2022-யில் சிறந்த இலாபகரமான டாய்ஸ் பிசினஸ்..!

Toys Business Ideas in Tamil

டாய்ஸ் பிசினஸ் – Toys Business Ideas in Tamil

தொழில்முனைவோருக்கு வணக்கம் நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பது Pothunalam.com இன்றைய பதிவில் எப்பொழுதுமே ட்ரெண்டிங்கில் இருக்கக்கூடிய மற்றும் நல்ல லாபகரணமான பிசினஸ் ஐடியாவை பற்றி தான் பார்க்கப்போகிறோம். அதாவது சிறிய குழந்தை பொதுவாக நிறைய டாய்ஸை விரும்புவார்கள். எப்படியாவது பெற்றோர்களிடம் ஆடம் பிடித்தவது விளையாட்டு மொம்மைகளை வாங்கிவிடுவார்கள். ஆகவே நீங்கள் புதிதாக மற்றும் நல்ல லாபகரமான தொழிலை தொடங்க வேண்டும் என்று விரும்புகிறீகள் என்றால் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் குறைந்த முதலீட்டில் கூட இந்த டாய்ஸ் பிசினஸை தொடலங்களும். அது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

இடம்:

நீங்கள் சிறிய அளவில் இந்த பிசினஸை தொடங்க வேண்டும் என்றால் பத்துக்கு பத்து அளவு உள்ள இடம் இருந்தால் போதும். நீங்கள் தேர்வும் செய்யும் இடமானது ஸ்கூல், மண்டபம், இது போன்று மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடத்தை தேர்வு செய்தீர்கள் என்றால் நல்ல வருமானம் பெற முடியும்.

மூலப்பொருட்கள்:

இந்த தொழிலுக்கு முக்கிய மூல பொருட்கள் என்றால் பொம்மைகள் தான். மொம்மைகளில் நிறைய வகையான பொம்மைகள் இருக்கிறது மர பொம்மை, எலட்ரிக் டாய்ஸ், எஜுகேஷன் டாய்ஸ், பலூன் டாய்ஸ் என்று பலவகையான விளையாட்டு பொம்மைகள் இருக்கின்றன அவற்றை வாங்கி கொள்ளுங்கள். பிறகு மொம்மைகளை கடையில் வைத்து விற்பனை செய்ய டேபிள், ஸ்டாண்ட் போன்றவை தேவைப்படும்.

இந்த லிங்கையும் கிளிக் செய்யுங்கள் 👉 முதலீடு இல்லாமல் வெற்றி தரும் சிறந்த சிறுதொழில்கள்..!

முதலீடு:

ஆரம்பத்தில் பொம்மைகளை குறைந்தபட்சம் 15 ஆயிரத்திற்கு வாக்கிக்கொள்ளுங்கள். பிறகு டேபிள், ஸ்டாண்ட், மின்சாரம், வடக்கை இதுபோன்ற செலவுகளுக்கு குறைந்தபட்சம் 35 ஆயிரம் தேவைப்படும். மொத்தம் ஆரம்பத்தில் நீங்க 50,000/- முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும்.

50 ஆயிரம் வரை முதலீடு செய்ய வசதி இல்லை அப்படின்னா.. ஒரு தள்ளுவண்டியை வாங்கிகொள்ள்ளுங்கள். அவற்றில் நீங்கள் வாங்கிய மொம்மைகளை வைத்து பீச், பார்க், திருவிழா, ஸ்கூல், பாஸ் ஸ்டாண்ட் இது போன்று மக்கள் கூட்டம் எப்பொழுதுமே அதிகமாக உள்ள இடத்தில் வைத்து விற்பனை செய்யலாம். இதற்கு அதிக முதலீடு தேவைப்படாது.

வருமானம்:

ஒரு சிறிய பலூன் விலையே 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சிறிய பொம்மையின் விலையும் 100 ரூபாய்க்கு குறையாமல் தான் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே நீங்கள் வாங்கி வைத்திருக்கும் பொம்மைகளில் விலைக்கு ஏற்ப 5 முதல் 20 ரூபாய் வரை அதிகமாக வைத்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் பார்க்க முடியும். நல்ல மக்கள் கூட்டம் உள்ள இடத்தில் பொம்மைகளை விற்பனை செய்தீர்கள் என்றால் ஒரு நாளிற்கு குறைந்தது ரூ.1,500 ரூபாய் வரை வருமானம் பெற முடியும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Siru Tholil Ideas in Tamil 2022