போன் பேசினால் போதும் 2500 சம்பாதிக்கலாம் அருமையான தொழில்..!

Advertisement

வீட்டில் இருந்து தினமும் 2,500 ரூபாய் சம்பாதிக்கலாம்!!!

சொந்தமாக தொழில் துவங்க நினைக்கும் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். நமது பொதுநலம்.காம் பதிவில். ஒரு அருமையான தொழில் வாய்ப்பை பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது இந்த தொழிலை நீங்கள் வீட்டில் இருந்தபடியே அல்லது சிறிய அளவில் கடை வைத்தோ இந்த தொழிலை நீங்கள் ஆரம்பிக்கலாம். இதன் மூலம் நீங்கள் தினமும் நல்ல வருமானத்தை பெற முடியும். அது என்ன தொழில் என்று தெரிந்துகொள்ள அதிக ஆர்வமாக இருக்கின்றிர்களா அப்படி என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

என்ன தொழில்?

பொதுவாக மக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதற்கு நிறைய பொருட்கள் இருக்கின்றன. அதிலுள்ள ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அழகு சார்ந்த பொருள்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். ஆகவே மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களான குளியல் சோப்பு, ஷாம்பு, ஹண்ட் வாஷ் லிக்குட், சானிடைசர், லிப் பாம், ஃபேஸ் வாஷ், ஃபேஸ் கிரீம், செண்ட், ஹேர் ஆயில் போன்றவற்றை தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் வீட்டில் இருந்தபடியே நல்ல வருமானத்தை பெற முடியும். அதுவும் ஆர்கானிக் முறையில் நீங்கள் தயார் செய்து, நன்கு தரமான முறையில் லேபிள், ஸ்டிக்கர் போன்றவற்றை எல்லாம் வீட்டில் விற்பனை செய்தீர்கள் என்றால் வீட்டில் இருந்தபடியே நல்ல வருமானம் பெறமுடியும். சரி அது குறித்த சில தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 காலை or மாலை 2,000 ரூபாய் லாபம் தரக்கூடிய 5 சைடு பிசினஸ்..!

இடம்:

இந்த தொழில் நீங்கள் வீட்டில் ஒரு சிறிய அறையில் இருந்து கூட தொடங்கலாம். இல்லை தனியாக கடை வைத்து ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் 10-க்கு 10 இடம் கொண்ட ஒரு சிறிய இடம் இருந்தால் போதும். தாராளமாக இந்த தொழிலை ஆரம்பித்துவிடலாம்.

முதலீடு:

இந்த தொழில் துவங்க உங்களிடம் குறைந்தது 50 ஆயிரம் இருந்தால் போதும் மிக எளிதாக ஆரம்பித்துவிடலாம்.

மூலப்பொருட்கள்:

நீங்கள் எந்த பிராடெக்ட் தயார் செய்ய இருக்கிறீர்களோ அதற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு ஹேர் ஆயில் தயார் செய்ய உள்ளீர்கள் என்றால் அதற்கு முக்கியமாக தேங்காய் எண்ணெய் தான் தேவைப்படும், எந்த பிளேயரில் ஹேர் செய்ய போறிங்களே அதற்கான மூல பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 தினமும் 3000 லாபம் தரக்கூடிய தந்தூரி டீ தொழில்..!

எப்படி தயார் செய்யலாம்?

இதற்கென்று நிறைய பயிற்சி மையங்கள் உள்ளது. அங்கு சென்று குளியல் சோப்பு, ஷாம்பு, ஹண்ட் வாஷ் லிக்குட், சானிடைசர், லிப் பாம், ஃபேஸ் வாஷ், ஃபேஸ் கிரீம், செண்ட், ஹேர் ஆயில் எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதற்கான பயிற்சி பெறலாம் இதன் மூலம் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்எப்படி தயார் செய்ய வேண்டும் என்று.

எப்படி விற்பனை செய்யலாம்?

நீங்கள் இது போன்று பொருட்களை இயற்கையான முறையில் தயார் செய்து விற்பனை செய்கிறீர்கள் என்று நோட்டிஸ் அடித்து அதனுடன் உங்கள் தொலைபேசி எண்ணெய் உள்ளிட்டு அனைவருக்கும் தெரியப்படுத்தலாம். இதன் மூலம் உங்களுக்கு ரெகுலர் கஷ்டமர் கிடைப்பார்கள். மேலும் சமூக வலைத்தளங்களில் தெரியப்படுத்தலாம். அதன் மூலமும் உங்களுக்கு நிறைய ஆடர்கள் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்👉👉 பலமடங்கு லாபம் குவிக்கும் தொழில்

எவ்வளவு லாபம் கிடைக்கும்:

உதாரணத்திற்கு, நீங்கள் முழுக்க முழுக்க இயர்கையான முறையில் ஏதாவது ஒரு ஹேர் ஆயில் தயார் செய்கிறீர்கள் என்றால். 100 மில்லி ஆயிலை கிட்டத்தட்ட 300 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். ஒரு நாளைக்கு பத்து 100 மில்லி கொண்ட ஹேர் ஆயிலை விற்பனை செய்தீர்கள் என்றாலே உங்களுக்கு 3000 ரூபாய் வருமானம் கிடைக்கும். செலவுகள் 500 ரூபாய் என்று வைத்துக்கொண்டாலும். ஒரு நாளுக்கு உங்களுக்கு 2500 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

 

மேலும் இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement