குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய செப்பல் தயாரிப்பு தொழில்..!

சுயதொழில்

சுயதொழில் – குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய செப்பல் தயாரிப்பு தொழில் (Slipper making business)..!

சுயதொழில்:-

இந்த பதிவில் குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் பெறக்கூடிய ஒரு சிறந்த சுயதொழில் பற்றிய தகவல்களை பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். அது என்ன லாபம் தரக்கூடிய தொழில் என்று யோசிப்பீங்களே…

இந்த தொழில் பொறுத்தவரை பலரும் செய்து கொண்டிருக்கும் ஒரு தொழில்தான், ஒரு கடை தெருவில் ஒன்றிற்கு நான்கு கடைகளில் இந்த தொழிலைத்தான் செய்வாங்க… செப்பல் கடை, அதாவது சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தக்கூடிய சூ, செருப்பு, SLEEPER போன்றவரை தயாரித்து விற்பனை செய்யும் தொழில் பற்றித்தான் தெரிந்து கொள்ள போகிறோம். ஒரு கடை தெருவில் நான்கு செருப்பு கடை இருந்தாலும். இதன் தேவை மக்களிடம் அதிகமாகவே இருக்கிறது.

பொதுவாக நாம் எங்கு சென்றாலும் காலில் செருப்பு அணியாமல் செல்ல முடியாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மட்டுமின்றி பலரும் உடல் நலத்தை காக்க இப்போது பிரேத்தியேக காலணிகளை பயன்படுத்துகின்றனர். எனவே மக்களிடையே அதிக தேவையுள்ள இந்த தொழிலை, தயார் செய்து விற்பனை செய்தால் நல்ல லாபத்தை பெறலாம்.

போட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்..!

இயந்திரம்:

 slipper making machine

www.indiamart.comwww.amanimpex.com  போன்ற வெப்சைட்டில் கிடைக்கின்றது. அவற்றில் ஆடர் செய்தும் வாங்கிக்கொள்ளலாம் இந்த இயந்திரத்தை.

செப்பல் கடை வைப்பது எப்படி..?

சுயதொழில் – செருப்பு தயாரிக்கும் முறை (Slipper making business):

செருப்பு செய்ய தேவைப்படும் மூலப்பொருட்கள்:

Slipper rubber sheet, Slipper straps இரண்டும் தேவைப்படும். அதன்பிறகு தயார் செய்த காலனியை பேக்கிங் செய்வதற்கு பாக்ஸ் தேவைப்படும்.

ஒரு Slipper rubber sheet விலை ரூபாய்.350/-Slipper straps ஒரு டசன் விலை ரூபாய் 85/- இவற்றை ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் ஆடர் செய்தும் பெற்று கொள்ளலாம்.

சுயதொழில் செப்பல் செய்ய – கட்டிட அமைப்பு:

சிறிய முதலீட்டில் செய்ப்பவர்கள் வீட்டில் இருந்த காலணிகளை தயார் செய்து விற்பனை செய்யலாம். பெரிய முதலீட்டில் இந்த தொழிலை துவங்க நினைப்பவர்கள் பத்துக்கு, பத்து அளவு கொண்ட சிறிய அரை போதுமானது.

இயந்திரம்:

Semi-automatic slipper making machine & Automatic slipper making machine என்று இரண்டு வகை உள்ளது. Semi-automatic slipper making machine விலை குறைந்தபட்சம் 13,000/- ரூபாயில் கிடைக்கின்றது. Automatic slipper making machine-ன் விலை குறைந்த பட்சம் 45,000/- முதல் 1.2 லட்சம் வரை கிடைக்கின்றது.

முதலீடு:

குறைந்த முதலீட்டில் தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு ரூபாய்.50,000/- போதுமானது. அதுவே அதிக முதலீட்டில் இந்த சுயதொழில் துவங்க நினைப்பவர்கள் குறைந்தபட்சம் 3,00,000/- தேவைப்படும்.

அடக்க விலை ரூ.10, விற்பனை விலை ரூ.100 புதிய தொழில் வாய்ப்பு..!

தயாரிக்கும் முறை (Slipper making business):

இயந்திரத்தில் இந்த Slipper rubber sheet வைத்து அழுத்த வேண்டும். ஆடோமேடிக் இயந்திரமாக இருந்தால் நாம் இயந்திரத்தை அழுத்த வேண்டிய அவசியம் இருக்காது. அதுவாகவே அழுத்தம் கொடுத்து செப்பல் வடிவத்தில் தனியாக வந்துவிடும்.

இவ்வாறு வெட்டப்பட்ட ரப்பர் சீட்டில் ஓட்டைகள் இட்டு Slipper straps மாட்ட வேண்டும். இவ்வாறு செய்துவிட்டால் செப்பல் தயார்.

குறிப்பு:- சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் செப்பலின் அளவு வேறுபாடும் என்பதால். அளவிற்கு தகுந்ததுபோல் ரப்பர் சீட்டை கட் செய்து, செப்பல் தயார் செய்ய வேண்டும்.

அதேபோல் பலரும் பலவகையான டிசைன் செப்பலை அணிந்து கொள்ள விரும்புவார்கள். எனவே டிசைனாக செப்பல் தயார் செய்வதற்கென்றே இயந்திரங்கள் பலவிற்கப்படுகின்றன. எந்த இயந்திரத்தை வாங்கியும் டிசைன் டிசைனாக செப்பல் தயார் செய்து விற்பனை செய்யலாம். இதன் மூலம் அதிக லாபமும் பெறலாம்.

சந்தை வாய்ப்பு:

இவ்வாறு தயார் செய்த காலணிகளை, சொந்தமாக கடை வைத்து விற்பனை செய்யலாம். இல்லையெனில் வீட்டில் இருந்தபடியே விற்பனை செய்யலாம். நன்றாக பேசும் திறமை உள்ளவர்கள் இந்த தொழிலை செய்தால் நல்ல இலாபம் பெறலாம்.

தொழில் ரகசியம்:

தயார் செய்த செப்பலின் டிசைனுக்கு தகுந்தவாறு விலையை நிர்ணகித்து கொள்ளுங்கள். சாதாரண சப்பலுக்கு ஒரு விலையும், மார்டென் ஒர்க் செய்து தயார் செய்த செப்பலுக்கு ஒரு விலை என்று வைத்தால் தான் நல்ல லாபம் பெற முடியும்.

வாடிக்கையாளர்களை கவருவதற்கு, மற்ற கடைகளில் விற்கப்படும் விலையை விட கொஞ்சம் விலை குறைத்து விற்பனை செய்யுங்கள். இவ்வாறு செய்வதினால் அதிகப்படியான வாடிக்கையாளர்களை கவரலாம்.

மாதம் Rs.50000 to Rs. 1 Lakh தரக்கூடிய மிக சிறந்த…

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>புதிய தொழில் பட்டியல் 2021