ஜூஸ் கடை வைப்பது எப்படி? | How to Start a Juice Shop Business in Tamil
கோடை காலம் வந்துவிட்டது.. புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்கள் உடனே கோடை காலத்திற்கேற்ற நல்ல வருமானம் தரக்கூடிய ஜூஸ் கடையை தொடங்கலாம். இந்திய நாடானது வெப்பம் அதிகம் உள்ள மண்டலத்தில் அமைந்துள்ளதால் வெயில் காலங்களில் ஜூஸ் விற்பனை செய்தால் நல்ல லாபத்தை பெற முடியும். வெயில் காலங்களில் கரும்பு ஜூஸ், நன்னாரி சர்பத், இளநீர், சாத்துக்குடி ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், மாதுளை ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், திராட்சை ஜூஸ், வெள்ளரி மற்றும் தர்பூசணி ஜூஸ் ஆகிய குளிர்ச்சியான ஜூஸ் வகைகள் நன்றாக வியாபாரம் ஆகும். கூடுதலாக, வாடிக்கையாளர்கள் விரும்பக்கூடிய லெஸி மற்றும் கம்பங்கூழ் ஆகியவற்றையும் சுகாதாரமான முறையில் தயார் செய்து விற்பனை செய்தால் வாடிக்கையாளர்கள் அதிகமாக வாங்கி பருகுவார்கள். குறிப்பாக ஹோம் டெலிவரி வசதியையும் மக்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தால் வியாபாரம் இன்னும் சூடுபிடிக்கும். சரி வாங்க ஜூஸ் பார் பிசினஸ் தொடங்க விரும்பினால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற முழு தகவலையும் இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்..
மளிகை கடை தொடங்குவது எப்படி? |
ஜூஸ் கடை தொழில்:
இந்த ஜூஸ் கடை தொழிலானது குறைந்த முதலீட்டிலே அதிக வருமானத்தை பெறக்கூடிய அருமையான தொழில். அதிலும் கோடை காலத்தில் இந்த தொழிலை ஆரம்பித்தால் போது வருமானம் அதிகரித்துக்கொண்டே போகும்.
பெரும்பாலான மக்கள் இப்போதெல்லாம் பாட்டிலில் இருக்கக்கூடிய ஜூஸ் வகைகளை அருந்துவதை தவிர்த்துவிட்டு பிரெஷ் ஜூஸ் குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இடவசதி:
இந்த ஜூஸ் கடை தொடங்க விரும்புபவர்கள் முதலில் ஜூஸ் கடைக்கான சரியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
தேர்வு செய்கின்ற இடமானது மக்கள் அதிகமாக நடமாடக்கூடிய இடம், டூரிஸ்ட் பிளேஸ், கடற்கரை பகுதி, மால், மார்க்கெட், கிளப், பூங்கா, பள்ளி கல்லூரிகள் போன்ற இடங்களில் இந்த கடையை வைத்தால் நீங்கள் எதிர்பார்க்கும் அளவினை விட லாபம் அதிகமாக கிடைக்கும்.
வாடிக்கையாளர்களை கவர:
ஜூஸ் கடையில் ஜூஸ் மட்டும் விற்பனை செய்யாமல் அதோடு ஃப்ரூட் சாலட், மில்க் ஷேக் இது மாதிரியான பொருள்களையும் சேர்த்து விற்பனை செய்யும் போது வாடிக்கையாளர்கள் உங்கள் கடைக்கு தேடி வருவார்கள். லாபமும் அதிகரிக்கும்.
தேவையான ஆவணங்கள்:
முதலில் ட்ரேட் மார்க் வாங்க வேண்டும். ட்ரேட் மார்க் என்பது உங்கள் கடையின் பெயர் மற்றும் லோகோவினை பதிவு செய்ய வேண்டும். இதற்கு ரூ. 3,500/- செலவாகும். இதோடு அந்த Advocate -ற்கு ரூ. 1,000 கொடுக்க வேண்டும். மொத்தமாக ரூ. 4,500/-ஆகும்.
- TM 8 என்ற படிவத்தை நிரப்ப வேண்டும்.
- ஆதார் கார்டு
- கம்பெனியின் பான் கார்டு
- கம்பெனியின் RC
- கடையின் EB பில்
இவற்றையெல்லாம் அட்டாச் செய்து அப்ளை செய்தீர்கள் என்றால் 2 நாட்களில் ட்ரேட் மார்க் வந்துவிடும்.
100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்..! |
FSSAI லைசன்ஸ் எடுப்பதற்கு:
இந்த லைசன்ஸ் எதற்காக எடுக்கிறோம் என்றால் உங்களுடைய பொருள் நல்ல தரமாக இருக்கிறது என்பதற்காக தான். இந்த லைசன்ஸ் எடுப்பதற்கு ரூ. 1, 799 ஆகும்.
- Form -B என்பதை நிரப்ப வேண்டும்.
- ஆதார் கார்டு
- ரெண்டல் அக்ரீமெண்ட்
- Product Details
- கடையின் ப்ளூபிரிண்ட்
- Sample Product
இவற்றையெல்லாம் அட்டாச் செய்து அப்ளை செய்தீர்கள் என்றால் 1 வாரத்தில் FSSAI லைசன்ஸ் வந்துவிடும்.
என்னெல்லாம் விற்பனை செய்யலாம்:
- பிரெஷ் ஜூஸ்
- மில்க் ஷேக்
- ஃப்ரூட் சாலட்
- சாண்ட்விச்
- மொக்டைல்ஸ் (mocktails) இது போன்ற பானங்களை விற்பனை செய்யலாம்.
ஜூஸ் கடைக்கு தேவைப்படும் இயந்திரங்கள்:
- Multifuncional Juicer
- Fruit Peeler
- குளிர்சாதன பெட்டி
- Bar Counter
- Fruit Showcase
- Blender
- Shaker
- Ice Machine
- Citrus Juicer
- Cash Counter
கிடைக்கும் லாபம்:
இந்த ஜூஸ் கடை பிசினஸில் தோராயமாக ரூ. 100 க்கு ஜூஸ் விற்பனை செய்கிறீர்கள் என்றால் லாபம் ரூ. 40 கிடைக்கும்.
ஒரு நாளைக்கு உங்களுக்கு 10,000 ரூபாய்க்கு பிசினஸ் ஆகிறது என்றால் 40%= 4,000/- லாபம் கிடைக்கும்.
ஒரு நாளிற்கு ரூ. 4,000 லாபம் கிடைக்கிறது என்றால் ஒரு மாதத்திற்கு 4000*30 = ரூ. 1,20,000/- கிடைக்கும்.
மேல் கூறிய கணக்கினை நான் தோராயமாக கூறியுள்ளேன். உங்களுக்கு பிசினஸ் எவ்வளவு ஆகுதோ அதிலிருந்து 40% லாபம் கிடைக்கும்.
இந்த தொழில் நல்ல லாபம் தரக்கூடிய தொழில் என்பதால் தாராளமாக அனைவரும் ஸ்டார்ட் பண்ணலாம்.. நன்றி வணக்கம்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |