இயற்கை விவசாயம் சோயா மொச்சை சாகுபடி முறை..!

சோயா மொச்சை சாகுபடி

இயற்கை விவசாயம் சோயா மொச்சை சாகுபடி முறை..!

பயறு வகைகளை இயற்கை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள், 90 நாட்களில் நல்ல பலன் தரக்கூடிய சோயா மொச்சை சாகுபடி (soybean cultivation) முறையை பற்றி இப்போது நாம் இந்த பகுதில் படித்தறிவோம் வாங்க.

இரகங்கள்:

சோயா மொச்சை சாகுபடி (soybean cultivation) பொறுத்தவரை கோ 1 (இறவை), கோ 2, கோ 3(சோயா)  போன்ற ரகங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது.

செண்டு மல்லி பூ சாகுபடி முறை..!

பருவகாலம்:

சோயா மொச்சை சாகுபடி (soybean cultivation) பொறுத்தவரை ஆடிப்பட்டம் (ஜூன் – ஜூலை மாதங்களிலும்), புரட்டாசிப் பட்டம் (செப்டம்பர் – அக்டோபர் மாதங்களிலும்) மற்றும் மாசிப்பட்டம் (பிப்ரவரி –  மார்ச் மாதங்களிலும்) சாகுபடி செய்யப்படுகிறது.

நிலம்:

சோயா மொச்சை சாகுபடி (soybean cultivation) முறைக்கு தேர்வு செய்யப்பட்ட நிலமானது  கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகப் பயிர் பயிரிடப்பட்டிருக்கக் கூடாது. அவ்வாறு பயிரிடப்பட்டிருந்தால் அதே ரகங்களை மட்டுமே சாகுபடிக்கு பயன்படுத்த வேண்டும்.

விதையளவு:-

சோயா மொச்சை சாகுபடி (soybean cultivation) பொறுத்தவரை கோ 1. கோ(சோயா) 3 ஆகிய ரகங்கள் ஒரு ஏக்கருக்கு 80 கிலோ போதுமானது.

கோ 2 (மானாவாரி) தனிப்பயிர் ரகங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 60 முதல் 70 கிலோ இரகங்கள் போதுமானது.

சோயா மொச்சையை ஊடுபயிராக சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு 25 கிலோ விதைகள் போதுமானது.

விதை நேர்த்தி:

சோயா மொச்சை சாகுபடி பொறுத்தவரை, விதையிலிருந்து பரவும் நோய்களான நுனிக்கருகல் நோய், வாடல் நோய், இலைப்புள்ளி நோய், அழுகல் வேர் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு கிலோ விதைக்கு கார்பென்டாசிம் 2 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்யவும்.

அதிக லாபம் தரும் சாமந்தி பூ சாகுபடி!!!

நுண்ணுயிர் கலந்தல்:

தமிழ்நாடு வேளாண்மை பல்கழைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ரைசோபியம் பாஸ்போபாக்டீரியா 3 பாக்கெட் (600 கிராம் / ஏக்கருக்கு) மற்றும் (COS1) 3 பாக்கெட் (600 கிராம் / ஒரு ஏக்கருக்கு) உடன் கஞ்சி கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதை நேர்த்தி செய்யாவிட்டால், ஒரு ஏக்கருக்கு 10 பாக்கெட் ரைசோபியம் (2000 கிராம்) மற்றும் 10 பாக்கெட் (2000 கிராம்) பாஸ்போபாக்டீரியா உடன் 25 கி.கி. தொழு உரம் மற்றும் 25 கி.கி உரம் மற்றும் 25 கி.கி மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் இடவேண்டும்.

பாக்டீரியாவால் விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 15 நிமிடத்திற்கு உலர்த்த வேண்டும்.

விதைப்பு:

சோயா மொச்சை சாகுபடி பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு விதைகளை 2-3 செ.மீ. ஆழத்தில் 30 x 10 செ.மீ. என்ற இடைவெளியில் ஊன்ற வேண்டும்.

ஊட்டச்சத்து மேலாண்மை:

உரங்கள்:

சோயா மொச்சை சாகுபடி பொறுத்த வரை ஒரு ஏக்கருக்கு 20 கிலோ தழைச்சத்து, 80 கிலோ மணிச்சத்து, 40 கிலோ சாம்பல் சத்து மற்றும் 40 கிலோ கந்தகச்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அடி உரமாக இடவேண்டும்.

விதைகளை விதைத்த 40-வது நாளில் இலை மூலம் 2% டிஏபி கரைசல், தெளிப்பதன் மூலமும், சாலிசிலிக் அமிலம் 100 பிபிஎம் (50 கிராம்/ 500 லி/ஒரு ஏக்கருக்கு) இலை மூலம் விதைத்த 30-வது மற்றும் 40-வது நாளில் தெளிப்பதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்.

ரோஜா செடிகள் தொடர்ச்சியாக பூக்கள் பூக்க 10 பயனுள்ள டிப்ஸ்..!

நீர் மேலாண்மை:

சோயா மொச்சை சாகுபடி பொறுத்தவரை விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு  விதைத்த மூன்று நாட்கள் கழித்து ஒரு முறை உயிர் தண்ணீர் காட்ட வேண்டும்.

பின்னர் மண் மற்றும் காலநிலைகளுக்குத் தகுந்தவாறு குளிர்காலத்தில் 10 முதல் 15 நாட்கள் இடைவெளியில் கோடை காலத்தில் 7 முதல் 70 நாட்கள் இடைவெளியிலும் நீர் பாய்ச்ச வேண்டும்.

சோயா மொச்சை அதிகமாக ஈரம் இருக்குமாயின் பாதிக்கப்படும். வயலில் நீர்தேங்கி இருப்பதை தவிர்க்க வேண்டும். பூக்கும் பருவத்திலிருந்து முதிர்ச்சிப் பருவம் வரை நீர் பற்றாக்குறை பாதிப்பதில்லை.

வறட்சியின் தாக்கத்தை சரிக்கட்ட கயோலின் 3 சதவிகிதக் கரைசல் அல்லது பாரபின் 1 சதவிகித கரைசலை இலையின் மீது தெளிக்க வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் சோயாமொச்சை மற்றும் ஆமணக்கு விதைப்பில் 0.60 பாசன கூட்டு விகிதத்தில் பாசனம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

அதிகபட்ச பயன் கிடைப்பதற்கு 10 முதல் 12 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்வது சிறந்ததாகும்.

முருங்கை சாகுபடி

களை மேலாண்மை:-

சோயா மொச்சை சாகுபடி பொறுத்தவரை இறவைப் பயிருக்கு இரு ஏக்கருக்கு பெண்மித்திலின் 3.3 லிட்டர் அல்லது ஆலகுளோர் 4.0 லிட்டர் விதைத்தவுடன் தெளித்து, உடன் நீர் பாய்ச்ச வேண்டும்.

இதன் மூலம் விதைத்தலில் இருந்து 30 நாட்களுக்குள் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

விதைத்த 30 நாட்களுக்குப் பின்னர் களைகளை ஒரு முறை எடுத்து நீர் பாய்ச்ச வேண்டும்.

களைக்கொல்லி தெளிக்கவில்லையெனில் விதைத்த 20 மற்றும் 35 நாட்களுக்குப் பின்னர் கைக்களை எடுக்க வேண்டும்.

முளைத்த பின் களைக்கொல்லியான இமாசிதிபரை விதைத்த 20 நாட்களில் தெளிக்க வேண்டும். அதனை தொடர்ந்து 30 நாளில் ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும்.

அறுவடை:

விதைகள் பூத்த 27-30 நாட்களில் வினையியல் முதிர்ச்சி அடைகின்றன.
செடிகளை ஒரே முறையாக அறுவடை செய்து வெய்யிலில் நன்கு உலர வைக்க வேண்டும்.

முல்லை பயிரிடும் முறை மற்றும் பயன்கள்..!
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம்..!