கலாம்? – Egg Business in Tamil

முட்டை கிடைக்கும் இடம்:

முட்டை மொத்தமாக விற்பனை செய்யும் இடத்தில் வாங்கிக்கொள்ளலாம். குறிப்பாக நாமக்கல்லில் முட்டை மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. அங்கு சென்று நீங்கள் மொத்தமாக முட்டைகளை வாங்கி கொள்ளலாம். அல்லது உங்கள் ஊரில் கோழி பண்ணை இருக்கிறது என்றால் அங்கு சென்று கூட மொத்தமாக முட்டைகளை வாங்கி கொள்ளலாம்.

உதாரணத்திற்கு ஒயிட் லாக் முட்டை 1000 வாங்குகிறீகள் என்றால். அதனை நீங்கள் கடைகளில் 5 முதல் 6 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.

அதுவே நாட்டுக்கோழி முறை என்றால் ஒரு முட்டையின் விலையே 8 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள் 👉 மாதம் 20,000 வரை சம்பாதிக்கும் அருமையான தொழில்

எங்கு விற்பனை செய்யலாம்?

நீங்கள் வாங்கிய முட்டையை ஹோட்டல், மல்லிகை கடை, பேக்கரி, பாஸ்டு புட் கடை போன்றவற்றில் ஆர்டர் பெற்று விற்பனை செய்யலாம். இவர்கள் அனைவருமே முட்டை அதிகளவு தேவைப்படும். ஆகவே விரைகளிடம் ஆர்டர் பெற்றாலே போதும் ஓரளவு நீங்கள் வாங்கும் முட்டைகளை எளிதாக விற்பனை செய்துவிடலாம்.

உதாரணம்:

பானையில் நீங்கள் 1000 பிராய்லர் முட்டைகளை வாங்குகிறீகள் என்றால். அவர்களிடம் நீங்கள் 3 ரூபாய் முதல் 3.5 ரூபாய் வரை நீங்கள் மொத்தமாக வாங்கலாம்.

நாம் இந்த முட்டையை 4 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். இதன் மூலம் ஒரு முட்டையில் இருந்து நமது 2 ரூபாய் லாபம் கிடைக்கும்.

ஒரு நாளைக்கு நாம் 1000 முதல் 1500 முட்டைகள் வரை விற்பனை செய்தோம் என்றால் ஒரு நாளைக்கு 3,000 ரூபாய் வரை லாபம் பார்க்கமுடியும்.

அதுவே ஒரு மாதத்திற்கு 90,000/- வரை நமக்கு லாபம் கிடைக்கும்.

இதையும் படியுங்கள் 👉 குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் கைத்தொழில்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement