Tandoori Chai Business Plan in Tamil
புதிதாக தொழில் துவங்க நினைக்கும் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் சொந்த ஊரில் தினமும் நல்ல லாபம் தொழில் செய்ய வேண்டும், ஆனால் என்ன தொழில் செய்ய வேண்டும் என்று யோசிக்கிறீங்களா. அப்படின்னா உங்கள் ஊரில் தந்தூரி டீ தொழிலை தொடங்கலாம். இதன் மூலம் தினமும் நீங்கள் நல்ல வருமானத்தை பெற முடியும். சரி இந்த தந்தூரி டீ தொழில் துவங்க எவ்வளவு முதலீடு தேவைப்பாடு, எப்படி ஆரம்பிக்கலாம் போன்ற தகவல்களை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொல்வாயோம் வாங்க.
இடம்:
இந்த தந்தூரி டீ தொழில் துவங்க உங்களிலும் 10-க்கு 10 இடம் இருந்தால் போதும் மிக எளிமையாக இந்த தொழிலை ஆரம்பித்துவிடலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடமானது மக்கள் குடம் அதிகம் உள்ள இடமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் தொடங்கும் கடை நன்றாக ஓடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 காலை or மாலை 2,000 ரூபாய் லாபம் தரக்கூடிய 5 சைடு பிசினஸ்..!
மூலப்பொருட்கள்:
தந்தூரி டீ தொழில் துவங்குவதற்கு டீத்தூள், பால், சர்க்கரை, டீ மசாலா பொருட்கள், டீ கப், சிறிய மண் பானை இவை அனைத்தும் தேவைப்படும்.
முதலீடு:
நீங்கள் இந்த தொழிலை தொடங்குவதற்கு, கேஸ் ஸ்டவ், பாத்திரங்கள், ஸ்டாண்ட் இது போன்ற பொருட்கள் வாங்க வேண்டியதாக இருக்கும். அது போக இடம் வாடகை மற்றும் அட்வான்ஸ் இவை அனைத்திற்கும் மொத்தமாக 50,000/- வரை முதலீடு தேவைப்படும்.
Franchise:
இந்த தந்தூரி டீ தொழில் துவங்க சில நிறுவனங்கள் Franchise வாய்ப்புகளையும் தருகிறது. அந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு தந்தூரி டீ Franchise தொழிலை ஆரம்பிக்கலம். Franchise மூலம் தொடங்குவதன் மூலம் உங்களுக்கு ஒரு நல்ல ஐடியா கிடைக்கும். அதாவது எப்படி சுவையாக தந்தூரி டீ செய்யலாம் என்று பயிற்சி , மேலும் என்னென்ன பிளேவரி டீ தயார் செய்யலாம். டீ தவிர வேறு என்னென்ன விற்பனை செய்தால் நல்ல வருமானம் பெற முடியும் என்று பல யோசனைகளை வழங்குவார்கள். ஆக உங்களுக்கு சொத்தமாக அல்லது Franchise இவற்றில் எதில் தொழில் துவங்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 போன் பேசினால் போதும் 2500 சம்பாதிக்கலாம் அருமையான தொழில்..!
எவ்வளவு வருமானம் கிடைக்கும்:
நீங்கள் தயார் செய்த தந்தூரி டீயின் விலை 15 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். இந்த உலகில் டீ குடிக்கும் நபர்கள் இருக்கின்றன. ஆக நீங்கள் வித்தியாச முறையில் தந்தூரி டீ தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் நிச்சயம் அதன் சுவையை சுவைக்க கட்டாயம் வாங்கி அருந்துவார்கள். ஆக மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடமான சினிமா தேட்டர், பார்க், பீச், மால், பஸ் ஸ்டாண்ட் போன்ற இடங்களில் உங்கள் கடையை வையுங்கள். 100 தந்தூரி டீ விற்பனை செய்தலே ஒரு நாளைக்கு 2500 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.
இது தவிர நீங்கள் நூடுல்ஸ், சிக்கன் பிரைட்ரைஸ், சிக்கன் 65, காலிபிளவர் பகோடா போன்று ஸ்னாக்ஸ் போன்றவற்றை தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை தினம்தோறும் பெற பெறமுடியும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |