வேலை 2 மணிநேரம் லாபம் 3 ஆயிரம் தரும் சுயதொழில்..! Printing business ideas..!
வணக்கம் நண்பர்களே..! இன்று நாம் முற்றிலும் புது விதமான சுயதொழில் வாய்ப்பை பற்றித்தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதாவது magic pillow Printing business ideas தயாரிப்பு பற்றி தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த தயாரிப்பு தொழில் பொறுத்தவரை தற்பொழுது ட்ரெண்டிங்கில் உள்ள தொழில் என்பதால் தயக்கம் இல்லாமல், இந்த தொழிலை செய்யலாம். குறிப்பாக மக்கள் தற்பொழுது வித்தியாசமான முறையில் தங்கள் நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பிறந்தநாள், திருமணம் அல்லது இல்ல விசேஷங்களுக்கு பரிசளிக்க இதுமாதிரியான Magic pillow-வில் அவர்களது உருவத்தை பதித்து, அவர்களுக்கு பரிசளித்து தங்களுடைய அன்பினை வெளிப்படுத்துகின்றன. எனவே இந்த magic pillow printing தயாரிப்பு தொழிலுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளதால், இந்த புதிய தொழிலை செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.
டிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் பிசினஸ் சுயதொழில் ..! |
சரி இந்த Magic pillow Printing business ideas தயாரிப்பு தொழில் பற்றி இந்த பதிவில் சில விவரங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..
தேவைப்படும் இயந்திரம்:-
இந்த மேஜிக்கல் பில்லோ உற்பத்தி செய்ய printing machine, sublimation printing machine & ஒரு சிறிய system இந்த மூன்று இயந்திரங்கள் தேவைப்படும். இந்த மூன்று இயந்திரங்களையும் குறைந்தபட்சம் ரூபாய் 50,000/- யில் வாங்கலாம். அதுவும் அனைத்து வகை ஆன்லைன் ஸ்டோரிலும் ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம்.
தேவைப்படும் மூலப்பொருட்கள்:-
இந்த மேஜிக்கல் பில்லோ தயார் செய்ய தேவைப்படும் மூலப்பொருட்கள் என்று பார்த்தால் Sublimation Magic Pillow, sublimation ink, sublimation paper, பஞ்சி இந்த நான்கு பொருட்களும் தேவைப்படும். இந்த மூலப்பொருட்களை அனைத்து வகை ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கின்றது அங்கு ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம்.
தயாரிக்கும் முறை:-
வாடிக்கையாளர்கள் கொடுக்கும் புகைப்படங்களை வாங்கி அவற்றை பிரிண்டிங் இயந்திரத்தில் sublimation paper-ஐ பொருத்தி பிரிண்ட் செய்து கொள்ளுங்கள்.
பின் Sublimation Magic Pillow-வில், பிரிண்ட் செய்த புகைப்படத்தை நன்றாக ஒட்டி sublimation printing machine-ன் மூலம் ஹீட் செய்வதன் மூலம் Sublimation Magic Pillow-வில் புகைப்படம் பிரிண்ட் செய்யப்படும். இப்பொழுது மேஜிக்கல் பில்லோ தயார். இவ்வாறு தயார் செய்த ஒரு மேஜிக்கல் பில்லோவினை 750 ரூபாய் வரை வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்யலாம்.
இந்த இயந்திரத்தை பயன்படுத்தி பலவகையான பொருட்களிலும் புகைப்படங்களை பிரிண்ட் செய்யலாம். அதாவது ஸ்கூல் பேக், டீ கப், கீசெயின் போன்ற பொருட்களிலும் புகைப்படங்களை பிரிண்ட் செய்து கொடுக்கலாம். இதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.
டி ஷர்ட் பிரிண்டிங் தொழில் நல்ல வருமானம்..! |
சந்தை வாய்ப்பு:-
மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில், பள்ளி மற்றும் கல்லூரி உள்ள இடங்களில் இந்த தொழிலை ஆரம்பிக்கலாம். அதுவும் 10க்கு 10 அளவு கொண்ட ஒரு சிறிய அளவில் கொண்ட ஒரு அரை இருந்தால் போதும்.
ஆன்லைனில் தங்களுக்கென ஒரு புதிய வெப்சைட் ஆரம்பித்து அதன் மூலமாகவும், வாடிக்கையாளர்களை பெறலாம்.
உங்கள் ஊரில் உள்ள போட்டோ ஸ்டுடியோகளுக்கு நேராக சென்று அங்கேயும் ஆர்டர்களை பெறலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |