1000 முதலீட்டில் தொழில்
நண்பர்களே தினம் தோறும் என்ன தொழில்கள் செய்யவேண்டும் என்பதை பதிவிட்டுக்கொண்டு வருகிறோம். தொழில்கள் அனைத்தும் அதிகளவில் ஆண்களை மட்டுமே சார்ந்துள்ளது என்று அதிகளவு அனைவருமே யோசிப்பீர்கள். இந்த பதிவானது உங்களுக்கானது இருவருமே செய்யலாம் இந்த தொழிலை. பொதுவாக இதுபோன்ற தொழில்களை பெண்கள் மட்டுமே செய்வார்கள் ஆண்கள் செய்யமாட்டார்கள் என்று ஒரு நம்பிக்கை ஆனால் இனி அதனை அனைத்தையுமே தூக்கிபோட்டுவிட்டு அனைவருமே சமம் எல்லோரும் எல்லா தொழில்களையும் செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க போகிற தொழில்கள் என்னவென்றால் இயற்கை அங்காடி என்றும் சொல்லலாம் அல்லது இயற்கை பியூட்டி பார்லர் என்றும் சொல்லாம் அது உங்களுக்கான இஷ்டம்..!
1000 முதலீட்டில் தொழில்:
அதிகளவு மக்கள் அனைவருமே எதனை நினைத்து வருத்த பட்டு வருகிறார்கள் என்றால் ஒன்று பணம் இன்னொன்று முக அழகு. இரண்டும் தான் மன கவலையை கொடுக்கும். அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி.
அதனை அனைத்தையும் சரி செய்ய இருவருமே பியூட்டி பார்லரை நோக்கி படை எடுக்கிறார்கள். இல்லையென்றால் செயற்கை கிரீம் வாங்கி அதனை தினமும் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஒரு சிலருக்கு அது உடலுக்கு கேடு தரும் என்று தெரிந்தும் பயன்படுத்துவார்கள். ஒரு சிலர் ஒரு முறை மட்டுமே இயற்கையான முறையில் பேஸ்ட் செய்து பயன்படுத்துவார்கள். அது நாளடைவில் குறைந்து விடும். அப்படி இல்லையென்றால் நகர் புறங்களில் இருப்பவர்களுக்கு அந்த பொருட்கள் கிடைப்பதற்கு கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். அதனால் மட்டுமே அதனை முறையை கடை பிடித்தலை நிறுத்திவிடுவீர்கள். ஆனால் அது தான் நமக்கு இப்போது பயனளிக்க போகிறது.
இதுபோன்ற தொழில்களை யாரும் செய்திருக்க மாட்டார்கள். யாரும் செய்யாத தொழிலை நாம் மட்டும் எப்படி செய்ய முடியும் என்று செய்ய தயங்காதீர்கள்.
இதற்கு கடைகள் எதுவும் தேவையில்லை உங்களுடைய வீட்டிலே வைத்துக்கொண்டாலும் அது நல்லது தான்.
அதிகளவு செயற்கை பொருட்களின் விற்கும் பொருட்களின் விளம்பரம் என்னவாக இருக்கும் இது இயற்கையாக செய்யப்பட்ட பொருட்கள் என்றுதான் இருக்கும்.
அவர்கள் 1 மாதம் அல்லது 1 வருடம் பாக்கெட் செய்து விற்பனை செய்வது நீங்கள் ஒரு நாள் அல்லது 1 வாரம் என்று செய்து விற்பனை செய்யலாம்.
நாம் வீட்டில் என்ன பொருட்களை கொண்டு முகத்திற்கு அழகு சேர்ப்போம் என்று தெரிந்துகொண்டு அதனை வாங்கி தயார் செய்து விற்கலாம்.
எடுத்துக்காட்டாக:
அதிகளவு கற்றாழை ஜெல் கிடைப்பதில்லை அதனை வாங்கி விற்கலாம்.
அதன் பின் வேப்பிலை அரைத்து அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து விற்பனை செய்யலாம்.
தயிர் தேன் போன்ற பொருட்களை செய்ய நிறைய நேரம் எடுக்காது இருந்தாலும் செய்வதற்கு கொஞ்சம் அலுப்பு பட்டுக்கொண்டு வேண்டாம் விட்டுவிடுவார்கள். இப்படி உள்ளவர்கள் அனைவருமே இயற்கையாக பொருட்கள் கிடைக்கும் என்று தெரிந்தால் உங்களை தேடி வரமால் இருப்பார்களாக சொல்லுங்கள்.
இதனை தொடங்க உங்களுக்கு அதிகளவு பணம் தேவையில்லை இதுபோன்ற பொருட்கள் விற்பனை ஆகிறது என்று அனைவருக்கும் தெரியப்படுத்தினால் மட்டுமே போது உங்களை தேடி லாபம் வரும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |