இந்த தொழிலை மட்டும் தொடங்கி பாருங்க மாதம் லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்..!

Profitable Business in Tamil

படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். தினமும் இந்த பதிவில் சிறந்த வணிக யோசனைகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு சிறந்த தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம். இந்த தொழில் தொடங்குவதற்கு முதலீடு, மூலப்பொருட்கள், இந்த தொழில் செய்வதால் கிடைக்கும் வருமானம் எவ்வளவு என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Ginger Oil Business in Tamil:

Ginger Oil Business in Tamil

இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் தினமும் உங்களுக்கு ஒரு நல்ல வருமானம் கிடைக்கும். இஞ்சி பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இஞ்சி பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. அதனால் நீங்கள் இஞ்சியின் மூலம் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யலாம்.

இந்த  எண்ணெய் உடல் எடையை குறைக்க உதவுகிறது. பொடுகு மற்றும் முடி உதிர்வை கட்டுப்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது. இது ஒரு மசாஜ் ஆயிலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெய் பல மூலிகை பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. அதனால் இந்த எண்ணெயை தயாரித்து விற்பனை செய்யலாம்.  

இடம்:

இந்த தொழில் தொடங்குவதற்கு உங்களுக்கு தனி இடமோ அல்லது கடையோ தேவைப்படாது. உங்கள் வீட்டில் சிறிய இடம் இருந்தாலே போதும். இந்த தொழிலை தாராளமாக செய்யலாம்.

உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணம் சம்பாதிக்க வேண்டுமா..? அப்போ இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!

மூல பொருட்கள்:

Ginger Oil Business Tamil

  1. இஞ்சி – 1 கிலோ
  2. எண்ணெய் – தேவையான அளவு

எண்ணெய் தயாரிக்கும் முறை: 

முதலில் உங்களுக்கு தேவையான அளவு இஞ்சியை மொத்தமாக கிடைக்கும் கடைகளில் இருந்து வாங்கி கொள்ளுங்கள். பின் இஞ்சி தோலை நீக்கி விட்டு அதை சுத்தமாக கழுவி கொள்ளுங்கள்.

பின் இஞ்சியை காய் சீவும் கட்டையில் வைத்து சீவிக் கொள்ளவும். பின் இதை ஒரு பாத்திரத்தில் வைத்து இஞ்சி மூழ்கும் அளவிற்கு அதில் தேங்காய் எண்ணெயோ அல்லது ஆலிவ் ஆயிலோ சேர்க்க வேண்டும். பின் அந்த பாத்திரத்தை ஒரு மூடிபோட்டு மூடவேண்டும்.

பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நாம் மூடி வைத்துள்ள பாத்திரத்தை இதில் உள்ளே வைத்து 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இந்த முறையை Touble Boiling Method என்று சொல்வார்கள்.

15 நிமிடம் கழித்து இந்த எண்ணெயை அடுப்பில் இருந்து இரக்கி ஆறவிட வேண்டும். எண்ணெய் ஆறியதும் அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும்.

இந்த தொழிலுக்கு முதலீடே தேவையில்லை, ஆனால் தினமும் கைநிறைய சம்பாதிக்கலாம்..!

விற்பனை செய்யும் முறை: 

விற்பனை செய்யும் முறை.....

இந்த எண்ணெய் ஆன்லைனில் 1 லிட்டர் 15,000 ரூபாய்க்கு மேல் விற்பனை  செய்யப்படுகிறது. அதனால் நீங்கள் இந்த எண்ணெய்யை ஆன்லைனில் விற்பனை செய்யலாம்.

நீங்கள் 1 கிலோ இஞ்சி வாங்கி அதில் எண்ணெய் தயாரித்தால் உங்களுக்கு 50 ml வரை எண்ணெய் கிடைக்கும். அதை வைத்து நீங்கள் இஞ்சி வாங்கி எண்ணெய் தயாரிக்க வேண்டும்.

இந்த எண்ணெயை நீங்கள் உங்கள் பகுதியில் இருக்கும் இயற்கை அங்காடி, அழகு நிலையங்கள் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம். இதனால் தினமும் உங்களுக்கு ஒரு நல்ல வருமானம் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதம் மாதம் லட்ச கணக்கில் சம்பாதிக்கலாம்

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil