வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஜாதிக்காய் சாகுபடி எப்படி செய்வது.? மற்றும் ஜாதிக்காய் பயன்கள்..!

Updated On: September 15, 2021 12:00 PM
Follow Us:
ஜாதிக்காய் சாகுபடி
---Advertisement---
Advertisement

ஜாதிக்காய் சாகுபடி முறை மற்றும் ஜாதிக்காய் பயன்கள்:

ஜாதிக்காய் ஒரு இயற்கை மருத்துவ குணங்கள் வாய்ந்தது, இந்த ஜாதிக்காய் பல ஆரோக்கிய நோய்களுக்கு சித்த மருத்துவ பொருளாக பயன்படுத்தபடுகிறது.

இந்த ஜாதிக்காய் காரச் சுவைகள் கொண்டது, வெப்பத் தன்மையானது. சிறு அளவில் ஜாதிக்காய் தினமும் உண்டுவர, இரைப்பை, ஈரல் ஆகியவை பலமாகும்; மனமகிழ்ச்சியை அளிக்கும்; ஆண்மைத் தன்மையைப் பெருக்கும், நடுக்கம், பக்கவாதம் ஆகியவை தீரும். செரிமானத்திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்பாக இருக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் மயக்கத்தை ஏற்படுத்தும்.

சரி இப்போது நாம் ஜாதிக்காய் சாகுபடி முறை மற்றும் ஜாதிக்காய் பயன்கள் பற்றி தெளிவாக படித்தறிவோ வாருங்கள்..!

லாபம் அள்ளி தரும் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி ..!

ஜாதிக்காய் சாகுபடி முறை:

இரகங்கள்:

ஜாதிக்காய் சாகுபடி பொறுத்தவரை, விஷ்வ ஸ்ரீ, கொங்கன் சுகந்தா மற்றும் கொங்கன் ஸ்வாட் ஆகிய இரகங்கள் சாகுபடி செய்ய ஏற்ற இரகங்கள் ஆகும்.

பயிரிடும் பருவங்கள்:

இதற்கு மிதமான சீதோஷ்ண நிலை தேவை. ஆனால், அதிகப் பனி கொட்டும் பகுதியில் வளராது. ஈரக்காற்று வீசும் பகுதிகளில் வளரும் தன்மை கொண்டது. அனைத்து மாதத்திலும் நடவு செய்யலாம். ஆனாலும் கார்த்திகை மாதம் நடவு செய்ய சிறப்பானது.

நிலம்:

ஜாதிக்காய் சாகுபடி பொறுத்தவரை, களிமண் கலந்த இருமண்பாடு நிலத்தில் நன்கு வளரும் தன்மை கொண்டது. மண்ணின் கார அமிலத்தன்மை 4.5 முதல் 7.5 வரை இருக்க வேண்டும்.

நிலம் தயாரிப்பு:

நிலத்தை நன்கு உழுது 2 அடி நீள அகல ஆழத்தில், குழிகள் எடுத்து ஒவ்வொரு குழியிலும் 2 கிலோ சாணம், 100 கிராம் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை மண்ணுடன் கலந்து இட்டு நிரப்ப வேண்டும்.

ஜாதிக்காய் மரங்களை சமவெளிப் பகுதிகளில் பயிரிட விரும்புவோர் தென்னைக்கு ஊடுபயிராக பயிரிட வேண்டும். ஏனெனில் ஜாதிக்காய் மரங்களுக்கு நிழற்பாங்கான சூழல் அவசியம்.

மண் இல்லாமல் இயற்கை விவசாயமா..? அதுவும் குறைந்த நீர் செலவில்..!

விதை:

ஜாதிக்காய் சாகுபடி பொறுத்தவரை, விதை மூலம் வளர்ந்த செடிகள் அல்லது ஓட்டுக்கன்றுகள் மூலம் நடவு செய்யலாம்.

விதைத்தல்:

ஜாதிக்காய் சாகுபடி முறையில் தயார் செய்துள்ள குழிகளில் கன்றுகளை குழியின் மையத்தில் நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்:

கன்றுகளை நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.

உரங்கள்:

பொட்டாசியம், யூரியா, வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை கலந்து செடி ஒன்றிற்கு 20 கிலோ என்ற அளவில் மூன்று முறை கொடுக்க வேண்டும். அல்லது ஆண்டுக்கு இரண்டு முறை, அடியுரமாக 30 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரம் கொடுக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:

களை நிர்வாகம்:

ஜாதிக்காய் சாகுபடி முறை பொறுத்தவரை, செடிகள் நன்றாக வளரும் வரை களை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:

ஜாதிக்காய் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தியுடையதால், நோய் தாக்குதல்கள் இருப்பதில்லை.

அறுவடை:

காய்கள் வெடிக்கத் தொடங்கும் போது அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்த காய்களில் இருந்து பத்ரியை தனியாகவும், காயைத் தனியாகவும் பிரித்தெடுக்க வேண்டும். பத்ரியை நிழலிலும், காயை வெயிலிலும் காய வைத்து சேமித்து, தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யலாம்.

மகசூல்:

10 வயதான ஒரு மரத்தில் இருந்து சராசரியாக 10 கிலோ ஜாதிக்காயும், 2 கிலோ பத்ரியும் கிடைக்கும்.

ஜாதிக்காய் பயன்கள்:

  1. ஜாதிக்காய் பாதியளவு உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி அதில் ஒரு அவுன்ஸ் தண்ணீர் வீதம் கலந்து குடிக்க காலரா முதலிய வாந்தி பேதி நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும்.
  2. முதியோர்களின் மூட்டு வலி, தசை வலி போன்ற பிரச்னைகளை நீக்குவதற்கு, ஜாதிக்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.
  3. ஜாதிக்காயை தூளாக அரைத்து அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால், உடல் சூடு குறைவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  4. ஜாதிக்காய் பொடியை பாலில் கலந்து குடித்தால், நன்றாக உறக்கம் வரும். மூளையின் செயல்பாட்டை தூண்டுகிறது.
  5. முகத்தில் ஏற்படும், பருக்கள், கிருமிகளை அறவே போக்கும் தன்மை இதற்கு உண்டு. ஜாதிக்காய் பொடியுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவினால், கிருமிகளை முழுமையாக நீக்கிவிடும்.
  6. ஜாதிக்காய் பொடியை, அன்றாடம் தலைக்கு பயன்படுத்தும் எண்ணெயில் கலந்து தேய்த்து வந்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

முளைக்கீரையில் இத்தனை பயன்களா??? பயிரிடும் முறை மற்றும் பயன்கள்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை