ஒரு முறை தயாரித்தால் போதும் 85,000/- லாபம் கிடைக்கும் தொழில்..!

Advertisement

வீட்டில் இருந்து செய்ய கூடிய புதிய தொழில் | Unique Business Ideas in Tamil 

Unique Business Ideas in Tamil  – வணக்கம் நண்பர்களே.. புதியதாக அதுவும் உணவு சார்ந்த தொழிலை தொடங்க வேண்டும் அன்று நினைக்கின்றிர்களா? அப்படி என்றால் இந்த பதிவு  உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது சமையலுக்கு அதிகளவு பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் பூண்டு. இந்த பூண்டை வைத்து தான் நாம் ஒரு தொழில் துவங்க போகிறோம். அது வேறு ஒன்றும் இல்லை பூண்டை நன்றாக Dehydrator செய்து பிறகு அதனை நமக்கு பவுடர் போல் அரைத்து விற்பனை செய்வதன்  மூலம் நல்ல வருமானம் பெற முடியும். அதிலும் இதனை ஏற்றுமதி செய்வதன் மூலம் வீட்டில் இருந்தபடியே நல்ல வருமானை பெறலாம். சரி வாங்க இந்த தொழிலை எப்படி தொடங்க வேண்டும், எவ்வளவு முதலீடு தேவைப்படும், இதன் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் போன்ற தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

இடம்:

இதன் தொழிலை நீங்கள் வீட்டில் இருந்தபடியே செய்யலாம். இதற்கு தனியாக இடம் வேண்டும் இன்று அவசியம் இல்லை. உங்கள் வீட்டில் 10-க்கு 10 இடம் இருந்தாலே போதும்.

மூலப்பொருட்கள்:

மூலப்பொருட்களை பொறுத்தவரை உங்களுக்கே தெரிந்திருக்கும் வேறு ஒன்று இல்லை பூண்டு தான் இதனை நீங்கள் மொத்தமாக சந்தியிலேயே வாங்கிக்கொள்ளலாம். அது தவிர பேக்கிங் கவர், பாட்டில் இருந்து போன்ற பொருட்கள் தேவைப்படும்.

இயந்திரம்:

பொதுவாக காய்கறி மற்றும் பழங்களை Dehydrator  செய்ய கூடிய இயந்திரங்கள் உள்ளது. அதன் பிறகு Dehydrator செய்யப்பட்ட பூண்டை பவுடர் போல் அரைக்க  Pulverizer Machine தேவைப்படுகிறது. அதுவும் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் விற்கப்படுகிறது ஆக அங்கு ஆர்டர் செய்து இந்த இரண்டு இயந்திரங்களையும்  வாங்கி கொள்ளலாம்.

  1. Dehydrator Machine விலை: 10,000/-
  2. Pulverizer Machine விலை: 10,000

முதலீடு:

  • உத்தரணத்திற்கு ஒரு கிலோ பூண்டு சந்தியில் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆக மொத்தமாக 300 கிலோ பூண்டு வாங்கினோம் என்றால் 15,000/- ரூபாய் தேவைபடும்.
  • இயந்திரங்களுக்கு 20,000/- தேவைப்படும்.
  • இதர செலவிற்கு – 5000/- ரூபாய் தேவைப்டும்.
  • பேக்கிங் + மின்சாரம் செலவிற்கு – 5000 ரூபாய் தேவைப்படும்.
  • ஆக மொத்தமாக இந்த தொழில் துவங்க நமக்கு 45,000/- முதலீட்டிற்கு தேவைப்படும்.

உற்பத்தி:

மூன்று கிலோ பூண்டை காயவைத்து பவுடர் செய்தால் நமக்கு அதிலிருந்து 1 கிலோ பூண்டு பவுடர் தான் கிடைக்கும்.

ஆக 300 கிலோ பூண்டிற்கு 100 கிலோ பூண்டு பவுடர் தான் கிடைக்கும்.

வருமானம்:

சந்தியில் 100 கிராம் பூண்டு பவுடரை 95 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்பனை செய்கின்றன. ஆக நீங்கள் சில்லறை விற்பனை மூலம் ஒரு கிலோ பூண்டு பவுடரை விற்பனை செய்தீர்கள் என்றால் உங்களுக்கு அதன் மூலம் 1100 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

அதுவே 100 கிலோ என்றால் 1,10,000/- ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

லாபம்:

வருமானம் – 1,10,000/- ரூபாய்
செலவு – 45,000/- ரூபாய் (-)
——————————-
லாபம் – 65,000/- ரூபாய் கிடைக்கும்

சந்தை வாய்ப்பு:

நீங்கள் தயார் செய்த பூண்டு பவுடரை சரியான முறையில் பேக்கிங் செய்து வேணுமென்றால் உங்கள் நிறுவனத்தின் பெயரில் பேக்கிங் செய்து, உங்கள் ஊரில் உள்ள டிபார்மண்ட் ஸ்டோர், சூப்பர் மார்க்கெட், மளிகை கடை போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம். இது போக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி கூட செய்யலாம். மேலும் ஆன்லைன் ஷாபோங் ஸ்டோரில் விற்பனை செய்யலாம்.

தேவைப்படும் சான்றிதழ்:

  • இது உணவு சார்ந்த தொழில் என்பதால் FSSAI License பெற்றிருக்க வேண்டும்.
  • நீங்கள் ஏற்றுமதி தொழில் செய்வதாக இருந்தால் அதற்கான ஏற்றுமதி உரிமை பெற்றிருக்க வேண்டும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement