மாதம் ரூ. 40,000/- சம்பாதிக்க 5 சூப்பரான பிசினஸ் | Second Hand Items Business Ideas in Tamil

Second Hand Items Business Ideas in Tamil

பழைய பொருள் விற்று லாபம் பெற | Second Hand Items for Sale in Tamil

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவருக்குமே சொந்தமாக தொழில் செய்து சம்பாதிக்க நாட்டம் அதிகரித்து விட்டது. சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பதை மட்டும் வைத்திருக்க கூடாது. அதற்கான முயற்சியையும், எது மாதிரியான தொழிலை செய்ய போகிறீர்களோ அதற்கான ஐடியாக்களை நான்கு பேரிடம் கலந்துரையாடுவது நல்லது. நாம் இன்றைய வியாபாரம் பகுதியில் பழைய பொருள்களை விற்று அதிகம் லாபம் பெறுவது எப்படி என்று தெரிந்துக்கொள்ளலாம். பழைய பொருட்களில் எப்படி லாபம் ஈட்டுவது என்று கேட்கிறீர்களா? கண்டிப்பாக முடியும், வாங்க எது மாதிரியான பொருள்களை எப்படி விற்பனை செய்து மாதம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு லாபத்தை ஈட்டலாம் என்று தெரிந்துக்கொள்ளலாம்..

வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க 10 வழிகள்..!

Hotel & Bakery Second Hand Items:

 second hand items business ideas in tamil

அதிகமாக ஹோட்டல் மற்றும் பேக்கரி ஷாப்பில் விற்பனை ஆகாத போது அவர்களுடைய கிட்சன் ஐட்டம்ஸ், பில்டிங் ராக்ஸ், பதப்படுத்தி வைக்கும் உபகரணங்களை Second Hand-ல் விற்பனை செய்வார்கள். அதனை நீங்கள் ஒரு தரமான விலைக்கு வாங்கி மற்றவர்களிடம் விற்பனை செய்யும் போது 2000 ரூபாய் கூட வைத்து விற்பனை செய்ய வேண்டும். உதாரணத்திற்கு பேக்கரி ஷாப்பில் Display Stand Rs. 6000/- வாங்குகிறீர்கள் என்றால் அதனை சுத்தம் செய்து மற்றவர்களுக்கு விற்பனை செய்யும் போது அதனை ரூ. 8000/- விற்பனை செய்யவும். இதன் மூலம் நமக்கு லாபம் ரூ. 2,000/- கிடைக்கிறது. மாதத்திற்கு 10 பொருள் இது மாதிரி விற்பனை செய்வதன் மூலம் 20,000 லாபத்தை பார்க்கலாம்.

Antiques Second Hand Items:

 பழைய பொருள் விற்று லாபம் பெற

இப்போதெல்லாம் மக்கள் அனைவருமே Antiques பொருள் வெளியில் தேடி தேடி வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த பிசினஸை நீங்கள் ஆரம்பித்தால் நல்ல லாபம் காண முடியும். இது மாதிரியான பொருள்களை நீங்கள் எங்கெல்லாம் வாங்கலாம் என்றால் Old Market-ல், ஆன்லைன் ஷாப்பிங்கில் olx, Flipkart, Facebook போன்ற வலைத்தளங்களில் ஈசியாக வாங்கலாம். இதில் நீங்கள் உறுதிப்படுத்துவது தான் விலை. இந்த பொருள்களை யாரெல்லாம் வாங்குவார்கள் என்றால் vintage collectors பெரும்பாலும் அதிகமாக வாங்கக்கூடியவர்களாக இருப்பார்கள். இந்த தொழிலில் மாதம் ரூ. 30,000ற்கு மேலும் லாபம் கிடைக்கும்.

Second Hand Old Sofa, Furnitures Business:

 second hand items for sale in tamil

இந்த பிசினஸ் என்னன்னு பார்த்தீங்கன்னா Second Hand-ல் பழைய சோஃபா செட், மர சம்மந்தமான பொருள், சோக்கேஸ் பொருள்களை வாங்கி அதில் ஏதேனும் சேதமடைந்திருந்தால் அதனை சரிப்படுத்தி உங்கள் லாபத்திற்கேற்ப அதனை விற்பனை செய்யலாம். இந்த தொழிலிற்கு சோஃபா பழுது பார்ப்பவர்கள், மர வேலை பழுது பார்ப்பவர்களின் தொடர்பு இருக்க வேண்டும். Second Hand-ல் ஒரு சோஃபாவை Rs. 3000/- க்கு வாங்குகிறீர்கள் என்றால் அதனை சரிப்படுத்தி 2000க்கு Profit வைத்து 5000-ற்கு விற்று லாபம் பெறலாம். பொருளில் சேதமடைந்ததை சரிபார்த்து இருந்தாலும் அதற்கேற்ப தொகையினையும் அதில் சேர்த்துக்கொள்ளலாம். 2000 Profit-ல் 10 பொருள்களை விற்கிறீர்கள் என்றால் ரூ. 20,000/- லாபம் காணமுடியும்.

டாப் 10 சிறு தொழில்கள்

Second Hand Bike Sales Business in Tamil:

Second Hand Bike Sales Business in Tamil

பைக் என்றாலே ஆண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதிலும் ஒரு சில இளைஞர்கள் பைக் வாங்குவதை கனவாகவே வைத்திருப்பார்கள். ஆனால் என்ன பைக்கின் விலை அதிகமாக இருப்பதால் நினைத்த உடனே எல்லோராலும் வாங்கிட முடியாது. புதிதாக பைக் வாங்க முடியாதவர்களுக்கு Second Hand-ல் பைக் வாங்கி விற்பனை செய்வதுதான் இந்த தொழில். இந்த பிசினஸ் அதிகமாக லாபம் தரக்கூடிய பிசினஸ் தான். இந்த தொழிலை செய்வதற்கு பைக் பழுது பார்பவர்களுடைய தொடர்பு இருக்க வேண்டும். உதாரணத்திற்கு Second Hand-ல் ஒரு பைக் ரூ. 10,000/- க்கு வாங்குகிறீர்கள் என்றால் பைக்கிற்கு பழுது செலவுகள் ரூ. 2,000 வைத்துக்கொண்டோம் என்றால் விற்பனையாளரிடம் Rs. 15,000/- ற்கு விற்கலாம். லாபமானது இதில் உங்களுக்கு Rs. 3,000/- கிடைக்கும். பைக் வாங்கும்போது பெரும்பாலும் மெக்கானிக் உடன் செல்வது நல்லது. மாதத்திற்கு 10 பைக் சேல்ஸ் செய்தோம் என்றால் Rs. 30,000/- வருமானம் கிடைக்கும்.

Second Hand Smartphone Business Ideas in Tamil:

Second Hand Smartphone Business Ideas in Tamil

இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் உண்டா என்ற கேள்வி வந்துவிட்டது. அந்த அளவிற்கு போனின் முக்கியத்துவம் அதிகரித்துவிட்டது. இப்போது நிறைய மக்கள் அவர்களுடைய பழைய மொபைலை Second Hand-ல் விற்று புதிதாக லான்ச் ஆகும் மொபைலை வாங்கிவிடுகிறார்கள். அது மாதிரி விற்கும் பழைய மொபைலை நீங்கள் Rs. 1,000/- அல்லது Rs. 2,000/- ற்கு விற்பனை செய்யலாம். இந்த தொழிலை செய்வதற்கு உங்களிடம் ஸ்மார்ட் போன் பற்றிய அறிவுத்திறன் அதிகமாக இருக்க வேண்டும் மற்றும் போனில் ஏதேனும் பழுது அடைந்தால் அதனையும் சரிபார்க்க தெரிந்திருக்க வேண்டும். மொபைல் நன்றாக பழுது பார்ப்பவர்களின் தொடர்பினை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ஆன்லைனில் பழைய மொபைலை வாங்குவதற்கு பல வெப்சைட் உள்ளது. அதில் தேர்வு செய்து மொபைலை வாங்கி ஆன்லைன் ஷாப்பிங்கான OLX, quikr, Second Hand Online Website, முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற செயலியில் பழுது பார்த்து விற்பனை செய்யலாம். ஸ்மார்ட் போன்ஸ் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக மக்கள் தயக்கம் இல்லாமல் வாங்குவார்கள். மாதத்திற்கு 20 முதல் 30 வரை சேல்ஸ் செய்தீர்கள் என்றால் ரூ. 20,000 முதல் 40,000 வரை லாபம் காணலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022