High Demand Business Ideas
இன்றைய காலத்தை பொறுத்தவரை எண்ணற்ற தொழில்கள் உள்ளது. அத்தகைய தொழில்கள் அனைத்தும் நிறைய வகையில் வருமானம் மற்றும் லாபம் என இரண்டினையும் கொடுக்கக்கூடியதாக உள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில் நிறைய நபர்கள் இன்னும் படிப்பிற்கு ஏற்ற மாதிரியான வேலை கிடைக்கவில்லை என்று புலம்புகிறார்கள். அதிலும் சிலர் படித்து விட்டு வீட்டிலேயே சும்மாக தான் உள்ளார்கள். ஆனால் இந்த நவீன காலத்தை பொறுத்தவரை எண்ணற்ற வேலைகள் படித்த படிப்பிற்கு ஏற்ற மாதிரியும் மற்றும் Part Time வேலையாகவும் உள்ளது. அந்த வகையில் இன்று படிப்பிற்கு சம்மந்தப்பட்ட மாதிரியான ஒரு தொழிலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இந்த தொழிலை யார் செய்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. ஏனென்றால் திறமையினை யார் வெளிப்படுத்துகிறார்கள் என்பதே முக்கியம். சரி வாருங்கள் அத்தகைய தொழிலை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
வீட்டில் இருந்து என்ன மாதிரியான தொழில் செய்யலாம்:
பொதுவாக ஆண் மற்றும் பெண் என இருவருக்கும் கல்வி தான் முக்கியமான ஒன்றாக உள்ளது. அத்தகைய கல்வியினை அனைவரும் எளிமையாக படிப்பது இல்லை. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பாடத்தின் மீது ஆர்வம் இருக்கும்.
ஆனால் கணக்கு பாடம் என்பது எல்லோருக்கும் எளிமையாக புரிவது இல்லை. ஒரு சிலர் தான் இதில் நன்றாக வல்லமை பெற்றவராக இருக்கிறார்கள். அதனால் இன்று Maths Tuition Centre மட்டும் வைத்தால் போதும் இதன் மூலம் கைநிறைய சம்பாதிக்கலாம். இதற்கு முக்கியமாக நீங்கள் Bsc Maths, Msc Maths ஆகிய படிப்புகள் படித்து இருக்க வேண்டும் அல்லது கணக்கு நன்றாக கற்றுக்கொடுக்கும் திறன் மட்டும் இருந்தால் போதும்.
மேலும் இந்த தொழிலுக்கான முதலீடு என்று பார்த்தால் எதுவும் தேவைப்படாது.
தேவைப்படும் இடம்:
இத்தகைய Tuition Centre-ஐ தொடங்குவதற்கு உங்களுடைய வீட்டில் ஒரு சிறிய பகுதி மட்டும் இருந்தால் போதும். அதன் பிறகு உங்களுடைய Tuition Centre நன்றாக பிரபலம் ஆனது தனி ஒரு இடத்தில் அமைத்து கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்⇒ இத்தொழிலில் 2000 ரூபாய் முதலீடு போட்டால் போதும் மாதம் 80 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்..
வருமானம் பெறும் முறை:
முதலில் உங்களுடைய வீட்டிற்கு அருகில் இருக்கும் மாணவர்களுக்கு Tuition Centre இருப்பதை தெரியப்படுத்தி அந்த மாணவர்களுக்கு டீயூசன் கற்று கொடுங்கள். பின்பு அதனை பார்த்து உங்களுடைய ஊருக்கு அருகில் உள்ள நபர்களும் அவர்களே வந்து கற்று கொள்வார்கள்.
மேலும் நீங்கள் கற்று கொடுக்கும் கணக்கு பாடமானது மாணவர்களுக்கு தெளிவாக புரியும் வகையில் இருந்தால் மட்டும் போதும்.
இத்தகைய தொழிலுக்கான மாதந்திர வருமானம் என்று பார்த்தால் ஒரு நபருக்கு 450 ரூபாய் முதல் 500 ரூபாய் என்று வைத்தாலும் கூட தோராயமாக 20,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
இப்போது Trending-ஆ உள்ள இந்த தொழிலை செய்தால் ஒரு நாளைக்கு மட்டுமே 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |