சுரைக்காய் சாகுபடி முறை:
சுரைக்காய் பொதுவாக சைவ உணவுகளில் கூட்டு மற்றும் பொரியலில் முதல் இடத்தில் இடம் பெற்றிருக்கும். இந்த சுரைக்காயில் அதிகளவு நீர்ச்சத்து உள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், இந்த சுரைக்காயை அதிகளவு உண்டு வந்தால் உடல் எடையை உடனே குறைத்துவிட முடியும். பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு இந்த சுரைக்காய் மருத்துவ பயன்கள் அதிகளவு பயன்படுகிறது.
சரி இந்த பகுதில் சுரைக்காய் சாகுபடி முறை பற்றி இப்போது காண்போம்.
சுரைக்காய் விவசாயம்:
சுரைக்காய் சாகுபடி முறைக்கு ஏற்ற இரகங்கள்:
கோ 1, பூசா சம்மர் (நீளம்), பூசா சம்மர் (உருண்டை), பூசா மஞ்சரி, பூசா மேகதூத், அர்கா பகார் இந்த வகை இரகங்கள் சுரைக்காய் சாகுபடி முறைக்கு ஏற்ற இரகங்கள்.
சுரைக்காய் சாகுபடி முறைக்கு ஏற்ற மண்:
சுரைக்காய் வளர்ச்சிக்கு மண்ணின் காரம், அமிலத் தன்மை 6 முதல் 7 சதவீதமாக இருப்பது நல்லது. பொதுவாக இதனை அனைத்து வகையான மண்ணிலும் சாகுபடி செய்யலாம்.
இது வெப்ப மண்டலப் பயிராகவும், வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. சில பகுதிகளில் மரங்கள், வேலிகளில் படர்ந்தும் வளரும்.
தர்பூசணி சாகுபடி முறைகள் – தர்பூசணி விவசாயம்
தட்பவெப்பநிலை:
வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிர், பனிவிழும் பிரேதேசத்திலும் சுரைக்காய் சாகுபடி செய்ய முடியும்.
இந்த சுரைக்காய் சாகுபடி முறையில் அதிக மகசூல் பெறவேண்டும் என்றால் கார அமிலத்தன்மை 6.5-7.5 இருத்தல் வேண்டும்
சுரைக்காய் சாகுபடி முறைக்கு ஏற்ற பருவகாலங்கள்:
ஜூலை மற்றும் ஜனவரி மாதங்களில் இந்த சுரைக்காய் சாகுபடி செய்ய ஏற்ற பருவகாலங்கள் ஆகும்.
சுரைக்காய் விதை அளவு:
சுரைக்காய் விவசாயம் செய்ய ஒரு ஏக்கருக்கு 3 கிலோ சுரைக்காய் விதைகள் போதுமானது.
சுரைக்காய் விதை நேர்த்தி:
விதைப்பதற்கு முன் விதைகளை நேர்த்தி செய்து விதைக்கவேண்டும்.
ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திரம் என்ற அளவில் உபயோகிக்கவேண்டும். அதன் பிறகு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
நிலம் தயாரித்தல் மற்றும் விதைத்தல்:
சுரைக்காய் சாகுபடி முறைக்கு தகுந்த நிலத்தை தேர்ந்தெடுத்த பிறகு, நிலத்தை 3 அல்லது 4 முறை உழவு செய்து கடைசி உழவின் போது ஏக்கருக்கு 10 டன் மக்கிய தொழு உரம் இடவேண்டும். பின்பு 2.5×2 மீட்டர் இடைவெளியில் வாய்க்கால்கள் 30x30x30 செ.மீ நீளம், அகலம், ஆழம் என்ற அளவில் குழிகள் வெட்ட வேண்டும். பின்பு ஒவ்வொரு குழியிலும் 5 விதைகளை விதைத்து நீர் ஊற்ற வேண்டும்.15 நாட்கள் கழித்து குழி ஒன்றில் இரண்டு வளமான செடிகளை விட்டு விட்டு மற்றவைகளை களைந்துவிட வேண்டும்.
மாடித்தோட்டம் உருளைக் கிழங்கு பயிரிடும் முறை மற்றும் பயன்கள் !!!
ஊட்டச்சத்து மேலாண்மைக்கு:
ஒவ்வொரு குழிக்கும் மக்கிய தொழு உரம் 10 கிலோ இடவேண்டும். இத்தோடு அடியுரமாக ஒவ்வொரு குழிக்கும் 6:12:12 என்ற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக் கலவையை 100 கிராம் அளவுக்கு இடவேண்டும். மேலுரமாக பூக்கும் தருணத்தில் ஒவ்வொரு குழிக்கும் 10 கிராம் தழைச்சத்தை இடவேண்டும்.
பயிர் |
இடவேண்டிய சத்துக்கள் (கிராம் குழி ஒன்றிற்கு) | இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிராம் குழி ஒன்றிற்கு) | ||||
தழை | மணி | சாம்பல் | 10:26:26 | யூரியா | ||
சுரைக்காய் | விதைக்கும் போது குழி ஒன்றிற்கு | 6 | 12 | 12 | 60 | 0 |
30 நாட்களுக்குப் பின்னர் | 10 | 0 | 0 | 0 | 22 |
சுரைக்காய் சாகுபடி முறைக்கு ஏற்ற நீர் நிர்வாகம்:
நடவு செய்த பின் ஒரு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும். அதன் பிறகு 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்ற வேண்டும்.
களை நிர்வாகம் மற்றும் பின்செய் நேர்த்தி:
நடவு செய்த 20 மற்றும் 40-வது நாட்களில் களை நிர்வாகம் செய்ய வேண்டும்.
அதிக மழைக்காலங்களில் மூங்கில் குச்சிகளை நட்டு கொடிகளை ஏற்றிவிட்டால் காய்கள் அழுகி வீணாவதைத் தவிர்க்கலாம்.
சுரைக்காய் விவசாயம் – பயிர் பாதுகாப்பு:
வண்டுகள், பழஈக்கள் மற்றும் புழுக்களைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 50 இசி 1 மில்லி மீதைல் டெமட்டான் 25 இசி ஒரு மில்லி அல்லது பென்தியான் 100 இசி 1 மில்லி போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றுடன் ஒரு லிட்டர் நீர் கலந்து தெளிக்கவேண்டும்.
சாம்பல் நோய்:
இதனைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு டைனோகாப் 500 மில்லி அல்லது கார்பென்டைசெம் 500 கிராம் மருந்தைத் தெளிக்க வேண்டும்.
அடிச்சாம்பல் நோய் மேன்கோசெப் அல்லது குளோரோதலானில் மருந்தை 1 ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிப்பதால் அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
பூசணிவகைக் காய்கறிகளுக்கு தாமிரம் மற்றும் கந்தகத் தூள்களை ஒருபோதும் தெளிக்கக்கூடாது.
சுரைக்காய் விவசாயம் அறுவடை:
காய்கள் முற்றுவதற்கு முன் அறுவடை செய்யவேண்டும்.
மகசூல் : ஏக்கருக்கு 135 நாட்களில் 15 முதல் 20 டன் காய்களை அறுவடை செய்யலாம்.
குளிர்ச்சியை தரும் வெள்ளரிக்காய் சாகுபடி முறை மற்றும் பயன்கள்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.