கொஞ்சம் உழைத்தால் போதும் 10 நாளில் 1 லட்சம் வரை சம்பாரித்துவிடலாம்.. அருமையான சுயதொழில்..!

Advertisement

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஏற்றுமதி தொழில் | Vegetable Dehydration Business in Tamil

புதியதாக தொழில் துவங்க நினைக்கும் அனைவருக்கும் அன்பான வணக்கம்..! இப்போது எல்லாம் அனைவருமே சொந்தமாக தொழில் துவங்க வேண்டுமென்று விரும்புகின்றன. அந்த வகையில் குறையந்த முதலீட்டில், அதிகம் லாபம் தரக்கூடிய ஒரு அருமையான ஏற்றுமதி தொழிலை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். ஏற்றுமதி சார்ந்த தொழிலை விரும்பும் நபர்களுக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அது என்ன தொழில் என்று இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

என்ன தொழில்?

பொதுவாக நாம் சமையலுக்கு பொதுவாக காய்கறிகளை அதிகளவு பயன்படுத்துவோம்.. அந்த காய்கறிகளில் மிகவும் முக்கியமாக பயன்படுத்துவது வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு இதுபோன்ற பொருட்களை தான். இந்த பொருட்கள் பெரும்பாலும் விவசாயம் செய்யக்கூடிய இடங்களில் மிகவும் எளிதாக கிடைத்துவிடும். ஆனால் விவசாயம் செய்ய முடியாத இடங்களில் இதன் தேவை அதிகமாக உள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு இது போன்ற காய்கறிகளை பெரும்பாலான இடங்களில் விவசாயம் செய்யமுடிவதில்லை. காரணம் அந்த நாட்டில் தட்பவெப்ப நிலை என்று சொல்லாம். இதன் காரணமாகவே வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, வெங்காயத்தாள் போன்றவற்றை Dehydrate செய்து. நன்கு பவுடர் செய்து அதனை விற்பனை செய்கின்றான். வெளிநாடுகளில் பெரும்பாலும் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு இது போன்ற காய்கறிகளை Dehydrate செய்யப்பட்ட பவுடராக தான் பயன்படுத்துகின்றன. ஆக நாம் Dehydrated Vegetable Powder தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். சரி வாங்க இந்த தொழில் எப்படி ஆரம்பிக்கலாம், இதற்கு தேவைப்படும் மூலப்பொருட்கள், எவ்வளவு முதலீடு தேவைப்படும் மற்றும் இதன் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை பற்றி இப்பொழுது தெளிவாக பார்த்துவிடலாம்.

இடம்:

இதற்கு உங்களுக்கு சிறிய அளவில் இடம் தேவைபடும், அதுவும் உங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்தாக்கூட ஒன்றும் பிரச்னை இல்லை. எதற்கு இடம் தேவைப்படும் என்றால், காய்கறிகளை Dehydrated செய்யும் இயந்திரத்தை வைப்பதற்கும், காய்கறிகளை, சேமிப்பதற்கும் மற்றும் Dehydrated செய்யப்பட்ட Vegetable Powder-ஐ பேக்கிங் செய்து ஸ்டோர் செய்வதற்கும் தேவைப்படும்.

இயந்திரம்:

குறிப்பாக இந்த தொழிலுக்கு Dehydrator Machine அவசியம் தேவைப்படும்.. அப்பொழுது தான் காய்கறிகளை நன்றாக காயவைக்ககூடியும். இதன் விலை ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் 25,000/- ரூபாய் முதல் 1 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

அதன் பிறகு நன்கு Dehydrator செய்யப்பட்ட காய்கறிகளை, பவுடர் போல் அரைப்பதற்கு PULVERIZER HEAVY DUTY MACHINE தேவைப்படும் இதன் விலை 30,000/- ஆகும். இந்த இரண்டு இயந்திரங்கள் மட்டும் இருந்தால் போதும்.

இயந்திரத்தை பயன்படுத்தும் முறையையும் இயந்திரத்தை விற்பனை செய்யும்  நிறுவனமே சொல்லிக்கொடுத்துவிடுவார்கள்.

மூலப்பொருட்கள்:

இதன் மூலப்பொருட்கள் என்றால் காய்கறிகள் மட்டும் தான் வெங்காயம், வெங்காயத்தாள், தக்காளி, பூண்டு, இஞ்சி இது போன்ற காய்கறிகள் Dehydrator செய்யப்பட்டு அதிகளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆக இவற்றை முத்தமாக வாங்கிக்கொள்ளுங்கள். இது தவிர பேக்கிங் கவர் தேவைப்படும்.

முதலீடு:

  • இயந்திரதிக்கு – 55,000/-
  • மூலப்பொருட்கள் – 30,000/-
  • மின்சார செலவு – 1000/-
  • இடம் வடக்கை மற்றும் அட்வான்ஸ் – 50,000/-
  • ஆக முதல் முறையாக இந்த தொழிலை ஆரம்பிக்கும் போது உங்களுக்கு 1.50 லட்சம் வரை முதலீடாக தேவைப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 ஒரு நாளுக்கு 1000 லாபம்.. 10×10 கூட இடம் வேண்டாம் வீட்டில் இருந்தே தொழில் தொடங்கலாம்..

உற்பத்தி:

ஒரு கிலோ வெங்காயத்தை Dehydrator செய்து பவுடராக அரிக்கும் பொழுது நமக்கு அதில் இருந்து 200 கிராம் Onion Powder தான் கிடைக்கும். அதே போல் ஒரு டன் வெங்காயத்திற்கு நமக்கு 200 கிலோ Onion Powder தான் கிடைக்கும்.

விற்பனை மற்றும் லாபம்:

சந்தைகளில் Onion Powder ஒரு கிலோவின் விலை ரூ.350/- ரூபாய் ஆகும். ஒரு டன் வெங்காயத்திற்கு நமக்கு 70,000/- ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

இது போன்று தக்காளி, வெங்காயத்தாள், இஞ்சி, பூண்டு இது போன்ற காய்கறிகளை Dehydrated Vegetable Powder-ஆக தயிர் செய்து விற்பனை செய்யும்பொழுது கண்டிப்பாக உங்களுக்கு ஒரு மாதத்திற்கே 6,00,000/- வரை லாபம் கிடைக்கும்.

தேவைபடும் சான்றிதழ்:

இது உணவு சார்ந்த தொழில் என்பதால் கண்டிப்பாக நீங்கள் FSSAI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக இருந்தால் ஏற்றுமதி உரிமம் பெற வேண்டும்.

சந்தை வாய்ப்பு:

நீங்கள் தயார் செய்த Dehydrated Vegetable Powder மளிகை கடை, டிபார்மண்ட் ஸ்டோர், ரெஸ்ட்ராண்ட், ஹோட்டல், சூப்பர்மார்கெட் போன்ற இடங்களில் கட்டாயம் விற்பனை செய்யலாம். இருந்தாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள் என்றால் கண்டிப்பாக நல்ல லாபத்தை பெற முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 வாங்கும் விலை 200 விற்கும் விலை 800 வீட்டில் இருந்து லாபம் பெறுவதற்கு இது அருமையான தொழில்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement