தேங்காய் எண்ணெய் சோப்பு தயாரிப்பு தொழில் செய்து நல்ல லாபம் பெருங்க..!

Advertisement

தேங்காய் எண்ணெய் சோப்பு தயாரிக்கும் முறை

தேங்காய் எண்ணெய் இருந்து இயற்கை மூலிகை குளியல் சோப்பு தயாரிப்பு தொழில் செய்து இதன் மூலம் தினந்தோறும் நாள் வருமானம் பெறலாம். இயற்கை குளியல் சோப் நாம் வீட்டில் இருந்தே ஒரு சிறந்த குடிசை தொழிலாக செய்வதினால் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும். எனவே தயக்கம் இல்லாமல் தைரியமாக இந்த தயாரிப்பு தொழிலை செய்யுங்கள்.

சரி வாங்க தேங்காய் எண்ணெய் சோப்பு தயாரிப்பு தொழில் பற்றி இந்த பகுதியில் நாம் தெளிவாக படித்தறிவோம்.

பினாயில் தயாரிப்பு விலை ரூ.1,000/- மாத வருமானம் 20,000/- லாபம்..!

தேங்காய் எண்ணெய் சோப்பு தயாரிப்பு தொழில் முழு விவரம் (How To Make Herbal Soap At Home in Tamil)

இடம்:

இந்த தயாரிப்பு தொழில் பொறுத்தவரை நாம் வீட்டில் இருந்தே செய்ய கூடிய குடிசை தொழில் என்பதால் இதற்கு தனியாக இடம் அமைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதேபோல் குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் பார்க்க கூடிய ஒரு சிறந்த தொழிலாக இந்த தயாரிப்பு தொழில் விளங்குகிறது.

தேங்காய் எண்ணெய் சோப்பு தயாரிக்கும் முறை (How To Make Herbal Soap At Home in Tamil)

தேவையான பொருட்கள்:

  1. தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்
  2. லை (காஸ்டிக் சோடா எனப்படும் சோடியம் ஹைட்ராக்சைடு என்ற வேதிப்பொருள் கரைசலையே லை (LYE) என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது)135 கிராம்
  3. தண்ணீர் – 370 மில்லி
  4. வாசனை திரவியம் – 15 மில்லி

தேங்காய் எண்ணெய் சோப்பு தயாரிப்பு தொழில் முழு விவரம் (How To Make Herbal Soap At Home in Tamil)..!

தேங்காய் எண்ணெய் சோப்பு தயாரிக்கும் முறை ஸ்டேப்: 1

பாது காப்பு அணிகலன்கள் அணிந்து கொண்டு, தண்ணீர் 370 மில்லி எடுத்து ஒரு கடிமான கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் சோடியம் ஹைட்ராக்சைடு 135 கிராம் மெதுவாக சேர்த்து கொண்டு மர குச்சியால் நன்றாக கலக்கி விடவும். சிறிது நேரத்தில் வேதியல் வினை புரிந்து சூடாகும், இந்த சமயத்தில் வெளியாகும் வாயுவை சுவாசிக்க கூடாது. இதன் நிறம் வெண்மையாக மாறி இருக்கும். அப்படியே சிறிது நேரம் வைத்து விடவும். 10 அல்லது 15 நிமிடம் சென்ற பிறகு மீண்டும் தண்ணீரின் நிறத்திற்க்கு மாறி விடும்.

தேங்காய் எண்ணெய் சோப்பு தயாரிக்கும் முறை ஸ்டேப்: 2

அதன்பிறகு தேங்காய் எண்ணெயை சில்வர் பாத்திரத்திம் அல்லது மின்சார குக்கரில் ஊற்றி சூடு செய்து அதனுடன் முன்னர் தயார் செய்து வைத்துள்ள சோடியம் ஹைட்ராக்சைடு (லை) கரைசலை எண்ணெய்யில் சேர்த்து கலக்கி கொண்டே இருக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து கலக்கி கொண்டே இருக்கும் போது எண்ணெயின் தன்மை மாறி பசைபோல் ஆகும். அதுவரை கலக்கி கொண்டே இருக்க வேண்டும்.

சிறுதொழில் டிட்டர்ஜன்ட் பவுடர் தயாரிப்பு தொழில்..!

 

தேங்காய் எண்ணெய் சோப்பு தயாரிக்கும் முறை ஸ்டேப்: 3

அதன் பிறகு பசை தன்மை அடைந்ததும் பாத்திரத்தை மூடி நன்றாக வேக விடவும், முன்பை விட மேலும் இறுகி இருக்கும். இதற்கு பயன்படுத்தும் அடுப்பின் வெப்ப நிலையை பொருத்து நேரம் மாறுபடும் சுமார் 45 நிமிடம் முதல் 1.30 மணி நேரம் ஆகலாம்.

தேங்காய் எண்ணெய் சோப்பு தயாரிக்கும் முறை ஸ்டேப்: 4

சோடியம் ஹைட்ராக்சைடும் தேங்காய் எண்ணெய்யும் ஒன்றோடு ஒன்று கலந்து இருக்க வேண்டும், நீர் துளிகள், எண்ணெய் துளிகள் ஏதும் இல்லாத அளவிற்க்கு வெந்து இருக்க வேண்டும். இதை உறுதி செய்ய PH பேப்பரில் பசையை தடவினால் சிறுது நேரத்தில் நிறம் மாறி அளவு 7 முதல் 10 இருக்க வேண்டும். அல்லது சிறிது கலவையை எடுத்து பிசைந்து பார்த்தால் மெழுகு போல் இருக்க வேண்டும். PH அளவு 10 க்கு மேல் இருந்தாலோ, பிசு பிசு வென இருந்தால் மீண்டும் வேகவைக்க வேண்டும். லை முழுவதும் சோப்பு பசையாக மாறியுள்ளதா என பார்ப்பது மிகவும் முக்கியமான ஒன்று.

தேங்காய் எண்ணெய் சோப்பு தயாரிக்கும் முறை ஸ்டேப்: 5

கலவை சோப்பாக மாறியதும் வாசனை தேவைபடும் அளவிற்க்கு திரவியம் பத்து பதினைந்து சொட்டுகள் சேர்த்து நன்றாக கலக்கி எடுத்து, விரும்பும் வடிவத்தில் அச்சு தயார் செய்து அதனுள் பட்டர் பேப்பர் போட்டு அதன் மீது இக்கலவையை கொட்டி சமமாக பரப்பி வைக்கவும்.

தேங்காய் எண்ணெய் சோப்பு தயாரிக்கும் முறை ஸ்டேப்: 6

ஒரு நாள் முழுவதும் அப்படி இறுகவிட்டு அடுத்த நாள் எடுத்து தேவையான அளவு துண்டுகளாக வெட்டி மீண்டும் இரண்டு நாட்கள் உலர்த்தி பத்திரப்படுத்தி கொள்ளலாம்.

குடிசை தொழில் வருமானம்:

75 கிராம் கொண்ட ஒரு சோப்பு தயாரிக்க ஆகும் செலவு ரூ.10 மட்டுமே. வாடிக்கையாளரிடம் நேரடியாக ரூ.20 என்று விற்பனை செய்தால் செலவு போக ஒரு சோப்புக்கு ரூ.10 லாபம் கிடைத்தால் கூட தினசரி 1,00/- சோப்புகள் விற்பனை செய்தால் ரூ.1,000/- வருமானம் பெறலாம்.

தயாரிப்பு தொழில் முதலீடு:

தேவையான முதலீடு ரூ.10,000/- இருந்தாலே போதுமானது. உங்களது வீட்டிலேயே சோப்பு தயார் செய்து மாதம் 3,000/- சோப்புகள் விற்பதன் மூலம் ரூ.30,000/- வருமானம் பெறலாம்.

சுயதொழில் – சலவை சோப்பு தயாரிப்பு தொழில்!!!

 

இது போன்று தயாரிப்பு தொழில், சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> புதிதாக என்ன தொழில் செய்யலாம்..!
Advertisement