கொஞ்சம் இடம் இருந்தால் போதும் 30 நாளில் 2,00,000/- சம்பாதிக்கலாம்.. அருமையான தொழில்..!

Nursery Farm Business in Tamil

30 நாட்களில் 2,00,000 ரூபாய் லாபம் கொஞ்சம் இடம் இருந்தால் போதும்..!

வணக்கம் நண்பர்களே.. நீங்கள் புதிய தொழில் தொடங்கலாம்.. இன்றைய கால கட்டத்தில் பலர் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கின்றன. அந்த வகையில் இன்றைய பதில் 30 நாளில் இரண்டு லட்சம் வரை சம்பாதிக்கக்கூடிய ஒரு அருமையான தொழில் பற்றி தான் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். சொந்தமாக தொழில் துடைங்க நினைக்கும் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க அது என்ன தொழில் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

Nursery Farm Business in Tamil:

என்ன தொழில் அப்படின்னா நர்சரி கார்டன் தொழில் பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். இதன் தொழில் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும் அது எப்படி என்று கேட்குறீங்களா? ஆமாம் பிரண்ட்ஸ் விவசாயிகளுக்கு நாற்று கண் தயார் செய்து விற்பனை செய்யலாம், பிறகு நகர்ப்புறங்களில் கூட இப்பொழுது மடியில் தோட்டம் அமைத்து விவசாயம் செய்ய ஆரம்பித்துவிட்டனர் அவர்களுக்கும் நாற்று கண் தயார் செய்து விற்பனை செய்யலாம். இது தவிர இந்த உலகில் பலருக்கு வீட்டில் செடி, கொடி, மலர்களை வளர்க்க விருப்பம் இருக்கும் அவர்களுக்கும் செடி, கொடி, மலர் செடிகளை விற்பனை செய்யலாம். மேலும் விதைகள், இயற்கையா உரங்கள் போன்றவற்றையும் விற்பனை செய்யலாம் இதன் மூலம் நல்ல வருமானத்தை பெற்ற முடியும். சரி வாங்க இந்த தொழிலுக்கு தேவைப்படும் மற்ற விஷயங்களையும் படித்தறியலாம்.

இடம்:

உங்களுக்கு இந்த தொழில் செய்ய விருப்பம் இருந்தால் இரண்டு சென்ட் இடம் இருந்தாலே போதும். தாராளமாக இந்த தொழிலை தொடங்கலாம்.

தேவைப்படும் மூல பொருட்கள்:

  • 50% Green Shade Net (பசுமை குடில்)
  • 100% Green Shade Net (பசுமை குடில்)
  • விதைகள்
  • குழி தட்டு
  • பைப் டியூப்
  • உரம்
  • மண்

இவை அனைத்தும் தேவைப்படும். பசுமை குடிலை நீங்கள் நர்சரி கார்டன் வைக்கும் இடத்தில் தட்ப வெப்பத்தை பொறுத்து 50% அல்லது 100% Green Shade Net-ஐ தேர்வு செய்து கொள்ளலாம்.

முதலில் உங்கள் நர்சரியில் இதுமாதிரியான நாற்றுகளை பயிரிடப்போறிங்க என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். பிறகு நீங்கள் தேர்வு செய்யும் பயிரை பொறுத்து சில பயிர்களுக்கு பதியம் போட வேண்டும், சில பயிர்களுக்கு குச்சிகளை நட்டு வைக்க வேண்டும், சில பெயரிகளுக்கு ஓடுகட்டணும் இதுமாதிரியான விஷயங்கள் தான் இருக்கும்.

முதலீடு:

இந்த தொழில் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் உங்களுக்கு 50 ஆயிரம் வரை தேவைப்படும்.

வருமானம்:

உங்கள் பயிர்செய்த செடிகளை பொறுத்து விலை நிலவரம் மாறுபடும் பூச்செடிகளை பயிர் செய்துள்ளீர்கள் அதற்கு விலை மாறுபடும். குறிப்பாக 20 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யலாம் ஒரு செடிகளையே.

கன்றுகளை பயிர் செய்துள்ளீர்கள் என்றால் ஒரு சேடிக்கு 5 முதல் 10 ரூபாய் வரை விலை நிர்ணகிக்கலாம்.  செடிகளை பொறுத்து விலை மாறுபடும்.

ஒரு நாளைக்கு 100 ரோஸ் செடிகளை விற்பனை செய்தலே 5000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

இப்போது எல்லாம் பொது இடங்களில் மரக்கன்றுகளை நடுவதற்கு விரும்புகின்றன ஆக அவர்களிடம் ஆர்டர் பெற்று வேப்பிலை கன்று, தென்னை கன்று இது போன்ற கன்றுகளை விற்பனை செய்யலாம்.

மேலும் திருமணம், கூட்டம், கோவில் திருவிழா மற்றும் பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் மரக்கன்றுகளை வழங்குகின்றன ஆக அவர்களிடமும் ஆர்டர் பெற்று கன்றுகளை விற்பனை செய்யலாம் நல்ல வருமானத்தையும் பெறலாம்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👉👉 ரூ. 10,000 முதலீடு செய்தால் போதும் மாதம் 40,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022