மாதம் 1,00,000/- லாபம் தரும் சிறு தொழில்..! Sweet Corn Business..!

sweet corn business

 லாபம் தரும் சிறு தொழில்..!

Sweet Corn Business:- வணக்கம் நண்பர்களே புதிதாக குறைந்த முதலீட்டில் மாதம் ஒரு லட்சம் தரும் ஒரு சிறந்த சிறு தொழில் வாய்ப்பை பற்றி தான் இந்த பகுதியில் நாம் தெரிந்துகொள்ள போகிறோம் அதாவது ரோட்டோரங்களில், திருவிழாக்களில், மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் மால், தியேட்டர் மற்றும் கடற்கரையில் அதிகமாக Sweet corn விற்கப்படும்.

அதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே குறைந்த முதலீட்டில் சிறு தொழில் துவங்க நினைக்கும் அனைத்து நண்பர்களும் தங்களது ஊரிலேயே இந்த Sweet Corn Business-யினை செய்யலாம். இதன் மூலம் மாதம் ஒரு லட்சம் வரை லாபம் பெறலாம்.

newஇந்த தொழில் செஞ்சா வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம்..!

 

சரி இப்பொழுது இந்த Sweet corn business ஐடியாவை பற்றி  தெரிந்து கொள்ளலாம்.

இயந்திரம்:

sweet corn machine price

இந்த sweet corn business-ஐ துவங்க தேவைப்படும் இயந்திரம் என்றால் sweet corn machine-யின் தான் இந்த மிசின் அனைத்து ஆன்லைன் ஸ்டோரிலும் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். இந்த இயந்திரம் மிக குறைந்த விலையில் அதாவது 13,000/- முதல் 25,000/- வரை கிடைக்கின்றது.

தாங்கள் எந்த விலையில் இயந்திரத்தை வாங்க வேண்டும் என்று விரும்புகின்றிர்களோ அந்த விலையில் ஆர்டர் செய்துகொள்ளலாம்.

இந்த இயந்திரத்தை இயக்குவதற்கு எந்தவித பயிற்சிகளும் தேவையில்லை. ஆண், பெண் இருபாலரும் இந்த இயந்திரத்தை எளிதாக இயக்கிவிடலாம்.

newஇயந்திரத்தின் விலை 30 ஆயிரம் மாத வருமானம் 80 ஆயிரம்..!

வருமானம்:-

சந்தைகளில் ஒரு கிலோ சோளம் – 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இந்த ஒருகிலோ சோளத்தில் 8 முதல் 10 கப் வரை sweet corn தயார் செய்யலாம்.

ஒரு கப் sweet corn-ஐ தங்கள் 20 ரூபாய்க்கு நுகர்வோர்களிடம் விற்பனை செய்யலாம்.

ஒருகிலோ சோளத்திற்கு 8 கப் sweet corn விற்பனை செய்தால் 160 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

மசாலா பொருட்கள் மற்றும் இதர செலவுகள் போக ஒரு கப் sweet corn-யில் இருந்து இலாபமாக 15 ரூபாய் கிடைக்கும்.

எனவே ஒரு நாளிற்கு 200 கப் sweet corn விற்பனை செய்தால் அதன்முலம் ஒரு நாளிற்கு 3000 வரை லாபம் கிடைக்கும். இதன்முலம் மாதம் ஒரு லட்சம் வரை வருமானம் பார்க்கலாம்.

சந்தை வாய்ப்பு:

திருமண விழா, நிச்சயத்தாம்பூலம் விழா, பிறந்தநாள் விழா போன்ற விழாக்களில் ஆர்டர் பிடிக்கலாம். அல்லது பெரிய ஷாப்பிங் மால், தியேட்டர், பார்க், கடற்கரை, பஷார், பஸ் ஸ்டாப், திருவிழா மற்றும் மக்கள் அதிகம்இருக்கும் இடங்களில் இந்த இயந்திரத்தினை நேரிடியாக எடுத்து சென்றும்  sweet corn விற்பனை செய்யலாம்.

newஉற்பத்தி செலவு 30 ரூபாய், விற்பனை விலை ரூபாய் 100 அருமையான சுயதொழில்.!

குறிப்பு:-

வாடிக்கையாளர்களுக்கு பிடித்த சுவையில் Sweet corn தயார் செய்து விற்பனை செய்யலாம், அதவது Masala corn, Butter & Sweet corn, Pepper corn, Lemon corn போன்றவற்றை தயார் செய்து விற்பனை செய்யலாம் இதன் மூலம் வாடிக்கையாளர்களை அதிகரிக்கலாம்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil