மாடி தோட்டத்தில் தாமரை பூ வளர்ப்பு (How to Grow Lotus Plant at Home)..!

Advertisement

மாடி தோட்டத்தில் தாமரை பூ வளர்ப்பு (How to Grow Lotus Plant at Home)..!

சிலருக்கு பூ செடிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் இருக்கும். அந்த வகையில் மாடி தோட்டத்தில் தாமரை பூ வளர்ப்பு பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க. தாமரை பூ வளர்ப்பு பொறுத்தவரை தரமான விதைகளை தேர்வு செய்து வாங்க வேண்டும்.

அதாவது விதையின் ஓடு கடினமாக இருப்பதால் முளை விடுவதில் தாமதம் ஏற்படலாம், அல்லது சில சமயம் முளைக்காமலும் போகலாம். எனவே தாமரை பூ வளர்ப்பு முறைக்கு எப்படி விதை தேர்வு செய்ய வேண்டும். பின்பு அதனை பராமரிக்கும் முறைபற்றி இங்கு நாம் காண்போம் வாங்க.

ரோஸ் செடி நல்ல வளர்வதற்கு சில டிப்ஸ்..!

தாமரை பூ வளர்ப்பு (How to Grow Lotus Plant at Home) – விதை தேர்ந்தெடுக்கும் முறை:-

தாமரை பூ வளர்ப்புக்கு விதை தேர்வு செய்யும் முறை. ஒரு பாத்திரத்தை தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.

பின்பு அவற்றில் போட்டால் மிதக்கும் விதைகள் முளைக்கும் தன்மை இல்லாமல் இருக்கலாம் அவற்றை நீக்கி விட்டு தண்ணீரில் மூழ்கி இருக்கும் விதைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

ஒரே ரோஸ் செடியில் அதிக பூக்கள் பூக்க வேண்டுமா?

தாமரை விதையை தயார் செய்யும் முறை:-

ஓர் கனமான பொருளால் உள் இருக்கும் பருப்பு அடிபடாமல் ஓட்டினை மட்டும் கீரல் விழுமாறு உடைத்து கொள்ளவும்.

அல்லது விதையின் அடிப்பகுதி அல்லது பக்கவாட்டில் உப்பு காகிதம் அல்லது சொர சொரபான தரையில் விதையின் ஓட்டிற்க்கு அடுத்துள்ள பருப்பின் வெண்மை நிறம் தெரியும் வரை உரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இவ்வாறு தயார் செய்த விதைகளை ஒரு கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஓர் நாள் முழுவதும் வெய்யிலில் வைக்கவும் அல்லது சூடான நீர் ஊற்றி வைக்கலாம் கொதிக்கும் அளவிற்க்கு சூடான நீர் ஊற்ற கூடாது.

இவ்வாறு செய்வதினால் கடினமான தாமரை விதையின் ஓட்டினை மென்மையாக்கும்.

ரோஸ் செடிக்கு மண் கலவை தயார் செய்யணுமா? அப்போ இதை Try பண்ணுங்க..!

தாமரை விதையை முளைக்க வைக்கும் முறை:-

பின்பு அடுத்த நாள் நீரை வடிகட்டி சுத்தமான நீரை ஊற்றி வைக்க 3 முதல் 6 நாட்களுக்குள் விதை முளைவிட்டிருக்கும் போது நீரை மாற்றி வைக்கவும் அதன் பின் முதல் இலை வளர மூன்று முதல் நான்கு வாரம் ஆகும்.

தாமரை பூ வளர்ப்பு பொறுத்த வரை முதல் இலை வளர்ந்து வந்து விரியும் முன் ஒரு தொட்டி அல்லது பக்கொட்டில் களிமண் போட்டு முளைத்த விதையை வேர், தண்டு அடிபடாமல் நட்டு தொட்டி முழுவதும் தண்ணீர் ஊற்றி வைக்கவும்.

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம்
Advertisement