பாரம்பரிய நெல் வகைகள் பெயர்கள் | Parambariya Nel Vagaigal

Nel Vagaigal Names

நெல் வகைகள் மற்றும் அதன் பயன்கள் 

தமிழ் நாட்டில் நெற்களஞ்சியம் தஞ்சாவூர். இந்தியாவில் பெரும்பாலோனோரு நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசியை உணவாக பயன்படுத்துகின்றன.. தமிழ் நாட்டில் விவசாயிகளின் ஆணிவேராக நெற்பயிர்கள் இருக்கிறது. இந்தியாவில் 40,000 நெல் வகைகள் உள்ளன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மனிதர்களின் அத்தியாவசிய ஒரு பொருளாகும். முக்கியமாக அரசர்கள் ஆண்ட காலத்தில் சுமார் 400 வகையான நெற்பயிர்கள் இருந்தன என்பதை ஆச்சிரியமானதாக இருக்கிறது. அந்த வகையில் இப்பதிவில் நமது தமிழகத்தில் விவசாயிகள் 30 வகை பாரம்பரிய நெல்களை விவசாயம் செய்கின்றன அவற்றின் பெயர்கள் மற்றும் பயன்களை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாமா..!

நெல் வகைகள் பெயர்கள் | Nel Vagaigal Namesnel vagaigal list in tamil:

1. சிவன் சம்பா
2. பாசுமதி
3. கலியன் சம்பா
4. சுருங்குருவை
5. சிங்கார்
6. வாடன் சம்பா
7. நவரா
8. மாப்பிளை சம்பா வெள்ளை
9. பூங்கார்
10. பால் குடை வாழை
11. குடை வாழை
12. கல்லுருண்டை சம்பா
13. தங்க சம்பா
14. சிவப்பு கவனி இம்புருவ்டு
15. கொத்தமல்லி சம்பா
16. வெள்ளை குடை வாழை
17. வாழை பூ சம்பா
18. காட்டு சம்பா
19. ராஜபோகம்
20. இரத்தசாலி நெல்
21. வாலன் சம்பா
22. சுரங்குருவை
23. தேங்காய் பூ சம்பா
24. மிளகு சம்பா
25. நீலஞ்சம்பா
26. இலுப்பை பூ சம்பா
27. பிசினி
28. ரசகடம்
29. பொலி நெல்
30. மரநெல்

நெல் பயன்கள் | நெல் வகைகள் பெயர்கள்

கருப்பு கவுனி :

 • புற்றுநோயை தடுக்கிறது, இன்சுலின் சுரக்க வழி செய்கிறது

மாப்பிளை சம்பா:

 • நரம்பு மண்டலத்தை வலுவாக்கும்,அண்மைய அதிகரிக்கும்.

பூங்கார் நெல்:

 • பெண்களுக்கு சிறந்தது சுகப்பிரசவத்திற்கு உதவுகிறது, தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

குடை வாழை:

 • குடலை சுத்தப்படுத்தும், சத்துகளை தரும்

வாடன் சம்பா:

 • மன அழுத்தத்தை குறைக்கும், நல்ல தூக்கம் வரும் செய்யும்.

இலுப்பை பூ சம்பா:

 • பக்கவாதம் வராமல் தடுக்கும் கால் வலி சரியாகும்.

பிசினி அரிசி:

 • உடல் பருமன் குறைக்க இது பெரிதும் உதவுகிறது , மாதவிடாய் ,இடுப்பு வலி, சரியாகும்.

சீராக சம்பா:

 • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், அரிசியில் அதிகஅளவு இரும்பு சத்து நிறைந்துள்ளது.

அறுபதாம் குருவை:

 • முட்டுகள் எலும்புகள் பலமடையும்.

காட்டுயானம் அரிசி:

 • நிரழிவு நோய் மற்றும் மலசிக்கல் பிரச்சனைகள் குணமாகும்.

கார் அரிசி:

 • தோல் நோய்கள் குணமாகும்.

காளான் சம்பா:

 • இது உடலுக்கு மலை போன்ற சக்தியை தரும்.

மிளகு சம்பா:

 • பசியை உண்டாக்கும், வாதம் போன்ற பல விதமான பிரச்சனைகளை போக்கும்.

வாலான் அரிசி:

 • இந்த நெல் மந்தம், தளர்ச்சி முதலியவை குறையும். உடலுக்கு அழகும், போஷக்கையும் உண்டாக்கும்.

சீதாபோகம்:

 • இந்த அரிசி உடல் பலம், தேக பளபளப்பு, விந்து விருத்தி உண்டாக்கும். மேலும் அஜீரணத்தை குறைக்கும்.

அன்னமழகி:

 • இந்த அன்னமழகி நெல் இனிப்பு சுவை கொண்டது, பித்த வெடிப்பையும் போக்கும்.

சிவப்பு கவுணி:

 • இந்த நெல் அரிசி இதயத்தை பலப்படுத்தும், ஈறுகளை பலப்படுத்தும், இரத்த ஓட்டத்தை சமன்படுத்தும், மூட்டு வலியை குணமாக்கும்.

மணிச்சம்பா:

 • அளவுக்கு அதிகமாக சிறுநீரை குறைக்கும். குழந்தை, முதியவர்களுக்கு அதிக சுகத்தை உண்டாக்கும்.

கோரைச்சம்பா அரிசி:

 • நோய்களைக் குணப்படுத்தும். உடலிற்கு நல்ல குளிர்ச்சி இயல்பைத் தரும்.

சேலம் சன்னா அரிசி:

 • தசை நரம்பு, எலும்பு வலுவாகும்.
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம்