சிறு தொழில் – பழைய புடவையில் மேட் செய்வது எப்படி?

Advertisement

சிறு தொழில் – பழைய புடவையில் மேட் செய்வது எப்படி? (How to make door mat at home)..!

கால்மிதி செய்வது எப்படி – வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது பழமொழி, அந்த வாசலுக்கு வாசல் மிதியடி என்பது புது மொழி. எனவே பெண்கள் இந்த கால்மிதி தயாரிப்பில் இறங்குவது எளிமையான முதலீட்டில் வளமான வருமானம் பார்க்கும் நல்ல தொழிலாக இருக்கிறது. வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க கால்மிதி தயாரிப்பு ஒரு சிறந்த வழி.

தேங்காய் நார் கால் மிதியடி தயாரிப்பு தொழில் நல்ல லாபம் பெறலாம்..!

பிளாஸ்டிக் அல்லது நார் பொருட்களை வைத்துத் தயாரிக்கப் பெரிய இயந்திரங்கள்… பெரிய மூலதனம் தேவைப்படலாம். ஆனால், துணியில் இருந்து கால்மிதி தயாரிக்கும் தொழிலில், கை வேலைப்பாடுதான் முக்கியமான அம்சம்.

சரி இந்த கால்மிதி செய்வது எப்படி ? என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம் வாங்க..!

பெண்கள் வீட்டில் இருந்து செய்யும் தொழில்கள்..!

சிறு தொழில் – கால்மிதி செய்வது எப்படி?

மூலப்பொருள்:

தையற்கடைக்குச் சென்றால், தைப்பதற்காக வெட்டிய துணி போக, மீதி துண்டுத்துணிகள் ஏராளமாகக் கிடைக்கும். சில அவற்றை இலவசமாக கொடுப்பார்கள், சிலரிடம் சிறிய தொகையை கொடுத்து அந்த வேஸ்ட் துணிகளை வாங்கி கொள்ளுங்கள். இதுதான் இந்த தயாரிப்பு தொழிலுக்கான மூலப்பொருள்.

அப்படிக் கிடைக்காத பட்சத்தில் பழைய சேலை, சுடிதார் துப்பட்டா போன்ற துணிகளைப் பயன்படுத்தலாம். காட்டன் துணிவகைகள் அல்லது வேஸ்ட் பனியன் துணி என்றால் கால்மிதி தயாரிப்பதற்கு வாகாக இருக்கும். அதன் பயன்பாடும் அதிக நாட்களுக்கு வரும்.

கால்மிதி செய்வது எப்படி? – தயாரிப்பு முறை:-

கால்மிதி செய்வது எப்படி (How to make door mat at home) – இவ்வாறு வாங்கிய துணிகளை குறிப்பிட்ட அளவு அகலத்தில் வெட்டி கொள்ள வேண்டும்.

அதன் பிறகு வெட்டிய துண்டுகளை முடிச்சி போட்டு ஒன்றோடு இன்று இணைத்து நீண்ட கயிறு போல் செய்து கொள்ளவும்.

அதன்பிறகு, உல்லன் ஆடைகளை நெய்வது போல, பின்னிப் பின்னி கால்மிதியாக உருவாக்கவேண்டும். அதாவது ஸ்வெட்டர் பின்னத் தெரிந்தவர்களுக்கு மிக எளிதாக இருக்கும்.

இதே போன்று நல்ல டிசைன்களையும், மாடல்களையும் நம் கற்பனை திறனுக்கு ஏற்றவாறு வடிவமைத்தால் நல்ல வளமான வருமானத்தை இதன் மூலம் நாம் பெற முடியும்.

ஒருநாளைக்குக் குறைந்தபட்சம் நான்கு கால்மிதிகள் தயாரிக்க முடியும். ஒவ்வொன்றும் குறைந்தது 40, 50 ரூபாய்க்கு விற்பனை ஆகும். அதனால், குறைந்த முதலீட்டில் உங்கள் உழைப்புக்கான ஊதியமாக ஒருநாளைக்கு சுமார் 200 ரூபாய் வரைகூட சம்பாதிக்க வழி இருக்கிறது.

நல்ல ட்ரெண்டிங்கில் பனை மர இலை தட்டு தயாரிப்பு ..!

கால்மிதி செய்வது எப்படி? – இயந்திரம்:

இந்த கால் மிதியடி தயாரிப்பு தொழில் பொறுத்தவரை தேவைப்படும் இயந்திரங்கள் என்று பார்த்தால். துணிகளை வெட்டுவதற்கு கத்திரி கோல், ஸ்வெட்டர் பின்னும் ஊசி இவை இரண்டும் தான் தேவைப்படும்.

சந்தை வாய்ப்பு:

How to make door mat at home – இவ்வாறு தயாரித்த மிதியடிகளை உங்கள் வீடுகளுக்கு அருகில் இருக்கும் டிபார்ட்மென்ட் ஸ்டோர், மளிகைக் கடைகள் போன்றவற்றில் கொடுத்து விற்கச் செய்யலாம்.

அவர்களுக்கு ஒரு நியாயமான லாபம் கிடைக்கும் வகையில் விலை வைத்துக் கொடுத்தால், தாராளமாக விற்க முன்வருவார்கள்.

பெரிய பெரிய நிறுவனங்களை அணுகி அவர்களுடைய தேவைக்கு ஏற்ப, அவர்களது நிறுவனப் பெயர் பதித்த தயாரிப்புகளை உருவாக்கித் தந்து லாபம் பார்க்கமுடியும்.

குறிப்பு:-

இதையெல்லாம் ஸ்வெட்டர் நூல் மூலம் வடிவமைக்கும்போதே, மணிகள், அழகுக் கற்கள் சேர்த்து விதவிதமான கலர்களில் பின்னல் போட்டு கலக்கலாம்.

இதற்கு ஒருபடி மேலே போய் எம்ப்ராய்டரி செய்து கலைநயத்தோடு உருவாக்கினால் அதிகவிலை கிடைக்கும். விதவிதமான பூ வேலைப்பாடுகள் கொண்டவையாகத் தயாரித்தால், 250 ரூபாய் விலை வைத்துக்கூட விற்கமுடியும்.

அதிக லாபம் தரும் – கிரிஸ்டல் நகை தயாரிப்பு பயிற்சி!!!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> புதிய தொழில் பட்டியல் 2019  
Advertisement