5000 முதலீட்டில் நாப்கின் தயாரிப்பு தொழில் (Napkin business ideas in tamil)..!
மாதவிடாய் நாட்களில் பயன்படுத்தும் நாப்கின்கள் தரமானதாகவும், விலை மலிவாவும் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். எனவே இது போன்று தரமான நாப்கின்கள் பெண்கள் வீட்டில் இருந்தே தயாரித்து விற்பனை செய்தால் நிச்சயமாக நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த தயாரிப்பு தொழிலை பெண்கள் வீட்டில் இருந்தபடியே ஒய்வு நேரங்களில் தயார் செய்து விற்பனை செய்யலாம்.
இங்கு நாப்கின் தயாரிக்கும் முறை மற்றும் அதனை எப்படி விற்பனை செய்யலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க…
பெண்கள் வீட்டில் இருந்து செய்யும் தொழில்கள்..!
நாப்கின் தயார் செய்ய தேவைப்படும் மூலப்பொருட்கள்:
- மூலிகை பொடி (திரிபலா, கற்றாழை, வேப்பிலை போன்ற மூலிகைகளை பொடி செய்து கொள்ளவும்)
- பருத்தி பஞ்சி
- பருத்தி துணி
- தைப்பதற்கு நூல்
மூலிகை நாப்கின் தயாரிக்கும் முறை:-
நாப்கின் தயாரிக்கும் முறை அளவிற்கு தகுந்தது போல் காட்டன் துணி மற்றும் காட்டன் துணியை நறுக்கிக்கொள்ளவும்.
அதன் பிறகு நறுக்கிய காட்டன் துணியின் மீது காட்டன் பஞ்சினை வைக்கவும், பின்பு தயார் செய்து வைத்துள்ள மூலிகை பொடியினை இந்த பஞ்சியின் மீது சிறிதளவு தூவிவிடவும்.
பிறகு மறுபடியும் காட்டன் பஞ்சி மற்றும் காட்டனை துணியை வைத்து. தையல் மிஷினில் நான்கு பக்கங்களிலும் மடித்து தக்க வேண்டும். இவ்வாறு ஒரு மூலிகை நாப்கின் தயார் செய்ய ஆகும் செலவு ரூபாய் 20 மட்டுமே ஆகும்.
மேலே கட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் சைடில் பட்டன் வைத்து தைய்த்தும் விற்பனை செய்தால் அதிகம் விற்பனை ஆகும்.
ஸ்க்ரீன் பிரின்ட்டிங் பெண்களுக்கு ஏற்ற சுயதொழில்..!
முதலீடு:
5000 முதலீட்டில் அனைத்து பெண்களும் வீட்டிலிருந்து செய்யக்கூடிய ஒரு சிறந்த தொழில் இதுவே.
இயந்திரம்:
தையல் மிசின்.
கட்டிட அமைப்பு:
இந்த மூலிகை நாப்கின் தயாரிப்பு தொழில் துவங்க தனியாக இடம் வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் ஒரு சிறிய அறை இருந்தாலே போதுமானது.
சந்தை வாய்ப்பு:
மாதவிட காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் நவீன நாப்கின்களின் விலை அதிகம் என்பதுடன், சுத்தம் என்ற பெயரில் இவற்றில் ஏராளமான ரசாயனங்கள் சேகரிக்கப்படுவதால் கருப்பை நோய்களும் உருவாகிறது. எனவே உடலுக்கு எந்த ஒரு பிரச்சனையையும் ஏற்படுத்தாத இந்த மூலிகை நாப்கின் தயார்செய்து விற்பனை செய்யலாம். அதாவது உங்கள் வீட்டு பகுதியில் உள்ளவர்களிடம் விற்பனை செய்யுங்கள், பின்பு அவர்கள் மூலம் பல வடிக்கையாளர்களை பிடித்து விற்பனை செய்யுங்கள். வெறும் 5000 முதலீட்டில் பெண்கள் வீட்டில் இருந்து விற்பனை செய்து நல்ல வருமானத்தை பார்க்கலாம்.
மூலிகை குளியல் பொடி தயாரிக்கும் முறை..!
மூலிகை நாப்கின் பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்கள்:
பெண்கள் இந்த மூலிகை நாப்கினை பயன்படுத்துவதினால் உடல் குளிர்ச்சியாக இருக்கும், வெள்ளை படுத்தல் பிரச்சனை சரியாகும், எரிச்சலை ஏற்படுத்தாது, கருப்பை பிரச்சனை சரியாகும்.
குறிப்பு: பயன்படுத்திய நாப்கினை அகற்றிவிட்டு, அதனை நன்கு துவைத்து வெயிலில் நன்றாக காயவைத்து, மறுசுழற்சிக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | புதிய தொழில் பட்டியல் 2019 |