வீட்டில் இருந்து என்ன தொழில் செய்யலாம்?
Enna Tholil Seiyalam – இன்றைய காலத்தில் வீட்டில் உள்ள அனைவருமே வேலை பார்த்தால் மட்டுமே அந்த குடுப்பத்தை கடன் இல்லாமல் ஓரளவு நிம்மதியாக ஓட்ட முடியும் என்ற நிலைமை வந்துவிட்டது. ஆக வீட்டில் இருக்கும் பெண்களும் வேலைக்கு செல்ல விரும்புகின்றன. சில பெண்களுக்கு வெளியே வந்து வேலை செய்ய நேரம் இருப்பதில் ஆக வீட்டில் இருந்தபடி ஏதாவது வருமானம் தரக்கூடிய தொழிலை ஆரம்பித்தாள் மிகவும் நன்றாக இருக்குமே என்று யோசிப்பதும் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு நன்கு சமையல் செய்ய தெரியும் என்றால் உங்களுக்கு தான் இந்த தொழில் யோசனை முழுக்க முழுக்க உங்களுக்காக தான். சரி வாங்க என்ன தொழில் என்று இப்பொழுது பார்க்கலாம்.
என்ன தொழில்?
சமையல் சார்ந்த தொழில் தான் அதாவது குழம்பு, பொரியல் போன்றவற்றை வீட்டிலேயே செய்து விற்பனை செய்யும் தொழில் தான் இது. இவற்றில் என்ன வருமானம் வரும் என்று நீங்கள் நினைக்கலாம்.
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, வெளி இடங்களில் தங்கி வேலை செய்யும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு. வெளி இடங்களில் இருந்து தனியாக ரூம் எடுத்து படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கண்டிப்பாக சமைப்பதற்கு நேரம் இருக்காது. ஆக கடைகளில் தான் தினமும் வாங்கி சாப்பிடுகின்றன. அவர்களுக்கு உதவும் வகையில் நீங்கள் குழம்பு மற்றும் பொரியல் போன்றவற்றை செய்து விற்பனை செய்யலாம்.
நீங்கள் குழம்பு மற்றும் பொரியல் தயார் செய்து விற்பனை செய்திர்கள் என்றால் அவர்கள் சாதம் மட்டும் வடித்துக்கொள்வார்கள். சாதமும் வேண்டும் என்பவர்களுக்கு மட்டும் சாதம், குழம்பு, தொட்டுக்கைகள் செய்து கொடுத்துக்கொள்ளலாம் அதற்க்கான விளையும் நீங்கள் நிறங்கித்துக்கொள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தினமும் 3000 மேல் வருமானம் தரும் புதிய தொழில் வீட்டில் சிறிய இடம் இருந்தால் போதும்..!
எப்படி தொழில் தொடங்கலாம்:
உங்கள் வீட்டில் தயார் செய்து தள்ளி வண்டி மூலமாக கூட நீங்கள் விற்பனை செய்யலாம். ஆழத்து உங்கள் வீடு நல்ல மெயின் ரோட்டில் மக்கள் கூடம் அதிகம் புழங்கும் இடமாக இருந்தால் உங்கள் வீட்டின் வாசலில் வைத்துகூட தொடங்கலாம்.
ஒவ்வொரு நாள் ஒவ்வொரு குழம்பு மற்றும் தொட்டுக்கைகளை செய்து விற்பனை செய்யலாம்.
வருமானம்:
சைவ குழம்புகளாக இருந்தால் ஒரு குழம்பு பாக்கெட்டிற்கு 20 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். அதுவே அசைவ குழம்பாக இருந்தால் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். சைவ தொட்டுக்கைகளாக இருந்தால் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம், அதுவே அசைவாக தொட்டுக்கைகளாக இருந்தால் 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.
- ஒரு நாளுக்கு சைவ குழம்பு 50X20=1000
- சைவ தொட்டுகை – 50X5=250
- அசைவ குழம்பு – 25X30=750
- அசைவ தொட்டுக்கைகள் – 25X15=375
விற்பனை ஆக்கினாள் = 3735 ரூபாய் வருமானம் கிடைக்கும். செலவுகள் என்று 1735 என்றால் 2000 ரூபாய் லாபமாக கிடைக்கும்.
மேலும் இரவு நேரங்களிலும் சட்னி வகைகளை தயார் செய்து விற்பனை செய்யலாம். ஒவ்வொரு வீட்டிலும் என்று என்ன குழப்பம் இருந்து கொண்டு தான் இருக்கிறது அதனால் இரவு மாற்று காலை நேரங்களில் சட்னி செய்து விற்பனை செய்யலாம்.
இந்த தொழிலை தொடங்குவதாக இருந்தால் ஒரு FSSAI சான்றிதழ் வாங்கி வைத்துக்கொள்வது மிகவும் நல்லது.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |