இயற்கை விவசாயம் – பிளம்ஸ் பழம் சாகுபடி..!

இயற்கை விவசாயம் – பிளம்ஸ் பழம் சாகுபடி..!

பிளம்ஸ் பழம் பார்ப்பதற்கு அழகாகவும், கவர்ந்திழுக்கும் வண்ணத்துடன் காணப்படும். இந்த பிளம்ஸ் பழம் இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையுடன் இருக்கும். குறிப்பாக இந்த பழங்கள் மலைப்பாங்கான பகுதிகளில் மட்டுமே அதிகமாக விளையக்கூடியது. தமிழ்நாட்டில் கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக விளையக்கூடியது.

சரி வாங்க இந்த பிளம்ஸ் பழம் சாகுபடி முறையை பற்றி இப்போது இந்த பகுதியில் நாம் படித்தறிவோம்.

தர்பூசணி சாகுபடி முறைகள் – தர்பூசணி விவசாயம்..!

இரகங்கள்:-

பிளம்ஸ் பழம் சாகுபடி பொறுத்தவரை குறுக்கியகால இரகங்கள், இடைக்கால இரகங்கள் மற்றும் நீண்டகால இரகங்கள் என்று மூன்று வகை இரகங்கள் உள்ளது.

குறுகிய கால இரகம்: ரூபியோ.

இடைக்கால இரகம்: ஹேல், கேவியோட்டா மற்றும் அபன்டன்ஸ்.

நீண்டகால இரகம்: கெல்சி, ஸார் மற்றும் ஷாட்சுமா ஆகிய இரகங்கள் சாகுபடி செய்ய ஏற்றவையாகும்.

பருவ காலங்கள்:-

பிளம்ஸ் சாகுபடி பொறுத்தவரை குறுகிய காலம் மற்றும் இடைக்கால இரகங்கள் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. நீண்ட கால இரகங்களுக்கு ஜூலை முதல் ஆகஸ்ட் ஏற்ற பருவ காலங்கள் ஆகும்.

நிலம்:-

பிளம்ஸ் சாகுபடி பொறுத்தவரை நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் மற்றும் கரிசல் மண் கலந்த களிமண் ப்ளம்ஸ் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது.

மண்ணின் கார அமிலத்தன்மை:-

பிளம்ஸ் பழம் சாகுபடி பொறுத்தவரை மண்ணின் கார அமிலத்தன்மை 5.8 முதல் 6.2 இருக்க வேண்டும்.

நிலம் மேலாண்மை:-

பிளம்ஸ் சாகுபடி முறைக்கு தேர்வு செய்த நிலத்தினை நன்கு உழவு செய்ய வேண்டும். 60 செ.மீ நீளம், அகலம், ஆழமுள்ள குழிகளை தயார் செய்து அதில் தொழு உரம் அல்லது கலப்பு உரங்களை இட்டு குழிகளை ஆற போட வேண்டும்.

விதைத்தல்:-

ஒவ்வொரு குழிக்கும் 4 மீட்டர் இடைவெளி இருக்குமாறு குழிகளின் மத்தியில் கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

நீர் மேலாண்மை:-

கன்றுகளை நடவு செய்தவுடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இதை தொடர்ந்து மூன்று நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பிறகு மண்ணின் தன்மைக்கேற்ப தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள்:-

பிளம்ஸ் பழம் சாகுபடி பொறுத்தவரை பழங்கள் காய்க்கும் மரங்களுக்கு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மக்கிய தொழு உரம் 30 கிலோ, 500 கிராம் தழைச்சத்து, 1 கிலோ மணிச்சத்து மற்றும் ஒரு கிலோ சாம்பல் சத்தினை அளிக்க வேண்டும். இதனையே பிரித்து இரண்டு முறை அளிக்க வேண்டும்.

சொட்டு நீர் பாசனம் – முழு விளக்கம்..!

பயிர் பாதுகாப்பு முறை:-

களை நிர்வாகம்:-

செடிகள் நன்கு வளரும் வரை களைகள் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும். மொட்டு ஒட்டுக்கட்டிய பகுதிக்கு கீழிலிருந்து வளரும் துளிர்களை அவ்வப்போதே வெட்டி களை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கவாத்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும். காய்ந்த குச்சிகளையும், குறுக்காக உள்நோக்கி வளரும் குச்சிகளையும், மிக மெலிந்த குச்சிகளையும் வெட்டி எறிந்துவிட வேண்டும்.

பழ ஈக்கள் கட்டுப்படுத்த:-

பழ ஈக்களை கட்டுப்படுத்த அதிகாலை வேளையில் மாலத்தியான் 50 இசி 2 மில்லி மருந்து, ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது பென்தியான் 100 இசி 1 மில்லி, ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கவேண்டும். ப்ளம்ஸ் மரங்களை வேறு எந்த நோய்களும் தாக்குவது இல்லை.

அறுவடை:-

பிளம்ஸ் சாகுபடி பொறுத்தவரை நன்கு பழுத்த பழங்களை அறுவடை செய்ய வேண்டும். பிளம்ஸ் மரங்கள் சுமார் 20 ஆண்டுகள் வரை நல்ல பலன் கொடுக்கக்கூடியது.

மகசூல்:-

ப்ளம்ஸ் பழம் சாகுபடி பொறுத்தவரை மேல் கூறப்பட்டுள்ள சாகுபடி முறையை பின்பற்றினால் மரம் ஒன்றுக்கு, ஒரு வருடத்தில் 25 டன் முதல் 30 கிலோ பழங்கள் வரை மகசூலாக பெற முடியும்.

மல்லிகை பூ சாகுபடி முறைகள்..!
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம்..!