கட்டிங் மூலமாக ரோஜா செடி வளர்ப்பது எப்படி? How to grow rose from cuttings in tamil

Advertisement

கட்டிங் மூலமாக ரோஜா செடி வளர்ப்பது எப்படி? | How to grow rose from cuttings in tamil 

How to grow rose from cuttings in tamil:- வணக்கம் நண்பர்களே நம்மில் பலருக்கு வீட்டில் செடிகளை வளர்த்து, அதனை பராமரிக்க மிகவும் பிடிக்கும், அந்த வகையில் பலரது வீடு வாசல், மாடியில் மற்றும் தோட்டங்களில் பூ செடிகளை அதிகமாக விரும்பி வளர்ப்போம். பூ செடிகளை வளர்ப்பதில் ரோஸ் செடிகளுக்கே முதல் இடம் இருக்கிறது. இருந்தாலும் இப்போது எல்லாம் பூ செடி கடைகளில் ரோஸ் செடிகளை அதிக விலை விற்பனை செய்கின்றன. எனவே ரோஸ் செடிகளை வாங்குவதற்கு அதிக பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. இந்த பதிவில் மிக எளிமையான முறைகள் அதாவது ரோஜா செடி குச்சுகலிலிருந்து (கட்டிங்) சுலபமாக வளர்ப்பது எப்படி? என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம்.

இதையும் படியுங்கள் 👉 ரோஸ் செடி நன்கு வளர சில டிப்ஸ்..

கட்டிங் மூலமாக ரோஜா செடி வளர்ப்பது எப்படி? | How to grow rose from cuttings in tamil 

Rose cutting in tamil step: 1

கட்டிங் மூலம் செடிகளை வளர்ப்பதற்கு முதலில் ரோஸ் செடிகளின் தண்டுகளை மெல்லியதாக எடுக்காமல், மிகவும் தடிமனான ரோஸ் தண்டுகளை எடுத்து கொள்ளுங்கள். மீடியம் சைசில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.

Rose cutting in tamil step: 2

பின் நறுக்கிய ரோஸ் கட்டிங்கின் அடிப்பகுதியை மேல் காட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் 45 செண்டிமீட்டர் அளவில் சைடாக நறுக்கி கொள்ளுங்கள்.

Rose cutting in tamil step: 3

பின் ஒரு இன்ச் அளவிற்கு ரோஸ் செடியின் அடி பகுதியை கத்தியை பயன்படுத்தி மேல் காட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் ரோஸ் தண்டின் தோல் பகுதியை லேசாக சீவி கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள் 👉 ரோஜா செடிகள் தொடர்ச்சியாக பூக்கள் பூக்க 10 பயனுள்ள டிப்ஸ்..!

ஸ்டேப்: 4

இவ்வாறு நறுக்கிய ரோஸ் தண்டுகளை இப்பொழுது நாம் ரூட்டிங் ஹார்மோனில் 20 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். ரூட்டிங் ஹார்மோன் என்பது செடிகளின் வேர்பகுதிக்கு வளர்ச்சியினை தூண்டுவது ஆகும். ரூட்டிங் ஹார்மோன்களாக  கற்றாழை ஜெல், தேன், இலவங்கப்பட்டை தூள் ஆகியவற்றை பயன்படுத்தலாம். 

எனவே ஒரு பவுலில் தேவையான அளவு கற்றாழை ஜெல் அல்லது தேனை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் நறுக்கிய ரோஸ் தண்டுகளின் அடி பகுதியை வைத்து 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

ஸ்டேப்: 5

ரூட்டிங் ஹார்மோனில் 20 நிமிடங்கள் ரோஸ் தண்டு நன்றாக ஊறியதும், ஒரு  பூ தொட்டியில் 50% செம்மண் மற்றும் 50% தேங்காய் நார் கழிவு ஆகியவற்றை சேர்த்து தொட்டியை நிரப்ப வேண்டும், பின் அவற்றில் ரோஸ் தண்டுகளை நடவேண்டும்.

பின் தண்ணீர் சிறிதளவு ஊற்றிவிடுங்கள்.

ஸ்டேப்: 5

பின் ரோஸ் தொட்டியை ஒரு பாலிதீன் கவரில் நன்றாக மூடி விடுங்கள், அதாவது மேல் காட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் பாலிதீன் கவரில் மூடிவிடுங்கள். பின் 10 நாட்கள் வரை இந்த ரோஸ் தொட்டியை சூரிய ஒளி படாத இடத்தில் வைக்க வேண்டும்.

உருளைக்கிழங்கில் கூட ரோஸ் செடி வளர்க்கலாம் தெரியுமா உங்களுக்கு..!

ஸ்டேப்: 6

ரோஸ் தொட்டியினை 10 நாட்கள் கழித்து திறந்து பார்த்தால் சிறு சிறு துளிர்கள் விட்டிருக்கும். அதாவது மேல் காட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல்.

ஸ்டேப்: 7

பின் மறுபடியும் ரோஸ் தொட்டியை பாலிதீன் கவரில் மூடி விடுங்கள், இந்த சமயத்தில் பாலிதீன் கவரில் இரு இடங்களில் ஓட்டை போட்டு கொள்ளுங்கள். பின் 14-ம் நாள் ரோஸ் தொட்டியை திறந்து பார்த்தால் செடியில் தளிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்திருக்கும்.

ஸ்டேப்: 8

திரும்பவும் ரோஸ் செடியை பாலிதீன் கவரினால் மூடி, 18ம் நாட்கள் அன்று தொட்டியை திறந்து பார்த்தால் ரோஸ் செடியில் இலைகள் நன்கு வளர்ச்சி அடைந்திருக்கும். நன்றாக வேர்பிடிக்க ஒரு மாதங்கள் ஆகும். எனவே ஒரு மாதம் வர ரோஸ் செடியினை வேறு இடத்திற்கு இடம் மாற்ற கூடாது. அதே தொட்டியில் வைத்திருங்கள். வேண்டுமெனில் ஒரு மாதம் கழித்து செடியை வேறு தொட்டிக்கு மாற்றி கொள்ளலாம்.

அவ்வளவுதான் கட்டிங் மூலம் ரோஸ் செடியை வளர்க்கும் முறை. இந்த முறையை கண்டிப்பா ட்ரை செய்து  பாருங்கள் நன்றி வணக்கம்.

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> pasumai vivasayam in tamil
Advertisement