பேப்பர் பென்சில் தயாரிப்பு தொழில் வருமானம்  தரும் சிறுதொழில்..!

சிறுதொழில்

பழைய பேப்பர்களிருந்து பேப்பர் பென்சில் தயாரிப்பு தொழில் நல்ல வருமானம்  தரும் சிறந்த சிறுதொழில் வாய்ப்பு !!!

Paper pencil making business

நீங்கள் புதிய தொழில் துவங்க ஆர்வம் உள்ளவரா..?
என்ன தொழில் செய்யலாம் என சிந்தித்து கொண்டிருப்பவரா..?
உங்களுக்கு ஓர் நற்செய்தி..!

சிறுதொழில்  பேப்பர் பென்சில் தயாரிக்கும் முறை:

புதிதாக தொழில் துவங்கும் நண்பர்களுக்கு ஒரு சிறந்த சிறுதொழில் பற்றிய நற்செய்தி… பென்சில் கொண்டு பேப்பரில் எழுதலாம். பேப்பரைக் கொண்டு பென்சில் உருவாக்க முடியுமா? ‘முடியும்’. இந்த முறை மூலம் பென்சில்கள் செய்வதற்காக ஆயிரக்கணக்கான மரங்களும் இயற்கை வளங்களும் அழிக்கப்படுவதைத் தடுக்கிறது. பேப்பரை கொண்டு பென்சில் தயார் செய்து விற்பனை செய்யலாமல்லவா இதனால் இயற்கைக்கு எந்த ஒரு கேடும் நிகழாது. அதேபோல் குப்பையில் சேரும் காகிதத்தை கொண்டு பேப்பர் பென்சில் செய்து அதையும் ஒரு சிறந்த சிறுதொழிலாக செய்யலாம் வாங்க…

பேப்பர் கப் தயாரிக்கும் முறை..! – அதிக வருமானம் தரும் தொழில்

 

சரி வாங்க காகித பேப்பரை கொண்டு பேப்பர் பென்சில் எப்படி செய்வது அதை எப்படி விற்பனை செய்வது என்று இந்த பகுதியில் நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

இடம்:

இந்த தொழில் துவங்குவதற்க்கு  10-க்கு 10-க்கு அடி கொண்ட ஒரு அறை இருந்தாலே போதும். மேலும் அதிக முதலீடு தேவையில்லை குறைந்த முதலீடு இருந்தாலே போதும் இந்த சிறுதொழிலை நாம் தயக்கம் இல்லாமல் துவங்கிவிட முடியும்.

சிறுதொழில்  பேப்பர் பென்சில் தயாரிக்கும் முறை:

இந்த சிறுதொழில் பொறுத்தவரை ‘‘ஒரு பென்சிலுக்குத் தேவையான பேப்பரை கட் பண்றது, பென்சில் உருண்டையா வர்றதுக்காக ரோல் பண்றது, ரோலாகி வந்ததை கட் பண்றது, பிசிறா இருக்குற மேல் பகுதியை பாலிஷ் பண்றது, தேவைப்பட்டா மேல் பகுதியில் பிளாஸ்டிக் லேமினேஷன் பண்றதுன்னு எல்லா வேலைகளையும் செய்ய இந்த மெஷின்ல 6 பகுதிகள் இருக்கு.

எல்லா பேப்பர்களையும் இதுல பயன்படுத்த முடியாது. ஏற்கனவே மறுசுழற்சி பண்ணாத பேப்பர் வேணும். அதுவும் ரொம்பப் பழசா இருக்கக் கூடாது.

3 மாசத்துல இருந்து 6 மாசம் வரை பழைய பேப்பர் ஓகே. பசையில ஊறிப் போயிடாத மாதிரி தரமான பேப்பராவும் இருக்கணும்.

பென்சில எழுது பொருளா இருக்குற கார்பன் குச்சி ரெடிமேடா கிடைக்குது. அதை பேப்பரின் ஒரு ஓரத்தில் பசை தடவி ஒட்டிட்டு மெஷினுக்கு உள்ளே விட்டால், உடனே அது பென்சிலா உருட்டப்பட்டு அடுத்தடுத்த கட்டங்களுக்குப் போய் ரெடியாகிடும். அதை வெயில்ல சில நாட்கள் காய வச்சா பேப்பர் பென்சில் ரெடி!’’

‘‘இந்த பேப்பர் பென்சில் ஒன்றை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவு சுமார் 2 ரூபாய் 75 பைசா. பிராண்டட் பென்சில்கள் விலை 5 ரூபாய்.

தரத்தைப் பொறுத்தளவில் ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனா பிராண்டட் பென்சில்ல பயன்படுத்துற மரங்களால் நாட்டின் இயற்கை வளத்துக்குத்தான் கேடு.

மேலும் இந்த சிறுதொழில் பற்றிய சில விவரங்களை அடுத்த பதிவில் தெரிந்து கொள்வோம் நண்பர்களே.. வணக்கம்..!

சுயதொழில் பேப்பர் கவர் தயாரிப்பு..! சூப்பர் வருமானம்..!
இது போன்று தயாரிப்பு தொழில், சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> புதிதாக என்ன தொழில் செய்யலாம்..!