கொய்யா சாகுபடி தொழில் நுட்பம்..!
கொய்யா சாகுபடி (Guava cultivation) முறையில் புதிய வேளாண் தொழில்நுட்பம். நாட்டில் முக்கிய பழப்பயிர்களுள் ஒன்றுதான் கொய்யா, குறிப்பிட்ட ஏப்ரல் முதல் மே மாதங்கள் வரை கொய்யா சாகுபடி (guava cultivation) செய்கின்றனர். அதன்பிறகு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை கொய்யா சாகுபடி (guava cultivation) செய்கின்றனர். மழை பருவத்தில் உற்பத்தி செய்யப்படும் கொய்யா பழங்கள், மகசூல் அளவில் அதிகரித்து காணப்பட்டாலும் அவற்றின் தரம் குறைவாகக் காணப்படுகிறது.
இத்தகைய சூழலில் பழ சந்தையின் சந்தை தேவையை கருத்தில் கொண்டு கொய்யா உற்பத்தியைப் பெருக்க மேற்குவங்க கொய்யா விவசாயிகள் வேளாண் விஞ்ஞானிகள் பங்களிப்புடன் புதிய தோட்டக்கலை தொழில்நுட்பம் வாயிலாக கொய்யா சாகுபடி (guava cultivation) முறையில் அதிகளவு லாபம் பெற்று வருகின்றனர். புதிய தோட்டக்கலை தொழில்நுட்பம் குறித்து இந்த பகுதியில நாம் படித்தறிவோம் வாருங்கள்.
தென்னை உர மேலாண்மை பற்றிய ஆலோசனைகள்..!
நிலம்:
நல்ல மண் பாங்கான இடம், சீரான தட்பவெப்பநிலை உள்ள பகுதியில் சாகுபடியாகும் கொய்யா மிகுந்த சுவையுடன் இருக்கும். கொய்யாவுக்கு அதிக பராமரிப்பு தேவையில்லை என்பதால், சாகுபடி பணியை குடும்பத்தினர் மட்டுமே மேற்கொள்ளலாம்.
இரகங்கள்:
கொய்யாவில் லக்னோ-49, பனாரஸ் ரகங்கள் சாகுபடிக்கு உகந்தவை. லக்னோ-49 ரகம் பச்சைக் காயாக விற்கவும், பனாரஸ் பழமாக விற்கவும் தகுந்தவை.
கொய்யா சாகுபடி தொழில் நுட்பம் (Guava Cultivation) முறையில் ஒரு மரத்தில் 50 கிலோ கொய்யா:
சராசரியாக ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 50 கிலோ காய்கள் கிடைக்கும். ஒரு கிலோ ரூ. 15-க்கு குறையாமல் விலைபோகும். சில நேரம், அதிகபட்சமாக ரூ. 60 வரை விற்பனையாகும். சராசரியாக கிலோவுக்கு ரூ. 20 என்ற விகிதத்தில் கிடைக்கும். ஒரு மரத்துக்கு ரூ. 250 வரை செலவாகும்.
வடிகால் வசதி:
வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளிலும் கொய்யா வளரும். மழைக்காலமான ஜூன்- ஜூலை மாதங்கள் நடவு செய்ய ஏற்றப் பருவம். செடிக்குச் செடி 8 அடி, வரிசைக்கு வரிசை 10 அடி என்ற அளவில் இடைவெளி விட்டு நடவேண்டும். 10 அடிக்கு 10 அடி இடைவெளி, 12 அடிக்கு 12 அடி என்ற இடைவெளியிலும் நடலாம். ஒரு ஏக்கரில் 300 மரங்கள் நடலாம்.
உளுந்து சாகுபடி முறையில் புதிய தொழில்நுட்பம்..!
நிலம் தயாரித்தல்:
நிலத்தை நன்கு உழவு செய்து, வரிசைக்கு வரிசை 10 அடி, செடிக்குச் செடி எட்டு அடி இடைவெளியில் ஓர் கன அடி அளவுக்குக் குழி தோண்ட வேண்டும்.
இந்த இடைவெளியில் குழி தோண்டினால் ஏக்கருக்கு 545 குழி கிடைக்கும். ஒவ்வொரு குழியிலும் தலா 2 கிலோ தொழு உரம், கால் கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து இட்டு, செடியை நடவேண்டும். இதிலிருந்து 3 மாதம் வரை வேர்ப் பகுதியில் ஈரம் காயாத அளவுக்குப் நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். பிறகு 15 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாசனம் செய்ய வேண்டும்.
நீர் மேலாண்மை:
மரத்தில் காய்கள் இல்லாதபோது, 20 நாளுக்கு ஒருமுறைகூட பாசனம் செய்யலாம். கால்வாய்ப் பாசனத்தைவிட சொட்டுநீர்ப் பாசனம் மிகவும் சிறந்தது. மரத்தில் பிஞ்சு, காய்கள் இருக்கும்போது, 15 நாளுக்கு ஒருமுறை கட்டாயம் பாசனம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பாசனத்தின்போதும் ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை நீரில் கலந்து விட வேண்டும்.
கொய்யா கவாத்து:
செடி ஒன்றரை அடி உயரம் வந்ததும் நுனியை வெட்டிவிட வேண்டும். இதனால், செடி சில கிளைகளாகப் பிரியும். காய்கள் கைக்கெட்டும் உயரத்தில் இருக்கும்.
குறிப்பிட்ட அளவுக்கு மேல் செடிகளை உயரவிடாமல், ஆண்டுக்கு 2 முறை கவாத்து செய்யவேண்டும். நடவு செய்து 5 மாதங்கள் கழித்து பூக்கத் தொடங்கும்போது பூக்களை உதிர்த்துவிட வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டு வரை பூக்களை உதிர்க்கவேண்டும்.
பூக்களை உதிர்ப்பதுடன், கவாத்தையும் முறையாகச் செய்தால்தான் மரங்கள் பருமனாக, தரத்துடன், பலமாக இருக்கும். 2 ஆண்டுக்கு மேல் பிஞ்சு பிடிக்க விடலாம்.
பயிர் பாதுகாப்பு முறை:
கொய்யா சாகுபடி தொழில் நுட்பம் – மாவுப்பூச்சி தாக்குதல்களுக்கு:
கொய்யா சாகுபடி (guava cultivation) பொறுத்தவரை கொய்யா மரத்தை மாவுப்பூச்சிதான் அதிகம் தாக்கும். 15 நாளுக்கு ஒருமுறை, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து மரங்கள் நனையும் அளவுக்குத் தெளித்தால், மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
தொடர்ந்து, பூச்சி தாக்குதல் இருந்தால் 1.5 லிட்டர் பஞ்சகவ்யா, 3 லிட்டர் ஜீவாமிர்தம், 500 மில்லி வேப்பெண்ணெய் ஆகியவற்றை 200 லிட்டர் நீரில் கலந்து மரம் முழுவதும் நனையும்படித் தெளிக்க வேண்டும்.
கொய்யா சாகுபடி தொழில் நுட்பம் – நூற்புழு தாக்குதல்களுக்கு:
கொய்யாவில் நூற்புழுத் தாக்குதலும் அதிகமிருக்கும். ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் செண்டுமல்லி செடிகளை நட்டு வைத்தால் நூற்புழுவை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.
இயற்கை முறை கொய்யா சாகுபடி முறையில் (guava cultivation), பெரும்பாலும் நூற்புழு தாக்குவதில்லை.நூற்புழு தென்பட்டால், ஒவ்வொரு மரத்தின் வேருக்கு அருகிலும் சிறிய குழி எடுத்து கைப்பிடி அளவு நன்கு இடித்த வேப்பங்கொட்டையை இட்டு, மூடிவிட வேண்டும்.
இவ்வாறு செய்வதால் நூற்புழு கட்டுப்படும். காய்கள் நல்ல பளபளப்பாக, அடர் பச்சை நிறத்திலிருந்து சற்று வெளுக்கத் தொடங்கியதும் கொய்யா சாகுபடி முறையில் (guava cultivation)அறுவடை செய்யலாம்.
தினமும் வருமானம் தரும் -அரளி மலர் சாகுபடி செய்யும் முறை..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.