தினமும் 3000 வரை வருமானம் தரும் தொழில்.. ஆண், பெண் இருவருமே வீட்டில் தயார் செய்து விற்பனை செய்யலாம்..!

Low Investment High Profit Business Ideas

வணக்கம் நண்பர்களே.. இன்று நாம் தெரிந்துகொள்ள இருக்கும் தொழில் கண்டிப்பாக அதிக டிமாண்ட் உள்ள தொழில் என்று சொல்லலாம். அதாவது வீடு துடைப்பதற்கு பயன்படுத்துவோம் அல்லவா Mop Stick அதனை வீட்டிலேயே தயார் செய்து விற்பனை செய்யலாம் அது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். இதற்கு அதிக முதலீடும் தேவை இருக்காது.. இயந்திரம் எதுவும் இல்லாமலும் இந்த Mop Stick-ஐ நாம் தயார் செய்ய முடியும். சரி வாங்க இந்த தொழில் துவங்க என்னென்ன பொருட்கள் தேவைப்படும், எவ்வளவு முதலீடு தேவைப்படும், எப்படி தயார் செய்யலாம் போன்ற தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

How to Make A Mop Stick At Home in Tamil

இடம்:

இந்த Mop Stick தயாரிப்பு தொழிலை நாம் வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.. இதற்காக தனியாக இடம் அமைக்க வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் இல்லை. உங்கள் தொழில் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய உங்கள் இடத்தை மாற்றி கொள்ளலாம்.

தேவைப்படும் மூலப்பொருட்கள்:

  • Plastic London Mop Cup
  • Mop Yarn அதாவது Mop Cotton Thread 
  • Mop Stick

இந்த மூன்று பொருட்கள் தான் தேவைப்படும். இந்த போன்று பொருட்களும் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு Plastic London Mop Cup-யின் விலை 4 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு ரோல் Mop Yarn-யில் விலை 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் ஒரு Wooden Mop Stick-யில் விலை 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆக உங்களுக்கு இந்த பொருட்கள் வேண்டும் என்றால் இப்போதே ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

முதலீடு:

Noபொருட்கள்எண்ணிக்கைவிலைதொகை
1Plastic London Mop Cup205100
2Mop Yarn20651300
3Wooden Mop Stick2015300
மொத்தம்1700

 

 

இந்த தொழிலை ஆரம்பிப்பதற்கு குறைந்தது 2000 ரூபாய் இருந்தாலே போதும். அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் அதற்கான முதலீடும் மாறுபடும்.

தயாரிக்கும் முறை:

இந்த Mop Stick தயார் செய்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.. தயார் செய்வது மிகவும் எளிமையாகத்தான் இருக்கும்.

முதலில் Plastic London Mop Cup-ஐ எடுத்துக்கொள்ளுங்கள், அவற்றில் Mop Yarn கயிறை கட் செய்து அந்த கப்பின் உள்ளே வைக்க வேண்டும். பின் அந்த கப்பை லாக் செய்வதற்கு ஒரு கிளிப் இருக்கும் அதனை கபில் உள்ள ஓடையில் சரியாக வைத்து செட் செய்ய வேண்டும். பிறகு சுத்தியலால் லேசாக தட்டிவிட்டு அந்த கிளிப் கப்பில் நன்றாக லாக் ஆகிவிடும். பிறகு Wooden Stick-ஐ வைத்து செட் செய்தால் Mop Stick தயார் ஆகிவிடும்.

வருமானம்:

ஒரு Mop Stick-ஐ 180 ரூபாய்க்கு அல்லது 150 ரூபாய்க்கு விற்றால் 20 Mop Stick-க்கிற்கு 3000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

சந்தை வாய்ப்பு:

சூப்பர் மார்க்கெட், மளிகை கடை, வளையல் மணி கடை இது போன்ற கடைகளில் விற்பனை செய்யலாம் அல்லது உங்கள் தெருவில் உள்ளவர்களிடம் நேரடியாக சென்று கூட விற்பனை செய்யலாம் இதன் மூலம் நல்ல வருமானம் பார்க்க முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇👇
பேக்கிங் செய்வதன் மூலம் தினமும் ரூ.1200 வரை சம்பாதிக்கலாம்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil