அத்திப்பழம் சாகுபடி முறை:
அத்திப்பழம், மர வகையைச் சேர்ந்தது. இதை நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய, நடுத்தர மரமாகும்.
சரி அத்திப்பழம் சாகுபடி முறையை பற்றி இப்போது நாம் தெளிவாக காண்போம் வாங்க…
அத்திப்பழ சாகுபடி முறைக்கு ஏற்ற இரகங்கள்:
அத்தியில் நாட்டு அத்தி, டிம்லா அத்தி, ஆப்கான் அத்தி, இஸ்ரேல் அத்தி போன்ற வகைகள் உள்ளன. தை மாதம் நடவிற்கு ஏற்ற பருவம் ஆகும்.
கோடைகால முலாம்பழம் சாகுபடி -நல்ல வருமானம் கொடுக்கும்
மண்:
அத்திமரமானது களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரும் தன்மை கொண்டது.
நிலம் தயாரிப்பு:
அத்திப்பழம் சாகுபடி ((common fig) ) முறைக்கு தேர்வு செய்த நிலத்தை நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது 10 டன் தொழுஉரம் கலந்து உழவு செய்ய வேண்டும்.
பயிர் பெருக்கத்தை அதிகரிக்க:
அத்திப்பழம் சாகுபடி (common fig) முறையில் பயிர் பெருக்கத்தை அதிகரிக்க விண் பதியன்கள் மற்றும் ஒட்டுக்கட்டுதல் மூலம் பயிர்ப் பெருக்கம் செய்யப்படுகிறது.
தேர்வு செய்த பதியன்களை 5.7 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். மழை காலங்களில் நடவு செய்தால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
இது வறட்சியைத் தாங்கி வளர்வதால் இவற்றை மானாவாரியாக பயிர் செய்யலாம். இறவையாக பயிரிட்டு தண்ணீர் பாய்ச்சுவதால் அதிக மகசூல் கிடைக்கும்.
ரோஸ் செடி நல்ல வளர்வதற்கு சில டிப்ஸ்..!
உரங்கள்:
அத்திப்பழம் சாகுபடி பொறுத்தவரை நன்கு வளர்ந்த மரம் ஒன்றுக்கு 20 கிலோ காய்ந்த தொழு எருவும், 600 கிராம் தழைச்சத்து, 350 கிராம் சாம்பல் சத்து, 400 கிராம் மணிச்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அளிக்கவேண்டும். இந்த உர அளவை பிரித்து இரண்டு தடவையாக கொடுக்க வேண்டும்.
களை நிர்வாகம்:
செடிகள் வளரும் வரை, களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். பழ பறிப்பு முடிந்தவுடன் கவாத்து செய்ய வேண்டும்.
பயிர் பாதுகாப்பு:
அத்திப்பழம் சாகுபடி பொறுத்தவரை நோய் தாக்குதல் குறைவு. இருப்பினும் அசுவினி பூச்சி தாக்குதல் மட்டும் காணப்படும்.
அசுவினி பூச்சியை கட்டுப்படுத்த டைமெத்தோயேட் அல்லது மீதைல் டெமட்டான் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
நடவு செய்த 4வது ஆண்டு முதல் மகசூல் தரவுள்ளது. ஆனால் 8 ஆண்டிற்கு பிறகு நிரந்தர வருமானம் கிடைக்கும்.
மகசூல்:
அத்திப்பழம் சாகுபடி (common fig) முறையில் ஒரு மரத்தில் இருந்து 180 முதல் 360 கிலோ பழங்கள் மகசூலாக கிடைக்கும்.
அத்திப்பழம் பயன்கள் (Common Fig Benefits):
தினசரி 2 பழங்களை சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
அத்திபழத்தில் இரும்புச்சத்து உள்ளது. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது.
உண்ட உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து பித்தத்தை வியர்வையாக வெளியேற்றி உடலுக்குச் சுறுசுறுப்பைத் தரும்.
வெண்புள்ளிகளைக் குணமாக்க அத்திப்பழத்தைப் பொடி செய்து பன்னீரில் கலந்து பூச வேண்டும்.
உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் கலந்தும் சாப்பிடலாம்.
சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் உதவுகிறது.
அத்தி பழங்கள் ரத்தத்தை சுத்தம் செய்து, உடல் உஷ்ணத்தை குறைத்து மூல நோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.