ரோஜா செடி பூ அடர்த்தியாக வளர டிப்ஸ்
நம்மில் பலருக்கு தோட்டத்திலோ அல்லது மாடி தோட்டத்திலோ அதிகமா ரோஸ் செடி வைத்து வளர்ப்பதற்கு மிகவும் பிடிக்கும். ஆனா நாம எவ்வளவுதான் ரோஸ் செடி வைத்து வளர்த்தாலும், சீக்கிரமாக இறந்து விடும். இல்லை என்றால் பூக்களே பூக்காது.
அதற்கவே ரோஸ் செடி வாங்கி வளர்ப்பதற்கு தயங்குவோம். இனி இந்த தயக்கம் வேண்டாம். இந்த பகுதியில் குறிப்பிட்டுள்ள சில டிப்ஸை உங்கள் ரோஸ் செடிக்கு (rose plant) செய்து வளர்த்து பாருங்கள். ரோஸ் செடி நன்றாக வளரும் மற்றும் செடியில் அதிகளவு பூக்களும் பூக்கும்.
![]() |
டிப்ஸ் 1:
- முதலில் நாம் ரோஸ் செடியில் (rose plant) பூக்கள் பறிக்கிறோம் என்றால் காம்புடன் மட்டும் பறிக்க கூடாது. அதனுடன் இரண்டு இலைகளை சேர்த்து பறிக்க வேண்டும். அப்போது தான் ரோஸ் செடியில் அடுத்த துளிர்கள் விட்டு நன்கு வளர ஆரம்பிக்கும்.
டிப்ஸ் 2:
- ரோஸ் செடியாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த ஒரு செடியாக இருந்தாலும் சரி செடிகளை வாங்கும்போது அதிகமாக துளிர்களை உள்ள செடிகளை மட்டும் தேர்வு செய்து வாங்கவும்.
- மேலும் ரோஸ் செடி வாங்கும் போது ஐந்து இலைகள் உள்ள செடிகளை தேர்வு செய்து வாங்கினால் ரோஸ் செடி நன்றாக வளரும்.
டிப்ஸ் 3:
- ரோஜா செடி உரம்:- ரோஸ் செடிக்கு இயற்கை உரமாக வாரத்தில் ஒரு முறையாவது சமையலறை கழிவுகளான டீ தூள், காபி தூள், வெங்காய தோல், பூண்டு தோல், முட்டை ஓடு மற்றும் மக்கக்கூடிய காகிதங்களை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் மற்றும் சிறுதளவு மணல் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு பிளாஸ்ட்டிக் பேனரில் வைத்து மூடி வைக்கவும்.
- ஒரு வாரம் வரை தினமும் காலை அல்லது மாலை வேளைகளில் ஒரு குச்சியால் கிளறி விடவும். ஒரு வாரம் கழித்து, இந்த கலவையை ரோஸ் செடிக்கு உரமாக இட்டு வந்தால் ரோஸ் செடி செழிப்பாக வளரும்.
டிப்ஸ் 4:
- ரோஸ் செடிக்கு வெறும் தண்ணீரை மட்டும் ஊற்றாமல் மண், ஊட்ட சத்துக்காக நம் வீட்டில் இருக்கும் பழைய சாதத்தின் நீரை மட்டும் வடிகட்டி தண்ணீராக ஊற்றலாம். இவ்வாறு ஊற்றுவதால் செடி நன்றாக வளரும்.
ரோஜா செடி பூ அடர்த்தியாக வளர டிப்ஸ் 5:
- நாம் தினமும் வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அவற்றின் தோலை தூக்கி எரிந்து விடுவோம்.
- இனி அவ்வாறு தூக்கி எரிய வேண்டாம். வாழைப்பழ தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இரவு முழுவதும் ஒரு பக்கெட் தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை ரோஸ் செடிக்கு ஊற்றி வந்தால் ரோஸ் செடி நன்றாக வளரும்.
இதையும் படியுங்கள் 👉 கட்டிங் மூலமாக ரோஜா செடி வளர்ப்பது எப்படி? |
டிப்ஸ் 6:
- ரோஸ் செடிகளுக்கு உரம் வைக்கப்போகிறோம் என்றால் அன்று முழுவதும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற கூடாது.
- அதே போல் செடிகளுக்கு உரம் வைக்கும் போது மாலை நேரத்தில் வைத்தால் அதிக பலன் கிடைக்கும்.
டிப்ஸ் 7:
- ரோஸ் செடிக்கு (rose plant) வாரம் ஒரு முறையாவது இயற்கை டானிக் ஊற்றுவதால் செடி நன்றாக வளரும் அதுமட்டும் இன்றி பூக்களும் அதிகளவு பூக்கும்.
இயற்கை டானிக் எப்படி செய்வது என்று இபோது நாம் காண்போம்.
- இரண்டு கிலோ கடலைப்பிண்ணாக்கு வாங்கி கொள்ளவும் மற்றும் ஒரு பெரிய பிளாஸ்ட்டிக் பேனரை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
- இந்த பேனரில் கடலை பிண்ணாக்கை கொட்டவும். பின்பு 10 லீட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- பின்பு அந்த பேனரை காற்று புகாத அளவிற்கு நன்றாக மூடி வைக்கவும். (காற்று உள்ளே சென்று விட்டால் அவற்றில் புழுக்கள் வைத்து விடும் எனவே காற்று புகாத அளவிற்கு பேனரை நன்றாக மூடிவைத்து கொள்ளவும்)
- ஐந்து நாட்கள் கழிந்து இந்த கலவையை திறந்து பார்த்தால் நன்றாக நுரைத்து இருக்கும். இந்த கலவையை ஒரு பக்கெட் அளவிற்று எடுத்து கொண்டு. 10 லீட்டர் தண்ணீரில் கலந்து ரோஸ் செடி மற்றும் அனைத்து செடிகளுக்கும் தண்ணீராக ஊற்றி வந்தால் ரோஸ் செடி நன்றாக வளரும்.
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |