செலவில்லாத சில Business Ideas சின்ன வயசுலேயே செட்டில் ஆகிடலாம்..!

Advertisement

வீட்டில் இருந்து லாபம் பெற சில Business Ideas 

பொதுநலம்.காம் வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம்.. தொழில் துவங்க வேண்டும் என்ற முயற்சியில் இந்த பதிவை பார்க்க வந்தமைக்கு மிக மகிழ்ச்சி. இன்றைய பதிவில் அனைவருமே குறைந்த முதலீட்டில் செய்ய கூடிய சில தொழில் ரகசியங்களை பற்றித்தான் பகிர்ந்துள்ளோம். ஆகவே இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். மேலும் பலவகையான தொழில் யோசனைகளை தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்த பதிவின் இறுதியில் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். சரி வாங்க குறைந்த முதலீட்டில் செய்ய கூடிய சில Business Ideas பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

இயற்கை விவசாயம்:

வீட்டில் இருந்தபடியே சிறிய இடத்தில் நீங்கள் காய்கறிகளை இயற்கையாக வளர்த்து அதனை விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும். அதாவது ஆரம்பத்தில் நீங்கள் குறைந்த அளவில் விதைகளை வாங்கி பயிரிடலாம். இதற்கு விவசாய நிலம் தேய்வைப்படுமே என்று யோசிக்க வேண்டும். உங்கள் வீட்டில் சிறிய அளவில் இடம் இருந்தாலே போதும். அந்த இடத்தில் காய்கறிகளை வளர்த்து அதன் மூலம் வீட்டில் இருந்தபடியே நல்ல வருமானம் பார்க்க முடியும். ஆரம்பத்திலேயே இதன் மூலம் தினமும் குறைந்தபட்சம் 300 ரூபாய் சம்பாதிக்க முடியும்.

Reselling Business:

இந்த Reselling Business-யில் இரண்டு வகையான பிசினஸ் இருக்கிறது ஒன்று ஆன்லைன் பிசினஸ் மற்றொன்று ஆஃப்லைன் பிசினஸ். ஆஃப்லைன் பொறுத்தவரை அதிக நேரம் இந்த தொழிலுக்கு நேரம் ஒதுக்க வேண்டியதாக இருக்கும். அதே போல் போக்குவரத்து செலவுகளையும் நீங்களே தான் பார்த்துக்கொள்ள வேண்டியதாக இருக்கும். அதுவே ஆன்லைன் பிசினஸ் என்றால் இது மாதிரி எந்த பிரச்சனைகளும் இருக்காது. ஆகவே இவற்றில் உங்களுக்கு எது விருப்பமோ அதனை செய்யலாம்.

Reselling Business பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉👉 ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம்

Computer Services:-

நமது தினசரி வாழ்க்கையில் பெருபாலும் பலர் கம்ப்யூட்டர், லேப்டாப் இது போன்ற சாதனங்கள் இல்லாதவர்கள் யாருமே இல்லை. ஆகவே அதில் ஏதாவது பிரச்சனை என்றால் உடனடியாக அதனை service செய்தால்  தான் அந்த பிரச்சனை சரியாகும். ஆகவே நீங்கள் Computer Service செய்வதற்கு பயிற்சி பெற்று, வீட்டில் இருந்தபடியே நல்ல வருமானம் பெறமுடியும். நீங்கள் சாதாரணமாக ஒரு கம்ப்யூட்டரை சர்விஸ் செய்துகொடுத்தலே அதன் மூலம் வீட்டில் இருந்தபடியே குறைந்தபட்சம் 2000 ரூபாய் வரை லாபம் பெற முடியும். மேலும் அதன் கம்ப்யூட்டரில் உள்ள பிரச்சனை பொறுத்து நீங்களே விலையை நிர்ணகித்துக்கொள்ளலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement