வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Low Budget-யில் அதிக லாபம் தரும் ட்ரெண்டிங் பிசினஸ்…!

Updated On: September 8, 2022 11:55 AM
Follow Us:
low budget business in tamil
---Advertisement---
Advertisement

Low Budget Business in Tamil

இப்போதைய கால கட்டத்தில் படிப்பை படித்து முடித்துவிட்டோம் என்றாலே அடுத்து என்ன செய்ய போகிறாய்? வேலைக்கு செல்ல போகிறாயா? அல்லது சுயமாக தொழில் துவங்க போகிறாயா என்று பல கேள்விகள் ஆரம்பித்துவிடும். இதன் பரணமாகவே படித்துவிட்டு பலர் வேலை செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். சில சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பார்கள். தொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த  பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் 5 தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். அவற்றில் உங்களுக்கு பிடித்த தொழிலை ஆரம்பித்து நீங்களும் தொழில் முனைவோராக ஆக வாழ்த்துக்கள். சரி வாங்க அந்த ஐந்து வகையான தொழில்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

Pet Business Ideas in Tamil:

முதலாவதாக நாம் பார்க்க இருப்பது Pet Business Ideas பற்றி தான். இப்பொழுது பலருக்கு செல்லப்பிராணி வளர்ப்பதில் அதிக ஆர்வத்தையும், விருப்பத்தையும் கொண்டுள்ளனர். ஆகவே நீங்கள் செல்லப்பிராணிகளை விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம். இந்த தொழிலுக்கு கிராம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களிலும் மக்களிடம் அதிகம் வரவேற்பு உள்ளது. மேலும் இதனுடன் நீங்கள் கூடுதலாக செல்லப்பிராணிகளுக்கான உணவுகள், பராமரிக்கும் முறைகள், மெடிஷன் போன்ற வற்றையும் செய்யலாம் இதற்கு மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது.

Yoga Center Business Plan in Tamil:

இன்றைய கால கட்டத்தில் அனைவருமே யோகா மீது அதிக விழிப்புணர்வு வந்துவிட்டது. அதிலும் உடலின் ஆரோக்யத்திற்காகவே தினமும் காலையிலேயே பலர் யோகா செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆக நீங்கள் Yoga Center வைத்து அதன் மூலம் மாதம் மாதம் அதிக லாபத்தை பெறலாம். இதற்கு உங்களுக்கு யோகா தெரிந்திருக்க வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் இல்லை. உங்களுக்கு தெரியவில்லை என்றால் என்ன?, யோகா பற்றி நன்கு தெரிந்தவர்களை உங்கள் Yoga Center-யில் பணிபுரிய வைத்து அவர்களுக்கு சம்பளம் கொடுக்கலாம். இந்த தொழில் மூலமும் நல்ல வருமானத்தை மாதம்தோறும் அள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 மாலை நேரங்களில் தினசரி வருமானம் தரும் தொழில்

Child Day Care Service Business Plan in Tamil:

இன்றைய கால கட்டத்தில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு சென்றுவிடுகின்றன. அவர்களது குழந்தையை பார்த்துக்கொள்வதற்கு பெரியவர்கள் யாரும் இருப்பதில்லை. அதாவது குழந்தைகள் எப்படி இருந்தாலும் ஸ்கூலை முடித்துவிட்டு 3.30 அல்லது 4.00 மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்து விடுவார்கள். அதன் பிறகு குழந்தையை பார்த்துக்கொள்வதற்கு யாரும் இருப்பதில்லை. இதன் காரணமாக அவர்களது பிள்ளைகளை கவனமாக பார்த்து கொள்ள Child Day Care Service-ஐ நாடுகின்றன. ஆக உங்கள் ஊரில் நீங்கள் Child Day Care Service-ஐ ஆரம்பித்தீர்கள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

இந்த மூன்று பிசினஸ் ஐடியாவில் தங்களுக்கு எந்த பிசினஸ் பிடித்துள்ளதோ அந்த பிசினெஸ்ஸை செய்யுங்கள் இந்த பதிவை முழுமையாக படித்தமைக்கு நன்றி 🙏🙏

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை