வீட்டில் உள்ள எலியை விரட்டும் வழிகள்..! Rat killer in tamil..! How to get rid of rats in home ..!

வீட்டில் உள்ள எலியை விரட்டும் வழிகள்..! Rat killer in tamil..! How to get rid of rats in home ..!

இன்று அனைவரும் எதிர்பார்க்கும் அளவிற்கு ஒரு முக்கியமான விஷயம் அது என்னவென்றால் வீட்டில் உள்ள எலியை விரட்டும் வழிகள் (get rid of rats from home) பற்றிய விவரங்களை இன்று முழுமையாக தெரிந்துக்கொள்ளுவோம்..!

Rat killer in tamil/ எலியை விரட்டுவது எப்படி:- தமிழ்நாட்டில் அனைவரும் பிரச்சனையாக நினைப்பது இந்த எலி தொல்லைதாங்க. விவசாயிகள் பெரும்பாலானோர் இந்த எலி தொல்லையினால் மிகவும் பாதிப்பு அடைகின்றனர். விவசாயிகள் மட்டும் இல்ல வீட்டில் உள்ள பெண்களுக்கும் இந்த எலி தொல்லை இருந்துகொண்டே தாங்க இருக்கு. இந்த எலிகளால் ஏற்படும் சேதம், இழப்புகளை எளிமையாக தவிர்க்க இந்த பதிவில் நாங்கள் கூறியுள்ள டிப்ஸை செய்து வீட்டில் உள்ள எலியை எளிமையாக விரட்டலாம். சரி வாங்க அதற்கான எளிய வழிமுறைகளை நாம் தெரிந்துக்கொள்ளுவோம்..!

newசீரக சம்பா சாகுபடி முறை..! Seeraga Samba Rice Cultivation..!

 

எலியை விரட்ட வழிகள்| எலியை விரட்டுவது எப்படி?

எலியை விரட்டும் வழிகள் டிப்ஸ் (Rat killer in tamil) 1:

முதல் டிப்ஸ் வீட்டில் இருக்கக்கூடிய 2 பாரசிட்டமால்(paracitamol) மாத்திரையை எடுத்து நன்றாக நுணிக்கி வைத்து கொள்ளவும். இதை தனியாக ஒரு பவுலில் கொட்டி அதனுடன் 2 ஸ்பூன் கோதுமை மாவு சேர்த்துக்கவும். அதுமட்டும் இல்லாமல் அரிசி மாவு அல்லது கடலை மாவு வேணாலும் கூட இதனுடன் சேர்த்து கொள்ளலாம்.

அடுத்து எல்லாவற்றையும் சேர்த்த பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு செய்ற பதம் அளவுக்கு இதை ரெடி பண்ணி வெச்சிக்கோங்க. அடுத்ததாக இந்த மாவை சிறிய சிறிய உருண்டை வடிவில் உருட்டி கொள்ளவும். இந்த உருண்டையை எலி வரும் இடத்திற்கு எடுத்து போய் வைத்தால் கண்டிப்பா எலி வரும் பிரச்சனை இருக்கவே இருக்காதுங்க. வீட்ல கண்டிப்பா இதை ட்ரை பண்ணி பாருங்க.

எலி தொல்லை நீங்க டிப்ஸ் (how to get rid of rats) 2:

இரண்டாவது டிப்ஸ் எலிக்கு பிரியாணி இலை வாடை என்றாலே அறவே புடிக்காத ஒன்றாகும். உங்கள் வீட்டில் எலி தொல்லை(get rid of rats) உடனே நீங்க பிரியாணி இலை வீட்டில் இருந்தாலும் சரி இல்லாதவர்கள் கடைகளில் வாங்கி வந்து பிரியாணி இலையை பொடி செய்து எலி வரும் இடத்திற்கு பிரியாணி இல்லை பொடியை தூவி விட்டாலே போதும். உங்கள் வீட்டில் எலிகளின் தொல்லை இருக்காது.

எலியை விரட்டும் வழிகள் டிப்ஸ் (Rat killer in tamil) 3:

எலி தொல்லை நீங்க: மூன்றாவது டிப்ஸ் பாத்தோம்னா எலிகளை விரட்ட எல்லாரும் வீட்ல இருக்கக்கூடிய மிளகு பொடி தாங்க. இத வெச்சா எலி வராதான்னு நினைக்காதீங்க. கண்டிப்பா எலி வரும் எல்லா இடத்துலையும் இந்த மிளகு பொடியை வெச்சீங்கனா எலி தொல்லை சுத்தமா குறைந்துவிடும்.

newதண்டு கீரை சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..!

எலி தொல்லை நீங்க டிப்ஸ் (get rid of rats home remedy) 4:

எலியை விரட்டும் வழிகள்

how to kill rat in home in tamil: நான்காவது டிப்ஸ் வீட்ல இருக்கக்கூடிய வெங்காயம் தாங்க. இந்த வெங்காய சாறு எலிகளுக்கு புடிக்காது. அதனால் ஒரு வெங்காயம் எடுத்துக்கோங்க அந்த வெங்காயத்தை நல்லா மிக்ஸில அரைத்து எடுத்துக்கோங்க.

அடுத்து தனியாக இன்னொரு வெங்காயம் எடுத்து வட்டம் வட்டமாக நறுக்கி எடுத்து கொள்ளவும். இந்த வட்டமாக நறுக்கிய வெங்காயத்தை அரைத்து வைத்துள்ள வெங்காய சாற்றுடன் நனைத்து ஒரு 2 அல்லது 3 இடங்களில் இதை வைத்தால் எலிகள் பிரச்சனைகள் தீர்ந்து விடும். எல்லாரும் மறக்காம ட்ரை பண்ணுங்க.

எலியை விரட்டும் வழிகள் டிப்ஸ் (get rid of rats from home) 5:

ஐந்தாவது டிப்ஸ் சிறிய குழந்தைகள் இருக்கும் வீட்டில் கண்டிப்பா பேபி பவுடர் இருக்கும். பேபி பவுடர்க்கு எலிகள் வராது. அதாவது பேபி பவுடரை எலிகள் எங்கெல்லாம் வருதுன்னு பார்த்துட்டு அங்க நீங்க பவுடரை லைட்டா தெளிச்சு விட்டாலே போதுங்க. கண்டிப்பா இந்த வாடைக்கும் எலி தொல்லை இருக்காது.

எலி தொல்லை நீங்க டிப்ஸ் (Rat killer in tamil) 6:

ஆறாவது டிப்ஸ் புகையிலை அதாவது இதை(கட்ட புகையிலை) என்று கூறுவார்கள். அந்த கட்ட புகையிலையை தூள் செய்து கொள்ளவும். அடுத்து அந்த தூளை எலி வரும் இடத்தில் இந்த தூளை வைத்தாலே போதும். அந்த புகையிலை வாடைக்கு அறவே எலிகள் வராது. 

அவ்ளோதாங்க உங்க வீட்ல இருக்க எலி தொல்லையில் இருந்து விடுபட ஈஸியான வீட்ல இருக்க பொருள்கள் வெச்சே நம்ம எலியை விரட்டலாம். இதற்காக கடையில் விற்கும் எலிக்கொல்லி மருந்துகளை வாங்குவதை தவிர்த்து எளிமையான முறையில் இந்த பதிவை பார்த்து நீங்களே இந்த டிப்ஸ் எல்லாத்தையும் ட்ரை பண்ணி பாருங்க.

newடீ கம்போஸ்ட் உரம் தயாரிப்பது எப்படி?


வயல்களில் உள்ள எலியை விரட்டும் வழிகள்..! Rat killer in tamil..!

எலியை விரட்டும் வழிகள்

Rat killer in tamil:- விவசாயிகள் விளைவிக்கும் தானியங்கள், பெரும்பாலும் எலிகளால் பெரும் சேதம் அடைகின்றன. இதனால், விவசாயிகள் கடும் நஷ்டத்தை அடையும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்த எலிகளை முறையான வழிகளை பயன்படுத்தி அழிக்கலாம். தற்போது பகல் நேரத்தில் அதிக வெப்பநிலையும், இரவு நேரத்தில் குறைவான வெப்பநிலையும் நிலவி வருகிறது. இந்த வெப்பநிலை மாறுபாட்டால், வீட்டிலும், வயல்வெளிகளிலும், தென்னை தோப்புகளிலும் எலிகளின் தொல்லை அதிகமாக காணப்படுகிறது.

எலிகளால் ஏற்படும் சேதங்களையும், இழப்பையும் தடுக்க, வயல்களிலும், வீட்டிலும், தென்னைமர தோப்பிலும் ஒருங்கிணைந்த எலி ஒழிப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

சரி வாங்க இந்த பதிவில் எலியை விரட்டும் வழிகள் என்னென்ன உள்ளது என்பதை பற்றி நாம் படித்தறிவோம்.

தர்பூசணி சாகுபடி முறைகள் – தர்பூசணி விவசாயம்..!

எலியை விரட்டும் வழிகள்..!

நஞ்சுணவை தயாரிப்பது எப்படி?

எலியை விரட்டும் வழிகள் டிப்ஸ் (Rat killer in tamil): 1 

துத்தநாக பாஸ்பைடு 1 பங்கு, உணவுப் பொருள் 19 பங்கு சேர்த்து நஞ்சு உணவு உருவாக்கி ஒரு டீஸ்பூன் அளவில் ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் வைத்து எலிகளை அழிக்கலாம்.

எலி தொல்லை நீங்க டிப்ஸ் (Rat killer in tamil): 2

இரத்தம் உறையாமல் செய்யும் மருந்துகளை வைத்தும் எலிகளை கொல்லலாம். அதாவது, உணவுப் பொருள் (அரிசி, கேழ்வரகு, மாவு) 450 கிராம், சமையல் எண்ணெய் 10 கிராம், நாட்டுச் சர்க்கரை 15 கிராம், “Warfarin (வார்ஃபரின்)’, ரோடாஃப்ரின், டோமோரின், புரோமோடைலான் 25 கிராம் ஆகியவை சேர்த்த நஞ்சு கலந்த இந்த உணவை 6 டீஸ்பூன் அளவுகளில், ஒவ்வொரு இடத்திலும் வைக்க வேண்டும்.

எலிகள் முழுவதும் அழியும் வரை தொடர்ந்து இந்த நஞ்சுணவை வைக்க வேண்டும். இது வீட்டு எலிகளை ஒழிக்க சிறந்த முறையாகும்.

மேலும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஒட்டுப் பொறிகளை வைத்தும் வீட்டு எலிகளை ஒழிக்கலாம்.

கரப்பான் பூச்சி, எறும்பு, வண்டு, எலி, பல்லி, மூட்டை பூச்சி வராமல் இருக்க இதை மட்டும் செய்யுங்க..!

எலியை விரட்டும் வழிகள் டிப்ஸ் (Rat killer in tamil): 3

மேலும் உடைந்த அரிசி 93 கிராம், சர்க்கரை 3 கிராம், கடலை எண்ணெய் 2 கிராம், புரோமோடைலான், ரொபான் அல்லது ரேட்டால் 2 கிராம் சேர்த்து ஒவ்வொரு இடத்திலும் வைக்க வேண்டும்.

எலிகள் முழுவதும் அழியும் வரை தொடர்ந்து இந்த நஞ்சுணவை வைக்க வேண்டும். இது சேமிப்பு கிடங்குகளில் எலிகளை ஒழிக்க சிறந்த முறையாகும்.

ரோஜா செடிகள் தொடர்ச்சியாக பூக்கள் பூக்க 10 பயனுள்ள டிப்ஸ்..!

எலி தொல்லை நீங்க டிப்ஸ் (Rat killer in tamil): 4

உடைந்த கோதுமை 65 கிராம், வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை 3 கிராம், 0.25% புரோமோடைலான் 02 கிராம், பாரபின் மெழுகு 30 கிராம் என மேற்படி நஞ்சு கலந்த உணவினை 5 செ.மீ நீளம் மற்றும் 2.5 செ.மீ அகலம் என்ற அளவில் சிறிய சிறிய கேக்குகளாக வெட்டி 5 கேக்குகள் என்ற அளவில் பொந்துகள், வலைகள், தென்னை மரம் மேல், வீட்டின் கூரைகள் போன்ற இடங்களில் வைக்க வேண்டும்.

எலியை விரட்டும் வழிகள் டிப்ஸ் (Rat killer in tamil): 5

ஆந்தை மற்றும் கோட்டான் போன்ற பறவைகள் அதிகமான எலிகளை இரவில் வேட்டையாடும் பழக்கத்தை கொண்டவை.

எனவே கோட்டான்களை நம் இடத்திற்கு வரவழைக்க ஒரு ஏக்கரில் ஐந்து முதல் எட்டு இடங்களில் 6 அடி முதல் 8 அடி உயரம் கொண்ட T வடிவ குச்சிகளை நட்டு வைப்பதன் மூலம் ஆந்தைகளும் கோட்டான்களும் நிலத்திற்கு வரவழைக்க முடியும்.

எலி தொல்லை நீங்க டிப்ஸ் (Rat killer in tamil): 7

நம்முடைய நிலத்தில் இருக்கிற எலி தொல்லையை குறைப்பதற்கு நம்ம வயல்களில் இருக்கிற வரப்புகளின் உயரத்தையும் அகலத்தையும் உழைக்க வேண்டும். அதாவது நிலத்தின் வரப்பை செங்குத்தாக அமைக்காமல் 45 டிகிரி சாய்வாக அமைப்பதன் மூலம் எலி தொல்லையில் இருந்து விடுபட முடியும்.

செண்டு மல்லி பூ சாகுபடி முறை..!Chendu Malli Sagupadi in Tamil..!
இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Pasumai Vivasayam in Tamil