தயாரிப்பு விலை ரூபாய்.5..! மாத வருமானம் ரூபாய் 80,000/- அருமையான சுயதொழில்..! Sugarcane Juice Business in Tamil..!
Sugarcane Juice Business in Tamil:- இன்றைய இளைய தலைமுறையினர் பெரும்பாலானோர் மாத சம்பள வேலையை விடக் குறைந்த வருமானம் இருந்தாலும் சரி, சுய தொழிலாக ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகளவில் தற்போது பரவி வருகிறது. தினமும் வருமானம் கிடைக்க கூடிய சிறுதொழில் பட்டியல்களில் கரும்பு ஜூஸ் தயாரிப்பு தொழிலும் இடம் பெற்றிருக்கின்றது என்று சொல்லலாம்.
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கரும்பு ஜூஸை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. மேலும் கரும்பு ஜூஸில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது, என்பதால் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். எனவே குறைந்த முதலீட்டில் சுயதொழில் துவங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கரும்பு ஜூஸ் தயார் செய்து விற்பனை செய்யலாம். சரி இந்த தொழில் துவங்குவதறகான சில விவரங்களை இந்த பதிவில் படித்தறியலாம் வாங்க..!
நம்ம ஊரில் இதுவரை யாரும் செய்யாத புதிய தொழில்..! |
Sugarcane Juice Business in Tamil..!
கரும்பு ஜூஸ் மெஷின்:-
இந்த கரும்பு ஜூஸ் மெஷின் (sugarcane juice machine) பொறுத்தவரை சிறிய இயந்திரம் முதல் பெரிய அளவினால் இயந்திரங்கள் வரை பல ஆன்லைன் ஸ்டோரில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த இயந்திரத்தை ஆன்லைன் ஷாம்பிங் ஸ்டோரில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
கரும்பு ஜூஸ் இயந்திரம் விலை
இந்தகரும்பு ஜூஸ் மெஷின் என்ன விலையில் வேண்டுமானாலும் ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம். அதாவது குறைந்தபட்சம் ரூபாய் 18,000/- முதல் அதிகபட்சம் ரூபாய் 65,000/- வரை கிடைக்கின்றது.
மூலப்பொருட்கள்:-
இந்த தொழில் துவங்க தேவைப்படும் மூலப்பொருட்கள் என்றால் அது கரும்பு தான், இந்த கரும்புகள் ஒரு கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே இதனை மொத்தமாக வாங்கிக்கொள்ளுங்கள். அதன் பிறகு கிளாஸ், ஸ்ட்ரா, டேபிள் மற்றும் நாற்காலி போன்ற பொருள்களும் தேவைப்படும்.
முதலீடு:-
மூலப்பொருள்கள், இயந்திரம் மற்றும் வாடகை போன்ற செலவுகளுக்காக குறைந்தபட்சம் இந்த தொழில் துவங்க முதலீடாக 1 லட்சம் தேவைப்படும்.
வருமானம்:-
ஒரு கிலோ கரும்பில் 750 கிராம் கரும்பு ஜூஸ் கிடைக்கும் இதன் மூலம் 2 கிளாஸ் கரும்பு ஜூஸ் கிடைக்கும். ஒரு கிளாஸ் கரும்பு ஜூஸ் தயார் செய்ய 2.50 செலவு ஆகும். ஒரு கிளாஸ் கரும்பு ஜூஸினை தாங்கள் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். இதன் மூலம் தங்களுக்கு 17.50 லாபம் கிடைக்கும்.
ஒரு நாளிற்கு 200 கிளாஸ் கரும்பு ஜூஸ் தயார் செய்து விற்பனை செய்யும்பொழுது தங்களுக்கு வருமானமாக 3500 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதன் மூலம் ஒரு மாதத்துக்கு ஒரு லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.
சந்தை வாய்ப்பு:-
மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் இந்த தொழிலை துவங்கினால் தினமும் நல்ல வருமானம் பெறமுடியும். அதாவது கடற்கரை ஓரங்களில், கோவில் திருவிழாக்களில், பஸ் ஸ்டாப், சாலை ஓரங்கள் போன்ற இடங்களில் இந்த கடையை போட்டால் நல்ல வருமானம் பார்க்கமுடியும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |