சின்ன இடம் இருந்தால் வீட்டில் இருந்து தினமும்​ 3500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

Advertisement

Small Business Ideas in Tamil at House

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் ஏதாவது புதிய தொழில் துவங்க வேண்டும் என்ற ஆசையா? அப்படி என்ற இந்த பதவிவு உங்களுக்கானது தான். அதாவது பழையன் நியூஸ் பேப்பரை வைத்து பென்சில் தயார் செய்து விற்பனை செய்யக்கூடிய ஒரு அருமையான தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். பென்சில் என்பது கல்வி கற்கும் அனைவருக்குமே பயன்படும் ஒரு அத்தியாவசியமான பொருள். ஆக இந்த பென்சிலை தயார் செய்வதற்கு ஆண்டு தோறும் பல ஆயிரம் மரங்களை வெட்டுகின்றன இதனால் சுற்றுச்சூழலுக்கு அதிகளவு கேட்டினை நாமே விளைவிக்கின்றோம். ஆக சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு கேட்டும் விளைவிக்காத இந்த பேப்பர் பென்சிலை நாம் தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் கண்டிப்பாக சந்தையில் அதிக வரவேற்பு இருக்கும். சரி வாங்க இந்த தொழில் தொடங்குவதற்க்கான சில முக்கிய தகவல்களை நாம் இப்பொழுது பார்க்கலாம்.

இடம்:

ஆரம்பத்தில் இந்த தொழிலை நாம் வீட்டில் இருந்தபடியே செய்யலாம். இதற்கு தனியாக இடம் அமைக்க வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் இருக்காது.

மூலப்பொருட்கள்:

இந்த பேப்பர் பென்சில் தயார் செய்வதற்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் என்னெவென்றால் பழைய நியூஸ் பேப்பர், Pencil Lead, கம் இந்த மூன்று பொருட்கள் இருந்தாலே போதும். அதன் பிறகு நீங்கள் தயார் செய்த பேப்பரை கொஞ்சம் டிசைன் செய்து விற்பனை செய்தால் சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும். ஆக அப்படி டிசைன் செய்து விற்பனை செய்ய வேண்டும், என்றால் அதற்கு ஸ்டிக்கர் விற்பனை செய்ய செய்யப்படுகிறது அதனை வாங்கி தாயார் செய்த பென்சிலில் ஒட்டிக்கொள்ளலாம்.

இயந்திரம்:

இந்த பேப்பர் பென்சில் தயார் செய்வதற்கு Paper Pencil Rolling Machine தேவைப்படும். இந்த இயந்திரந்தால் விலை Velvet Pencil Making Machine இருந்தால் 35,000/- இருக்கும். அதுவே Automatic Machine ஆக இருந்தால் 3.50 லட்சம் வரை தேவைப்படும்.

முதலீடு:

இந்த தொழில் தொடங்க உங்களிடம் குறைந்தது 50000 ரூபாய் இருந்தாலே போதும்.

பேப்பர் பென்சில் தயார் செய்யும் முறை:

இந்த பேப்பர் பென்சில் தயார் செய்யும் முறை பொறுத்தவரை பேப்பரை சரியான அளவில் கட் செய்து அதில் கம் தடவி அதன் உள்ளே pencil lead வைத்து இயந்திரத்திற்குள் வைத்தால் இயந்திரம் பென்சிலை அழகாக ரோல் செய்து தந்துவிடும்.

பிறகு அதனை ஒரு நாள் முழுவதும் வெயிலில் காயவைக்க வேண்டும். பிறகு அதன் மீது கலர் ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யலாம்.

சந்தை வாய்ப்பு:

நீங்கள் தயார் செய்த பென்சில் பேப்பரை மளிகை கடை, ஸ்டேஷனரி கடை, சூப்பர் மார்க்கெட், டிபாட்மென்ட் ஸ்டோர் என்று அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யலாம். மேலும் இது போக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் இருக்கும் கடைகளில் விற்பனை செய்யலாம். அதேபோல் நேரடியாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று அங்குள்ள உயரதிகாரிகளிடம் அனுமதி கேட்டு மாணவர்களிடம் பென்சிலை விற்பனை செய்யலாம்.

வருமானம்: 

ஒரு நாளுக்கு நீங்கள் 500 பென்சில் தயார் செய்தீர்கள் என்றால் ஒரு பென்சிலை 7 ரூபாய் வரை 10 ரூபாய் வரை கடைகளில் விற்பனை செய்யலாம். இதன் மூலம் இரு நாளுக்கு 3500 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்க வீட்டில் ஒரு சின்ன இடம் இருந்தால் போதும் வாரம் 20000 ரூபாய் வருமானம் தரும் தொழில்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement