வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் நீங்களும் சம்பாதிக்கலாம் வாரம் ரூ.10000

Small Business

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் நீங்களும் சம்பாதிக்கலாம் வாரம் ரூ.10000 – Small Business

பொதுநலகம்.காம் வாசகர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் ஒரு அருமையான தொழில் வாய்ப்பை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். இந்த தொழிலை படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று அனைவருக்குமே வீட்டில் யார் வேண்டுமானாலும் செய்ய்யலாம். அதேபோல் இந்த தொழிலை தொடங்க அதிக பணம் தேவைப்படாது. அதேபோல் இந்த தொழிலுக்கு பெரிய அளவில் அனுபவமும் தேவைப்படாது, அதிக வேலை ஆட்களும் தேவைப்படாது. அப்படி என்ன தொழில்என்று தானே யோசிக்கிறீங்க. சரி வாங்க இந்த தொழிலை எப்படி தொடங்கலாம் அதற்கு என்னென்ன தேவை என்று விளக்கமாக பார்க்கலாம்.

பொதுவாக நம்முடைய வீடுகளில் நாம் உண்ணும் உணவுக்கு தொட்டுக்கொள்வதற்கு கூட்டு பொரியல் என எதனை இருந்தாலும் சிலருக்கு அப்பளம் இல்லாமல் சாப்பிட திருப்தி இருக்காது. அதிலும் அப்பளத்தை விட பலருக்கும் பிடித்த ஒன்று இருப்பது தான் வடகம். வீட்டில் உள்ளவர்களுக்கு தேவை என்றால் இந்த வடகத்தை போட்டு எடுத்து வைத்து கொள்வார்கள். ஆனால் வேலைக்கு செல்பவர்களுக்கு இது போல் வடகம் தேவை என்றால் அவர்கள் செல்வது கடைகளுக்கு தான். அதேபோல் வேலைக்கு செல்பவர்களும் வீட்டில் வடகம் செய்ய முடியாதவர்களும் தான் நம்முடைய நுகர்வோர் அவர்களின் தேவையை நம்முடைய சேவையாக மாற்றி தொழிலாக செய்யப் போகிறோம்.

வடகம் & அப்பளம் வகைகள்:

 1. அரிசி வடகம்
 2. பூண்டு வடகம்
 3. தக்காளி வடகம்
 4. ஆனியன் வடகம்
 5. ஜவ்வரிசி வடகம்
 6. பீட்ரூட் வடகம்
 7. கேரட் வடகம்
 8. புதினா வடகம்
 9. அரிசி அப்பளம்
 10. கிழங்கு அப்பளம்
 11. மிளகு அப்பளம்
 12. உளுந்து அப்பளம்
 13. மோர் அப்பளம்
 14. பப்படம்

Small Business:

எனவே அதை தயார் செய்வது மிகவும் எளிது. அடுத்ததாக வடகம் தயார் செய்ய பெரிய முதலீடும் தேவை இல்லை. நூறு ரூபாய் இருந்தால் போதும் இயந்திரம் என்று பார்த்தால் கிரைண்டர் மட்டும் போதும் வேறு எதுவும் தேவையில்லை.

வீட்டில் உள்ள அனைவருமே இந்த தொழிலில் ஈடுபட முடியும். அவ்வாறு ஈடுபடும் பட்சத்தில்  வேலைக்கு ஆட்கள் கூட தேவை இல்லை நம்முடைய வீட்டிற்கு செய்வது போன்று நம்முடைய தொழிலை ஆரம்பிக்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெறும் 2 மணி மட்டும் வேலை பார்த்தால் போதும்..! ஒரு நாளுக்கு 2000 வரை சம்பாதிக்கலாம்..!

இந்த தொழிலை தொடங்குவதற்கு முன் நம்முடைய பிராண்டிற்கு நல்லதொரு பெயரை தேர்வு செய்து அதனை உள்ளே வைத்து பேக்கிங் செய்யும் வகையில் சிறு சிறு பேப்பர்களாக பிராண்டின் செய்து வைத்து கொள்ள வேண்டும்.

நாம் வடகத்தை தயார் செய்து அதில் நம்முடைய பிராண்டு பேப்பரை வைத்து அதை கண்கவரும் வகையில் பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பலாம். இதனை மார்க்கெட்டிங் செய்வதும் சுலபம் தான். அருகில் இருக்கக்கூடிய சூப்பர் மார்க்கெட், மளிகை கடைகளில் ஆர்டர் எடுத்து விற்பனை செய்யலாம்.

ஒரு பாக்கெட் 10 ரூபாய் வீதம் ஒரு வாரத்திற்கு ஒரு கடைக்கு 50 பாக்கெட் விற்பனை செய்வதாக கொண்டால் அதன் மூலம் 500 ரூபாய் வருமானம் கிடைக்கும். அதேபோல் 20 கடைகளுக்கும் விற்பனை செய்தால் வாரத்திற்கு 10,000/- ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

 இடம் வசதி:

முதலில் சிறியதாக ஆரம்பிக்கும் இந்த தொழிலுக்கு எந்த விதமான சான்றிதழும் தேவையில்லை. ஒரு குடிசை தொழில் போல ஆரம்பிக்கலாம். உங்களின் தொழிலை பெரிதாக செய்ய விரும்பினால் தேவையான சான்றிதழ்களுடன் இதனை ஏற்றுமதி செய்ய கூட முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
படிக்கும் போதே இந்த தொழிலை செய்தால் கை நிறைய சம்பாத்திக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil