பேப்பர் கப் தயாரிக்கும் முறை..! – அதிக வருமானம் தரும் தொழில்

Advertisement

பேப்பர் கப் தயாரிப்பு..!

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் பிளாஸ்ட்டிக் பொருட்களை தவிர்த்து அதற்கு மாற்றாக பல பொருட்கள் தற்போது விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளன. இந்த பொருட்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் காணப்படுகின்றது. அந்த வகையில் பேப்பர் கப் (paper cup) தயாரிப்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.

அதுவும் தமிழக அரசு தற்போது 2019-யில் இருந்து பிளாஸ்ட்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று தடை விதித்துள்ளதால், இவற்றின் தேவை அதிகரித்து கொண்டுதான் இருக்கும். எனவே தயக்கம் இன்றி இந்த தொழில் துவங்கலாம்.

அதுவும் உங்கள் வீட்டில் இருந்தே இந்த தொழிலை செய்தாலும் அதிக வருமானம் பெற இயலும்.

சரி வாங்க இந்த பேப்பர் கப் (paper cup) தொழில் எப்படி செய்யலாம் என்று இப்போது நாம் காண்போம்.

பேப்பர் கப் தயாரிக்க தேவைப்படும் இயந்திரங்கள்:

  • வெட்டும் இயந்திரம் (Die cutting machine)
  • காகித கப் உருவாக்கும் இயந்திரம் (Paper cup forming machine)
  • அச்சிடும் இயந்திரம் (Printing machine)
  • எண்ணும் இயந்திரம் (Counting machine)
  • பேக்கிங் செய்யும் இயந்திரம் (Packing machines)

தயாரிக்கும் முறை:

அச்சிடப்பட்ட PE பூசிய காகித தாள்களை வெட்டும் இயந்திரத்துக்குள் செலுத்தும் போது அது கப் வடிவத்தில் அதனை வெட்டி அனுப்புகின்றது.

உங்களிடம் அச்சிடும் இயந்திரம் சொந்தமாக இருந்தால் நீங்களே உங்கள் வாடிக்கையாளர்களுக்கு விரும்பிய வடிவத்தில் அச்சிட்டும் கொள்ளலாம்.

பின்னர் காகித கப் உருவாக்கும் இயந்திரத்துக்குள் செலுத்தி எடுக்க வேண்டும். இப்பொது பேப்பர் கப் தயாராகிவிட்டது.

பேப்பர் கப்களை எண்ணும் இயந்திரத்தின் மூலம் எண்ணி அதனை அப்படியே பேக்கிங் செய்யும் இயந்திரத்துக்குள் அனுப்ப வேண்டும்.

இப்போது பேப்பர் கப் விற்பனைக்கு தயாராக உள்ளது.

newவீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஏற்ற சுயதொழில்..!

சந்தை வாய்ப்பு:

டீக்கடைகளில் கண்ணாடி கிளாஸ்களை பராமரிப்பதில் உள்ள சிரமத்தின் காரணமாக பேப்பர் கப்கள் மிகச் சிறந்த மாற்றாகி உள்ளது. பெரும்பாலான அலுவலகங்களும் பேப்பர் கப்களுக்கு மாறிவிட்டதால், இதற்கான சந்தை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சரியான தேர்வாக இருக்கிறது இந்த பேப்பர் கப் தயாரிப்பு. உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்த பிஸினஸில் வாய்ப்புகளும் அதிகம்.

முதலீடு:

இத்தொழிலைத் தொடங்கும் முதலீட்டாளர்கள் கையிலிருந்து ஐந்து சதவிகிதத் தொகையை முதலீடு செய்தால் போதுமானது. மீதி 95 சதவிகித தொகையை வங்கிக் கடன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். குறைந்தபட்சம் ஆறரை லட்சம் ரூபாய் முதலீடாகக் கொண்டு இத்தொழிலைத் தொடங்கலாம்.

மூலப்பொருள்:

இதன் முக்கிய மூலப்பொருளான பேப்பர் தமிழ்நாட்டிலேயே கிடைக்கிறது. இந்த பேப்பர் ரோலின் தரத்தைப் பொறுத்துத்தான் பேப்பர் கப்பின் தரமும் இருக்கும். ஜி.எஸ்.எம். அளவுகளைப் பொறுத்தே இதன் தரம் இருக்கும்.

உற்பத்தித் திறன்:

ஆண்டுக்கு 300 நாட்கள், நாள் ஒன்றுக்கு ஒரு ஷிஃப்ட் வீதம் வேலை பார்த்தால், 75 லட்சம் கப்களைத் தயாரிக்கலாம். இதற்கான மூலப்பொருளான ஒரு டன் பேப்பருக்கு 74,000 ரூபாய் செலவாகும்.

அரசு மானியம்:

பேப்பர் கப் (paper cup) தயாரிப்பு பிரதமரின் சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வருவதால் மானியம் கிடைக்கிறது. முதலீட்டு தொகையில், நகரம் எனில் 25%மும், கிராமம் எனில் 35 சதவிகிதமும் மானியம் கிடைக்கும். உதாரணமாக பத்துலட்ச ரூபாய் முதலீடு என்றால் இரண்டரை லட்ச ரூபாய் மானியமாக கிடைக்கும். இந்த மானியத் தொகையை நமது வங்கிக் கணக்கில் வரவு வைத்து விடுவார்கள். நான்கு வருடங்களுக்கு பிறகு இத்தொகையை நமது கடனில் வங்கி கழித்துக் கொள்ளும். மேலும் நாம் வங்கியில் வாங்கியிருக்கும் கடனில் மானியத் தொகை போக மீதமுள்ள தொகைக்கு வட்டி கட்டினால் போதுமானது.

newசுயதொழில் – நல்ல லாபம் தரும் பேப்பர் தட்டு தயாரிப்பு !!!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement