ஒரு நாளுக்கு லட்ச கணக்கில் லாபம் தரும் சுயதொழில்
வணக்கம்.. அனைவருக்கும் சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இருப்பினும் என்ன தொழில் செய்தால் லாபம் பெற முடியும் என்று பல யோசனைகளை பலரிடம். இருக்கும் அவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கும் வகையில் நமது பொதுநலம் பதிவில் தினமும் தொழில் சார்ந்த யோசனைகளை வழங்கி வருகினரும் அந்த வகையில் இந்த பதிவில், குறைந்த முதலீட்டில் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கில் லாபத்தை தரும் இரு அருமையான தொழிலை பற்றி தான் பார்க்கப்போகிறோம். இதற்கு நீங்கள் அதிக முதலீடு போட வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் இருக்காது. அதுவும் உங்களிடம் 10-க்கு 10 இடம் இருந்தாலே போதும். சரி வாங்க அது என்ன தொழில் என்று பார்க்கலாம்.
Paper Tube Making Business in Tamil:
இன்று நாம் தெரிந்துகொள்ள போகிற தொழில் என்ன அப்படின்னா Paper Tube தொழில் வாய்ப்பை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த பேப்பர் டியூப் பிசினஸ் பொறுத்தவரை சந்தையில் அதிக வரவேற்பு உள்ள தொழில் என்று சொல்லலாம். இதுமட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கும் இந்த பேப்பர் டியூப் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
குறிப்பாக தையலுக்கு பயன்படுத்தக்கூடிய நூல் கண்டுகளுக்கு இந்த Paper Tube தான் பயன்படுத்தப்படுகிறது. ஆக சின்ன நூல்கண்டுகள் முதல் பெரிய பெரிய டெக்ஸ்டைல்ஸ்க்கு அனுப்ப கூடிய பெரிய நூல் கண்டுகளுக்கும் இந்த Paper Tube மிகவும் பயன்படுகிறது. அது மட்டும் இல்லாமல் துணிக்கடைகளில் இருக்கும் பிளவுஸ் பிட், லைனிங் பிட் ஆகியவை ரோல் செய்யப்பட்டு இருக்கும். அந்த துணிகளை ரோல் செய்வதற்கும் இந்த Paper Tube தான் பயன்படுகிறது. ஆக நீங்கள் இந்த தொழிலை செய்வதன் மூலம் தினம்தோறும் நல்ல வருமானத்தை பெற முடியும்.
இது மட்டும் இல்லாமல் பட்டாசு தயார் செய்வதற்கும் இந்த Paper Tub தேவைப்படுகிறது, அகர்பத்தி தயார் செய்து அவற்றை பேக்கிங் செய்வதற்கும் இந்த Paper Tube தேவைப்படுகிறது. ஆக பேக்கிங் துறையில் இந்த தொழில் சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது தொழில் தான். அதிக Demand உள்ள தொழில் என்பதால் அதிக முதலீடு வேண்டுமோ என்று யோசிக்கலாம். சரி வாங்க இந்த தொழிலுக்கான முதலீடு என்ன என்பதை இப்பொழுது பார்த்துவிடலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 ஒரு நாள் மட்டும் வேலை செய்தால் 1,00,000/- வரை சம்பாதிக்கலாம். அது என்ன தொழில் தெரிஞ்சிக்கோங்க
தேவைப்படும் இயந்தியாம்:
இந்த பேப்பர் டியூபை தயார் செய்வதற்கு Paper Tube Making Machine என்று இருக்கிறது. இதன் விலை கூட 50 ஆயிரத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. கிட்டத்தட்ட 3.5 லட்சம் ரூபாய் வரை Paper Tube Making Machine விற்பனை செய்யப்படுகிறது.
மூலப்பொருட்கள்:
பழைய பேப்பர், அட்டைகள் இவைகள் மட்டும் தான் தேவைப்படும். இது ஒரு மறுசுழற்சி முறையில் செய்ய கூடிய தொழில் என்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிட்டது.
உற்பத்தில்:
Paper Tube Making Machine-யில் செமி ஆட்டோமேட்டிக் மிஷின் வாங்குறீங்க அப்படின்னா.. ஒரு நாளைக்கே நீங்கள் ஒரு லட்சம் Paper Tube வரை உற்பத்தி செய்துவிட முடியும்.
இதன் அடர்த்தி தன்மையை பொறுத்து ஒரு Paper Tube-யினை நீங்கள் சந்தையில் நீங்கள் 2 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்துவிட முடியும்.
ஆக ஒரு வாரத்தில் நீங்கள் தயார் செய்த Paper Tube-யினை நீங்கள் விற்பனை செய்துவிட்டு என்றால் நீங்கள் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை வருமானம் பெற முடியும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 பெண்கள் வீட்டில் இருந்து கொண்டே இந்த தொழில் செய்வதால் மாதம் ரூ. 30,000 வரை சம்பாதிக்கலாம்..!
முதலீடு:
இந்த Paper Tube Making Business செய்வதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும் என்றால்..
இயந்திரம்: Paper Tube Making Machine-யில் செமி ஆட்டோமேட்டிக் மிஷின் வாங்குறீங்க அப்படின்னா அதற்கு 3.5 லட்சம் வரை தேவைப்படும்.
மூலப்பொருள்கள்: பல பேப்பர் மற்றும் அட்டைகளை வாங்க ஒரு 50 ஆயிரம் தேவைப்படும்.
ஆக முதலீடாக உங்களுக்கு 4 லட்சம் வரை தேவைப்படும். இந்த தொகையை நீங்கள் ஒரே மாதத்திலேயே திரும்ப பெற்றுவிட முடியும்.
இடம்:
உங்களிடம் 10-க்கு 10 இடம் வசதி இருந்தாலே போதும் தினமும் லட்சக்கணக்கில் நல்ல வருமானத்தை பெற முடியும்.
சந்தை வாய்ப்பு:
நூல் உற்பத்தி செய்யும் இடங்கள், துணிகளை உற்பத்தி செய்யும் இடங்கள், அகர்பத்தி தயார் செய்யும் இடங்கள் மற்றும் பேக்கிங் செய்யும் அனைத்து துறைகளிலும் நீங்கள் ஆர்டர் பெற்றுவிட்டிகள் என்றாலே போதும் தினமும் நன்றாக சம்பாதித்துவிடலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |