உங்கள் பணத்தை முதலீடு செய்யும்போது இந்த தவறுகளை செய்யாதிங்க..!

Money Investment Tips in Tamil

Money Investment Tips in Tamil

பொதுவாக யாராக இருந்தாலும் சரி தனது முதலீட்டுப் பயணத்தை புதிதாக தொடங்கும்போது ஒரு ஐடியா கிடைக்காதது போல் குழப்பமாக இருப்பது இயல்புதான். ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களோ தபால் அலுவலக சிறு சேமிப்பு திட்டங்கள், ஃபிக்சட் டெபாசிட் என பிரச்சனை இல்லாமல் போய்விடுவார்கள். ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்களுக்குதான் பிரச்சனையே. ரிஸ்க் அதிகமாக எடுக்கும் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட விஷயங்களில் முதலீடு செய்வார்கள். பங்குச் சந்தை என்பது பணம் கொடுக்கும், பணம் எடுக்கும் ரைண்டு பண்புகளும் கொண்டது. பங்குச் சந்தையில் பணம் சம்பாதித்தவர்களும் இருக்கின்றன,பணத்தை இழந்தவர்களும் இருக்கின்றன.

பங்குச் சந்தை நிலையே இப்படி இருக்கும்போது, பங்குச் சந்தை பெயரை வைத்து மோசடி செய்யும் கும்பல்களும் ஏராளம். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி ஆட்டையை போடும் கூட்டங்களும் இருக்கின்றன. இதற்கு மத்தியில் ஒரு சாதாரண சிறு முதலீட்டாளர் தனது பணத்தை எப்படி பாதுகாப்பாக முதலீடு செய்வது? இதற்கு தேசிய பங்குச் சந்தை (NSE) ஆறு முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளது.

தினசரி லாபம் தரும் தொழில்களின் பட்டியல்

Money Investment Tips in Tamil:-

எந்தவொரு அடிப்படையும் இல்லாமல் மிக அதிக லாபம் கிடைக்கும் என கூறும் திட்டங்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பங்குச் சந்தை மற்றும் டெரிவேடிவ்ஸ் சந்தையில் மிக அதிக லாபம் உத்தரவாதமாக கிடைக்கும் என உறுதியளிப்போரை நம்ப வேண்டாம்.

எந்த பொருளில் அல்லது திட்டத்தில் முதலீடு செய்கிறோம் என்பது பற்றிய முழு அறிவும் வேண்டும்.

செபி ஒழுங்குமுறை இல்லாத எந்தவொரு நிறுவனத்தின் திட்டங்களிலும் முதலீடு செய்ய வேண்டாம்.

பங்கு புரோக்கர்களுக்கு ரொக்கமாக பணம் செலுத்தக்கூடாது.

ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸில் (F&O) முதலீடு செய்வதில் நிறைய ரிஸ்க் இருக்கின்றன. எனவே, இதுபற்றியும், இதில் உள்ள ரிஸ்க் பற்றியும் தெரிந்துகொண்ட பிறகே முதலீடு செய்ய வேண்டும்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Siru Tholil Ideas in Tamil