Masala Powder Business in Tamil
நண்பர்களே வணக்கம்..! தினமும் லாபம் தரும் தொழில்களை பற்றி தெரிந்துகொண்டு வருகிறோம். ஆனால் அதனை படித்துவிட்டு யோசித்து கொண்டு மட்டும் இருக்கக்கூடாது. அந்த தொழிலை செய்து பார்த்தால் தான் தொழில்களில் உள்ள ஏற்ற இரக்கம் தெரியும். இது வாழ்க்கைக்கும் பொருந்தும். பொதுவாக நாம் எந்த செயலை செய்யலாம் என்று யோசிப்போமே தவிர அதனை செயல்படுத்தமாட்டோம் ஆனால் அதனை செய்தால் மட்டுமே அதிலிருக்கும் அனைத்தையும் தெரிந்துகொண்டு ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள முடியும்.
எந்த விஷயமும் தெரியாது என்று சொல்வதை விட அதை பற்றி தெரியும் என்று சொல்வதற்கு தான் வலிமை அதிகம். ஆகையால் வாழ்க்கையிலும் சரி, தொழிலிலும் சரி கற்றுக்கொள்ளவது மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று சூப்பரான தொழிலை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம் வாங்க..!
லாபம் தரும் தொழில்:
பொதுவாக நாம் கடையில் வாங்கி சாப்பிடும் பொருட்களில் நிறைய கலப்படம் உள்ளது என்று அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும்பட்சத்தில் சிலர் வீட்டிலே சிலவகையான பொருட்கள் தயாரித்து அதனை சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள். வீட்டில் உள்ளவர்களுக்கு இது சரியாக இருக்கும். ஆனால் வேலைக்கு செல்பவர்களுக்கும் இது சத்தியமாக சாத்தியம் இல்லை ஆகவே. வீட்டில் இருப்பவர்களுக்கு பொருட்கள் எந்த ஒரு கலப்படமும் இல்லாமல் கிடைக்க சூப்பரான தொழிலை செய்ய வேண்டும் என்றால் இந்த தொழிலை செய்யுங்கள்.
சமையலுக்கு நாம் எத்தனை விதமான பொருட்கள் பயன்படுத்துகிறோம். உதாரணத்திற்கு ரசம் என்றால் அதில் சேர்க்கும் மசாலா மஞ்சள் தூள் ஆகும். அதனை நிறைய நிறுவனம் செய்து விற்பனை செய்கிறது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 வீட்டில் 10×10 இடம் இருந்தால் போதும் 1 நாளைக்கு 32,000 வரை லாபத்தை பெறலாம்..!
அது தரமாக இருந்தாலும் மஞ்சள் தூள் செய்வதை நாம் பார்க்கவும் இல்லை அது எப்படி செய்வது என்றும் நமக்கு தெரியாது. ஆனால் அதனை வீட்டில் செய்து விற்பனை செய்தால் யார்யார் அதிகமாக வாங்குவார்கள். அனைவருமே வாங்குவார்கள். அதில் தரம் நிறைந்திருக்கும்.
இது தான் நாம் செய்ய போகும் தொழிலில் ஆகும். நாம் காசு கொடுத்து வாங்கு பொருட்களில் தரமானது இருந்தால் தான் நாம் செய்யும் செயலுக்கு கிடைக்கும் அங்கீகாரம்.
நாம் செய்ய போகும் தொழில் மசாலா பொருட்கள் தான். அனைத்து மசாலா பொருட்களும் செய்ய வேண்டுமா என்று கேட்டால் அது சரியாக இருக்காது. காரணம் முதலில் எந்த தொழில் தொடங்கினாலும் அதில் சிறிய அளவு முதல் போட்டு அதில் நன்றாக இருந்தால் தான் அதிக முதலீடே போடுவார்கள். ஆகவே நாம் செய்ய போகும் மசாலா பொருட்கள்,
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- மல்லி தூள்
- மிளகு தூள்
இந்த பொருட்களை முதலில் செய்து விற்கலாம் வாங்க..!
முதலீடு:
- Masala Making Machine = 17,000/-
- மசாலா பொருட்களுக்கு = 10,000/-
- வாடகை / EB = 10,000/-
- மற்ற பொருட்கள் = 5,000/-
இந்த ஒரு பொருள் போதும் தேவையான அனைத்து மசாலா பொருட்களை செய்ய. இந்த மிஷினில் செய்யக்கூடிய பொருட்கள் சேர்த்து மிஷினை ON செய்தால் போதுமானது. அதுவே அனைத்தையும் அரைத்து கொடுத்து விடும்.
இதனை தொடர்ந்து உங்களுடைய தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்தால் நீங்கள் அனைத்து பொருட்களையும் அரைத்து பாக்கெட் செய்து விற்பனை செய்யலாம்.
முதலில் பாக்கெட் செய்யும் போது சாதாரணமான பாக்கெட் போடுவீர்கள். ஆனால் சாதாரணமான பாக்கெட்டை விட லோகோ வைத்து பாக்கெட் செய்தால் பார்ப்பவர்களுக்கு ஒரு விதமான நம்பிக்கை வரும் வாங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் அதேபோல் வாங்கியவர்கள் மறுமுறை ஞாபகம் வைத்துக்கொள்ள பொருட்களில் ஒரு லோகோ வேண்டும். அதனால் பாக்கெட்டில் அது முக்கியம் தேவை.
லாபம்:
மஞ்சள் தூள் 50 கிராம் பாக்கெட் 10 ரூபாய் என்றால். ஒரு கடைக்கு 100 பாக்கெட் விற்றால் 1,000 ரூபாய் கிடைக்கும். இதே போல் மற்ற பொருட்களை விற்றால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை கணக்கிட்டு பாருங்கள் உங்களுக்கு சரி என்றால் இந்த தொழிலை செய்து நல்ல லாபம் பார்க்க முடிவும்.
ஒரே Transaction-யில் 80,000 ரூபாய் லாபம் அருமையான தொழில்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |