வீட்டில் இருந்து செய்யும் தொழில்கள்
வணக்கம் நண்பர்களே இன்றைய வியாபார பதிவில் ஒரு அருமையான தொழில் பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். இந்த தொழிலை வீட்டில் இருந்தபடியே யார் வேண்டுமானாலும் செய்யலாம், புதிதாக என்ன தொழில் செய்யலாம் என்று நினைப்பவர்கள் இந்த தொழில் செய்வதன் மூலம் அதிகமான லாபத்தை எதிர்பார்க்கலாம்.
பொதுவாகவே நாம் முதலில் எந்த தொழிலை செய்ய தொடங்கினாலும், சில நாட்கள் நஷ்டம் தான் ஏற்படும். அதன் பிறகு அதனுடைய தேவைகள் அதிகமான பிறகு தான், அவை வளர்ச்சியடைய தொடங்கும், மேலும் அவை என்ன தொழில் என்றும், அந்த தொழில் தொடங்க நமக்கு எவ்வளவு முதலீடுகள் தேவைப்படும் என்றும் நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாங்க.
மழைக்காலத்திற்கு ஏற்ற இந்த பிஸ்னஸ் செய்தால் தினமும் 5,500 ரூபாய் வரையும் வருமானம் பெறலாம் |
Green Chili Powder Making Business in Tamil:
இன்றைய பதிவில் நாம் தெரிந்துகொள்ளப் போகின்ற பிஸ்னஸ் என்னவென்றால், சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தும் பச்சை மிளகாய் பவுடர் எப்படி தயாரித்து, அவற்றை விற்பனை செய்வது என்றுதான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். இந்த Green Chili Powder பெரும்பாலும் ஹோட்டல் போன்ற உணவகங்களுக்கு அதிகமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமின்றி சாஸ் தயாரிப்பதற்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் இவற்றை எப்படி தயாரித்து விற்பனை செய்வது என்று தெரிந்துகொள்வோம்.
தேவைப்படும் மூலப்பொருள்:
உங்களுக்கு இந்த பச்சை மிளகாய் பவுடரை தயாரிப்பதற்கு தேவைப்படும் மூலப்பொருள் என்னவென்றால், வெறும் பச்சை மிளகாய் மட்டும் தான், இந்த பச்சை மிளகாய்களை நீங்கள் மொத்தமாக உங்கள் ஊரில் இருக்கும் மார்க்கெட்டில் குறைந்த அளவில் வாங்கிக் கொள்ளலாம்.
அடுத்ததாக பச்சை மிளகாய் பவுடர்களை பேக்கிங் செய்வதற்கு, பேக்கிங் கவர்கள் தேவைப்படுகின்றன, அவற்றை நேரடியாகவும் வாங்கிக் கொள்ளலாம், அல்லது ஆன்லைன் மூலம் கூட வாங்கிக் கொள்ளலாம்.
மேலும் இந்த கவர்களை பேக்கிங் செய்வதற்காக Sealing Machine தேவைப்படுகிறது. இவற்றை நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் குறைந்த அளவில் வாங்கிக் கொள்ளலாம். இதனுடைய ஆரம்ப விலை 807 ரூபாய் மட்டும் தான்.
வீட்டில் தேவையில்லாத இடத்தில் இந்த தொழிலை செய்தால்..! நல்ல லாபம் கிடைக்கும்..! |
பச்சை மிளகாய் பவுடர் தயாரிக்கும் முறை:
பச்சை மிளகாய் பவுடரை தயாரிப்பதற்கு, முதலில் பச்சை மிளகாய்களை எடுத்துக் கொள்ள வேண்டும், அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் அதனை நன்றாக கழுவ வேண்டும். கழுவிய பச்சை மிளகாய்களை 3 நாள் காயவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு உங்கள் வீட்டில் இருக்கும் மிக்ஸியில் அரைத்த கொள்ள வேண்டும், அப்படியில்லை என்றால் மில்லில் கூட அரைத்து கொள்ளலாம்.
தேவைப்படும் முதலீடு மற்றும் விற்பனை செய்யும் முறை:
பச்சை மிளகாய் பவுடர்களை தயாரிப்பதற்கு தேவைப்படும் முதலீடு 2000 ரூபாய் இருந்தால் மட்டுமே போதும், இந்த பவுடரை சுலபமாக தயாரிக்கலாம். புரியும் படி சொல்ல வேண்டும் என்றால், 1 கிலோ பச்சை மிளகாயின் விலை 40 ரூபாய் மட்டும் தான், ஆனால் நமக்கு 1 கிலோ கிராம் பச்சை மிளகாய் பவுடர் மட்டும் தயாரிப்பதற்கு 3 கிலோ பச்சை மிளகாய் தேவைப்படுகிறது.
நாம் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் பவுடரை தயாரிப்பதற்கு மட்டும் மொத்தமாக ஆகும் செலவுகள் 150 ரூபாய் மட்டும்தான் ஆகும். ஆனால் இதனை விற்பனை செய்யும் பொழுது 700 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். ஆன்லைனில் பச்சை மிளகாய் பவுடர் 100 கிராம் மட்டுமே 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீங்கள் 100 கிராம் பாக்கெட்டில் 10 பாக்கெட் விற்பனை செய்யும் பொழுது, உங்களுக்கு “தினமும் 2000 ரூபாய்” கிடைக்கும்.
மேலும் நீங்கள் தயாரித்த பொருட்களை மளிகை கடை, ஹோட்டல், டிபார்ட்மென்ட் ஸ்டோர் மற்றும் ஆன்லைன் மூலம் கூட விற்பனை செய்யலாம். மேலும் இந்த பிஸ்னஸ் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்களும், இந்த பிசினஸை செய்து பாருங்கள்.
வீட்டில் இருந்தபடியே தினமும் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |