வெறும் ரூ.3000 முதலீட்டில் மாதம் ரூ.50000 வருமானம் தரும் சுயதொழில்..! Noodles Making Business in Tamil..!
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்றைய காலகட்டத்தில் சொந்தமாக ஏதாவது ஒரு தொழிலை ஆரம்பித்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும். ஆக சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் அனைவருக்கும் அன்பு வணக்கம்.. இன்று நாம் வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய ஒரு அருமையான சுயதொழில் வாய்ப்பை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று தான் நூடுல்ஸ். இந்த நூடுல்ஸை நாம் வீட்டில் தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம். சரி வாங்க இந்த தொழிலை எப்படி தொடங்கலாம், எவ்வளவு முதலீடு தேவைப்படும், என்னென்ன மூலப்பொருட்கள் தேவைப்படும் போன்ற அனைத்து தகவல்களையும் இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
இடம்:
இந்த தொழிலுக்கான இடம் என்று பார்க்கும் போது, இந்த நூடுல்ஸ் தயாரிப்பு தொழிலை நீங்கள் வீட்டில் இருந்தபடியே செய்யலாம். உங்களுடைய தொழில் நன்கு வளர்ச்சியடைந்த பிறகு தனியாக இடம் அமைத்து உங்கள் தொழிலை ஆரம்பிக்கலாம்.
மூலப்பொருட்கள்:
இந்த நூடுல்ஸ் தயாரிப்பு தொழிலுக்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் என்று பார்க்கும் போது கோதுமை, மைதா, Noodles Making Machine, Noodles Dryer Machine, Packing Machine, பேக்கிங் கவர் இவை அனைத்தும் தேவைப்படும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
500 ரூபாய் முதலீட்டில் மாதம் 1 லட்சம் வரை வருமானம் தரக்கூடிய அருமையான சிறுதொழில்..!
இயந்திரம் விலை:
Noodles Making Machine, Noodles Dryer Machine-யின் விலை நிலவரம் பொறுத்தவரை அதனுடைய மாடலை பொறுத்து மாறுபடும்.
நூடுல்ஸ் தயார் செய்யும் முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் 40 கிலோ மைதா மாவு, 30 கிலோ கோதுமை மாவு, 7 லிட்டர் தண்ணீர் சேர்த்து உதிரி உதிரியாக பிசைந்துகொள்ளுங்கள் (உதாரணத்திற்கு புட்டு மாவு பிசைவது போல் பிசைந்துகொள்ளுங்கள்), இவ்வாறு பிசைந்த மாவை பதப்படுத்தப்படும் இயந்திரத்தில் போட்டால் அந்த மாவை சன்னமாக தேய்த்து ரோல் செய்யும்.
பிறகு அதே இயந்திரத்தில் Setting-ஐ மாற்றி ரோல் செய்த மாவை திரும்பவும் எந்த இயந்திரத்தில் விட்டால் அந்த மாவனது நூடுல்ஸ் போன்று திரி திரியாக கட் செய்யப்பட்டு வரும். பின் அதனை எடுத்து 40 நிமிடம் வேகவைக்க வேண்டும். 40 நிமிடம் கழித்து வேகவைத்த நூடல்ஸை எடுத்து வெயிலில் நன்றாக காயவைத்து எடுக்க வேண்டும். பிறகு தேவையான அளவில் எடை போட்டு பேக்கிங் செய்து விற்பனை அனுப்பலாம்.
இது போன்று ராகி, கம்பு, தக்காளியில் செய்யப்படும் நூடுல்ஸ் தயார் செய்வதற்கும் இதே செய்முறை தான்.
இருப்பினும் சோயா நூடுல்ஸ் தயார் செய்ய மைதா, கோதுமை அளவுகளுடன் கூடுதலாக 30 கிலோ, 3 லிட்டர் தண்ணீர் தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும்.
கம்பு, ராகி நூடுல்ஸ் தயார் செய்ய மைதா கோதுமையுடன் 30 கிலோ கம்பு அல்லது ராகி சேர்த்து பிசைய வேண்டும். தக்காளி நூடுல்ஸ் தயார் செய்ய மைதா, கோதுமை மாவுடன் தக்காளி சாறு குறிப்பிட்ட அளவில் சேர்த்து பிசைய வேண்டும்.
தேவைப்படும் சான்றிதழ்:
இந்த தொழிலுக்கு தேவைப்படும் சான்றிதழ் என்று பார்க்கும் போது FSSAI சான்றிதழை அவசியம் பெற்றிருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கு GST சான்றிதழ் அவசியம் பெற்றிருக்க வேண்டும்.
கட்டமைப்பு:
இயந்திரங்களை நிறுவ, பொருட்களை இருப்பு வைக்க, பேக்கிங் செய்ய மற்றும் அலுவலகத்திற்கு 25X25 அடி நீளம், அகலம் உள்ள இடம் இருந்தல் வேண்டும்.
உற்பத்தி செலவு:
ஒரு நாளுக்கு 200 கிராம் கொண்ட 600 பாக்கெட்டுகள் வீதம் அதாவது 120 கிலோ தயாரிக்கலாம், ஒரு நாளுக்கு தயாரிப்பு செலவு என பார்த்தால் 120 கிலோ X ரூபாய் 25 = 3000 ரூபாய் செலவாகும். ஆக ஒரு நாளுக்கு 3000 ரூபாய் முதலீடு செய்தால் போதும் இந்த தொழிலை எளிதாக ஆரம்பித்துவிடலாம்.
அதுவே ஒரு மாதத்திற்கு என்று பார்க்கும் போது மூலப்பொருட்களுக்கு, இரண்டு ஊழியர்களுக்கான சம்பளம், மின் கட்டணம், இட வாடகை, போக்குவரத்து செலவு, ஆகியவற்றை சேர்த்தால் 1.25 லட்சம் வரை செலவு ஆகும்.
முதலீடு:
ஆரம்பத்தில் தொழில் தொடங்க தேவைப்படும் முதலீடு என்று பார்க்கும் போது இயந்திரம், கட்டமைப்பு, உற்பத்தி செலவு ஆகியவற்றை சேர்த்தால் மொத்தமாக 2 லட்சம் ரூபாய் முதலீடாக தேவைப்படும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இப்போது Trending-ஆ உள்ள இந்த தொழிலை செய்தால் ஒரு நாளைக்கு மட்டுமே 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!
சந்தைவாய்ப்பு:
அவசர மற்றும் அத்தியாவசிய உணவு தயாரிப்புக்கு நூடுல்ஸ் தேவை அதிகரித்து வருகிறது. எனவே மணம், சுவை, தரம் ஆகியவற்றை தவறாமல் கடைபிடித்தால் இந்த தோளில் நல்ல லாபத்தை பெறலாம். மக்களிடம் அதிகம் வரவேற்பு உள்ளதால் நீங்கள் மளிகை கடை, சூப்பர்மார்கெட், டிபார்மண்ட் ஸ்டோர் போன்ற இடங்களில் நேரடியாக விற்பனை செய்யலாம். அதேபோல் ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |